Apr 13, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்- நம்பிக்(கை) கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்..

ஏப்ரல்-14 எப்டியும் வருசா வருசம் லீவு விடுவாங்க. என்னன்னு கேட்டா தமிழ் வருசப் பிறப்புன்னு சொல்லுவாங்க. இந்த லீவைத் தவிர வேறெதுவும் வருசப்பிறப்பைப் பத்தி தெரியாது. புதுசா துணி எடுக்கறது பலகாரம் பண்றதுன்னு எதுவும் வீட்லயோ இல்ல கிராமத்தில இருக்கற யார் வீட்டிலயுமோ இருக்காது. நாமளும் தமிழ் பேசுறோம், தமிழ் நாட்ல இருக்கோம் ஏன் தமிழ் வருசப் பிறப்பு கொண்டாடுறதில்லைன்னு கேட்டா, அதான் நாம பொங்கல் கொண்டாடுறோம்ல அப்புறம் என்ன இன்னொன்னு. நம்மள மாதிரி விவசாயக் குடும்பத்துக்கெல்லாம் பொங்கல் தான் எல்லாமேன்னு சொல்லிருவாங்க. அப்புறமா படிப்புக்குன்னு ஊரு விட்டு ஊரு மாறுனாலும் எங்கயும் யாரும் ஏப்ரல்-14 புது வருசத்தைக் கொண்டாடுன மாதிரி தெரியலை. கேட்டா, லீவு வுடுறாங்கல்ல அதை என்ஜாய் பண்றதை விட்டுப்புட்டு கேள்வி கேக்க வந்துட்டான்ன்னு தான் பதில் கிடைச்சது. இங்க வலையுலகத்துக்கு வந்ததுக்கப்புறமா தான் தெரியுது. சில பேரு அதை கொண்டாடுறாங்கன்னு. வாழ்க்கையே கொண்டாட்டங்கள் நிரம்பியதா இருக்கணும்னு நினைக்கறவன் நானு. அதனால ஏப்ரல்-14 ல் புத்தாண்டு கொண்டாடுறவங்களுக்காக என்னோட வாழ்த்து்.




இப்பல்லாம் பதிவு போட்டா திஸ்கி போடணுமாமில்ல. அதனால..

திஸ்கி1: இந்த வாழ்த்து சித்திரை 1 அல்லது ஏப்ரல்- 14 புத்தாண்டுன்னு நம்பி கொண்டாடுறவங்களுக்காக மட்டும் தான்

திஸ்கி2: இதை நான் கொண்டாடுனதில்லைன்றதுனால, நான் தமிழனான்னு யாருக்காவது சந்தேகம் வந்துச்சின்னா அவங்களுக்கு ஒரு தகவலா, எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்காவது பேசுறதுக்கும் எழுதறதுக்கும் வரும்.

8 comments:

SnackDragon said...

புத்தாண்டு வாழ்த்து.. அப்படியே உடுக்கை சவுண்டு ஒன்னு போட்டிருக்கலாம் இல்ல.

Anonymous said...

//எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்காவது பேசுறதுக்கும் எழுதறதுக்கும் வரும்.
//
ஆகா

--
சரி சரி


சாரா

Thangamani said...

நான் வாழ்த்து சொல்லனுமா கூடாதா?

நல்லது....

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்றும் எங்கள் ஊரில் (புதுகையில் ஒரு சிற்றூர்) கண்டிப்பாக பொங்கல் செய்வதும் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் உண்டு. ஆங்கிலப் புத்தாண்டு இன்னுமொரு நாள் போல் கழியும். தமிழ்ப் புத்தாண்டுக்குத் துணி எடுக்காததற்கு ஊரின் பொருளாதார நிலை ஒரு காரணம். மற்றபடி சித்திரைப் பிறப்பு என்பது முக்கியமான நாள் தான்

மாசிலா said...

உங்களுக்கும் எனதினிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உடுக்கை முனியாண்டி.

உண்மைத்தமிழன் said...

நானும் வாழ்த்து தெரிவிச்சுக்கிறேன். கூடுதல் திஸ்கி.. எனக்கும் தமிழைத் தவிர 'வேற' எதுவும் சத்தியமாகத் தெரியாது..

ஆதிபகவன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் முனியாண்டி. தமிழர்கள் பருவகால மாறுதல்களை விழாவாக கொண்டாடியவர்கள். அது போலத்தான் சித்திரையும் தமிழர்கள் கொண்டாடும் தினமாகவே இருந்திருக்கின்றது. பின்னர்தான் தமிழ்புத்தாண்டு என்று குழந்தை பிறந்திருக்கிறது. தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வதிலேருந்து இது சிலர் வசதிக்காக பிறந்த (அ) பிறப்பிக்கப்பட்ட ஒன்று என தெளிவாகும்.

ஆண்டுத் தொடக்கம் என்பதே சரியான ஒன்றாக இருக்கும். கல்தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ் பேசும் தமிழரின் ஆண்டுகள் மட்டும் அறுபதில் அடைபட்டு போனதோ. அதுவும் தமிழ்ப் பெயர்களே இல்லாமல் :-)

அனவருக்கும் ஸர்வஜித் தமிழ்????????????? புத்தாண்டு வாழ்த்துகள்:-))))))))))))))))))))