Jun 10, 2006

இடஒதுக்கீடு-இரவிஸ்ரீநிவாஸ் -Youth for Equality

ரவிஸ்ரீநிவாஸ் சமீபத்தில ஞானியோட எழுத்தை முன் வைச்சி ஒரு பதிவு போட்டிருக்காரு. அங்க அதுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். கொஞ்சம் பெருசா போனதால இங்க பதிவா.....


ரவி,
நீங்க எழுதுறதுக்கும் உங்களோட நிலைப்பாட்டுக்கும் மக்க நிறைய பேரு பதில் சொல்லி அசந்துட்டாங்க. நீங்க அசராம போட்டு தாக்கீட்டு இருக்கீங்க. திருப்பி திருப்பி ஒன்ன சொன்னா மத்தவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்தாலும் வரும்ன்ற அசைக்க முடியாத நம்பிக்கைன்னு நினைக்கிறேன். அதனால அதைப் பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்லை.

கடைசியில youthfor equality பத்தி சொல்லியிருக்கீங்க. அதைப்பத்தி மட்டும்

//இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் என்னென்ன என்பதை தெளிவாகக் எடுத்துரைத்திருக்கிறார்கள்.அவற்றை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்

http://www.youth4equality.org/charter-of-demand.jsp
http://www.youth4equality.org/expert-commission.jsp //

சரி என்ன தான் சொல்லியிருக்காங்கன்னு பாத்தேன். "பயங்கர தெளிவா" கோரிக்கையை குடுத்திருக்காங்க. இதை கோரிக்கைகளை, இடஒதுக்கீடை நீங்க ஆதரிச்சிருந்தீங்கன்னா புள்ளிவிவரமா போட்டு பிச்சி உதறீருப்பீங்க. ஆனா அந்த மாதிரி மேட்டரையெல்லாம் உங்களுக்கு துணைக்கு கூப்டுறதை பாத்தா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.சரி இவங்க என்ன தான் சொல்லியிருக்காங்க.


அவங்களோட கோரிக்கைகள்:

* SETTING OF A NON POLITICAL COMMISION TO REVIEW THE EXISTING RESERVATION POLICY It should be a non-political non-parliamentary commission with constitution, terms of reference and binding nature as described in the note attached.

அப்டிங்களா. அப்டி ஒரு கமிசன் போட்டு சொன்னா மட்டும் ஒத்துகுவாங்களாம/வீங்களா?? இல்லை கமிசன் போட்டா இன்னும் சில வருசங்களுக்கு இழுத்துக்கலாம்னா?

* INCREASE IN NUMBER OF SEATS
o Number of seats should be increased in each institute/college such that numbers of general category seats are not decreased at any point, in that particular institute, by the present policy or any other policy in the future.

இது வந்த வரைக்கும் லாபம்ன்ற கான்செப்டா. எண்ணிக்கையை கூட்டுனா தரம் குறைஞ்சிரும்னு எதுவும் சொல்லாத வரைக்கும் சந்தோசம். அப்ப தரம்ன்றதெல்லாம் சும்மா பம்மாத்து. எங்களோட ஒதுக்கீட்ல கைவைக்காதேன்ற கதறல் மட்டும்தான்.

o Till such time the total numbers of seats are increased, the reservation policy shall not be implemented and the academic year 2007 is not sacrosanct.

Time is the best solution ற புரிதலா? ரெண்டு மூணு வருசம் கழிச்சி முன்னேறும் இந்தியாவின் தடைகற்கள்ன்னு அப்ப எதுவும் பேசாமா வாழ்த்தி வரவேற்க போறாங்களாமா!!!!


o The increase in seats should lead to a proportionate increase in number of general category merit seats in each institution.

இதுக்கு எங்க ஒதுக்கீட்ல கை வைக்காதன்னு நேரா கேக்கலாம்ல.

o Number of seats in open merit should always remain at least 50.5% exclusive of all the reservations and quotas including SC/ST, OBC, Defense personnel, physically handicapped etc.

என்னா ஒரு பரந்த மனசு. ஆனா இதைப்பாத்த போனா போகுதுன்னு இடஒதுக்கீட்டை ஒத்துகிட்டு இருக்கற மாதிரி தெரியுது.

o Sequencing of the seats in each institution in each academic year should be done i.e. fill up of SC/ST first, then OBC, other reserved seats (if any) and thereafter general category seats.

OC ன்றதை other caste ன்னு அர்த்தம் வேணும்ன்றாங்களா. இவங்க கேக்கறமாதிரி வேணும்னா வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்னு கொண்டு வர்றதுக்கு கேக்கலாம். என்னோட ஆதரவும் உண்டு.

o Number of seats should not be increased until proper infrastructure is made in the colleges and adequate requirements met so that the quality does not suffer.

இதே மாதிரி புதுசா காலேஜ் ஆரம்பிக்கும்போது, மானேஜ்மெண்ட் சீட் பிரச்சனை வரும்போது சொல்லிருந்தாங்கன்னா சந்தோசப்படலாம். ஆனா இப்ப வயிறு குலுங்க சிரிக்கத்தான் முடியும்

o A technical committee comprising of members of the college itself should decide the possibility of increase in seats and if possible the amount of infrastructure and finances needed.

அதே காலேஜ்ல இருந்து!!!!.. உங்களுக்கே ஓவரா தெரியலையா. இவங்க சொல்ற காலேஜ்ல வாத்தியார்கள்லாம் வேற யாரையும் உள்ள விடாம முழு இடஒதுக்கீட்ல தான் வந்திருக்காங்கன்றதை மறந்துரச் சொல்றாங்களா.

o The reserved seats should be filled on the basis of "reasonable level of merit" which is defined as the students falling under the reserved seats should score at least 90 percent of marks scored by general category candidates in that particular entrance examination.

அப்புறம் வேற என்ன காரணமெல்லாம் வைச்சிருக்காங்க.

* EXCLUSION OF CREAMY LAYER
o Socio economic criteria to be set up and applied universally without any caste basis, which effectively excludes the affluent and those already having access to jobs and higher education.

இதுக்கு பேரு கம்யூனிசமாங்க(என்ன இசம்னு தெரியலை, நீங்களே தெரிஞ்சா சொல்லுங்க)....

இவங்க சமூக ஏற்றத்தாழ்வு பத்தி பேசுறாங்கன்னா எல்லாருக்கும் ஒரே சம்பளம்னு எதாவது புதுசா ரூல்ஸ் கொண்டு வர்றதுக்கு ஒத்து வருவாங்களான்னு கேட்டு சொல்லுங்க.

o A separate allocation of seats to be included in the proposed 27% to students coming from weak and poorer background and who do not come in any other reservation categories.

இன்னும் வேற என்ன சாக்கு போக்கெல்லாம் இருக்கு. இப்டி ஒவ்வொன்னா சொல்லிக்கிட்டு இருந்தா Main theme மறக்க வைச்சிரலாம்னா.


Youth for equality ன்ன உடனே நானும் சரி இட ஒதுக்கீடை மூர்க்கமா எதிர்க்கறவுங்க போல இருக்கு, பரவாயில்லை என்ன தான் சொல்றாங்கன்னு போய் பாக்கலாமேன்னு தான் போய் வாசிச்சேன். எல்லாம் தாங்கள் அனுபவிச்ச சலுகைகள் பறிபோகப் போகுதேன்ற கதறல் மட்டும் தான்.


இத வேற நீங்களும் பெருமையா சொல்லி லிங்க் வேற குடுத்திருக்கீங்க. வேற எதாவது உருப்படியா இருந்தா சொல்லுங்க ரவி.டெயில்பீஸ்: மத்த இடஒதுக்கீடு பத்தி(பாலினம்) பேசிருக்கீங்க. நீங்க அதுக்கு ஒரு முன்னேற்ற முண்ணனி ஆரம்பிச்சீங்கன்னா (!!) என்னோட ஆதரவு கண்டிப்பா உண்டு.

8 comments:

-/சுடலை மாடன்/- said...

பரவாயில்லை முனியாண்டி, இட ஒதுக்கீடு பற்றி இரவி சொல்லுற கருத்துக்களுக்கெல்லாம் சீரியஸா இன்னும் பதில் சொல்லிக்கொண்டிருக்கீங்க. இந்த விசயத்தில அவர் பாணியிலேயே மட்டையடியா பதில் கேள்வி கேட்கத் தோணுது. அவர் பாணியிலேயே அந்த சம-உரிமை-இளைஞர்களுக்கு ஒரு கேள்வி:

விமானம், பேருந்து, இரயில், திரையரங்கு இன்னும் எங்கல்லாம் இட ஒதுக்கீடு இருக்கோ அங்கல்லாம் இட ஒதுக்கீட்டை ஒழிச்சுட்டு, தகுதியடிப்படையில இடம் கொடுக்கலாமா? இங்க தகுதின்னா என்னங்க? - யாருக்கெல்லாம் முண்டி அடிச்சி பலசாலியா போய் ஏறி உக்காந்துக்க முடியுமோ அவங்கல்லாம் தகுதி அடிப்படையில் ஏறி உக்காந்துக்கட்டும். உடல் பலமும் தகுதிதானே?

நன்றி - சொ. சங்கரபாண்டி

Bala said...

நானும் உங்கள மாதிரித்தான். உங்க பதிவுக்கு மறுமொழி கொடுக்கனும்னு நினைச்சேன். பதிவு பெர்சாபோனதுனாலெ தனிப்பதிவு போட்டுட்டேன். இரவிஸ்ரீனிவாஸ் பதிவிலே ஒரிஜினல் போடுட்டேன்.

http://balablooms.blogspot.com/2006/06/youth-for-equality-6931.html

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி சங்கரபாண்டி.

பாலா இந்த பக்கம் வந்ததுக்கு நன்றிங்க.
உடுக்கை சத்தம்னு இல்லிங்க, காதை மூடிக்கிட்டா எந்த சத்தமுமே கேக்காதுங்க. அப்டியே கேட்டாலும், கேக்கலைன்னு சொல்றதுன்னு முடிவு பண்ணியாச்சின்னா....

ஒருவேளை(!) உண்மையிலயே கேக்காம போயிருந்ததுன்னா...

இடஒதுக்கீட்டைப் பத்தி தங்கமணியோட வலைப் பூவுல இருக்கற ஒரு பதிவு.
http://bhaarathi.net/ntmani/?p=212

இதுல கூடுமானவரைக்கும் உங்களோட எல்லா கேள்விகளுக்குமே பதில் இருக்கு


அப்புறமா இடஒதுக்கீடு ஏன் தேவைன்னு ரெண்டு பேராசிரியர்கள்(ஒருத்தரு IISc, இன்னொருத்தரு IIT) எழுதுனது.


http://www.theotherindia.org/education/reservation-1-what-are-the-justificat
ions.html
http://www.theotherindia.org/general/reservation-2-what-about-merit.html
http://www.theotherindia.org/reservation/reservation-3-some-concerns.html
http://www.theotherindia.org/caste/reservation-4-a-cost-benefit-analysis-by-
prof-ram-mohan.html

http://www.ambedkar.org/News/News051707.htm


இதுக்கப்புறமும் உங்களுக்கு பதில் வேணுமுன்னு நின்னீங்கன்னா உங்களை மாதிரியே நானும் மாங்கா அடிக்க வர்றேங்க

Anonymous said...

இரவி ஸ்ரீனிவாஸ்க்கு பதில் சொல்வதில் நானும் பங்கெடுக்க ஆசைப் படுகிறேன். பகுத்தறிவு மற்றும் இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் இருந்து வந்தும் அதன் கல்வியின் மற்றும் திறமையின் தரத்தில் எவருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. இந்திய அளவில் நடைமுறை படுத்தும் போது நிச்சயம் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.

அந்நிய முதலாளிகளுக்கு நம் வளத்தையெல்லாம் வாரி வழங்கும்போது நாட்டின் வளம் கொள்ளையடிக்கபடுவதை வானவேடிக்கையோடு வரவேற்பார்கள். வரிப்பணத்தில் படித்துவிட்டு அந்நியனுக்கு விலை போவார்கள். ஆனால் உள்நாட்டில் உரிய வாய்ப்பு சக மனிதனுக்கு வழங்க படுவது பற்றி வரும் போது போலியான சமூக அக்கறையோடு அதை எதிர்ப்பர். இதுதான் இவர்களது சமத்துவம். இவர்கள் ஹிட்லரின் வாரிசுகள். கோயபல்சின் சகோதரர்கள்.

நட.இரமேஷ்
vnram73@gamil.com

CrazyTennisParent said...

http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_114984409010914307.html

தருமி said...

இதைப் பற்றிய என் பதிவுகள்:
http://www.thisaigal.com/july06/dharumi.htm
http://dharumi.weblogs.us/2006/07/09/231
http://dharumi.weblogs.us/2006/06/05/227

- உடுக்கை முனியாண்டி said...

உங்களோட பதிவுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி

இந்த விதயத்துல எழுதப்பட்ட மத்த பதிவுகளையும் சேத்து வைக்கணும்னு நினைச்சிக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கேன். எப்ப முடியும்னு தெரியலை.

வவ்வால் said...

முனியான்டி விலாஸ்ல சாப்பிட்ட காரம் சாராமான சாப்பாடு போல இருக்கு உங்க பதிவு! அவங்கலாம் உடுப்பி ,ஆரிய பவன் வகைங்க இதெல்லாம் உறைக்காது!