Apr 27, 2007

அனைவருக்கும் இலவச அகலப்பாட்டை இணைப்பா??!!

இன்னும் ஒரு ரெண்டு வருசத்தில இந்தியாவுல இருக்கற எல்லாருக்கும் இலவச அகலப்பாட்டை (2Mbps) குடுக்க முடியும்னு அரசாங்கம் திட்டம் போட்டிருக்காம். இந்த திட்டத்தை அமல் படுத்தறதுக்கு ஏற்கனவே தொலை தொடர்பு நிறுவனங்கள் வரியா கட்டியிருக்கற 9000ச் சொச்சம் கோடியில ஒரு சின்ன அளவுலயே இந்தத் திட்டத்தை செயல் படுத்த முடியும்னு நினைக்கிறாங்க.
ஏற்கனவே அமெரிக்காவுல சில நகரங்கள்ல இந்த மாதிரி இலவச இணைப்பு இருக்கு. ஆனா முழுசா ஒரு நாட்டுக்கே இலவச இணைப்புங்கும் போது கொஞ்சம் பயம் கலந்த ஆச்சரியம் தான் வருது. இது பண்ணமுடியுமா முடியாதா, சரியா தப்பாங்கறத விட்டுட்டு, இந்தியாவுல அதிகமா இருக்கற தகவல் தொழில் நுட்ப பிளவுக்கு இது ஓரளவுக்கு தீர்வா இருக்கும்ணு தோணுது.

ஏற்கனவே அலைபேசித் துறையில ஏற்பட்ட முன்னேற்றத்தால இன்னைக்கு அலைபேசிங்கறது யாருக்குமே ஒரு பெரிய பொருட்டா இல்லாம ஒரு அத்தியாவசியமான ஒன்னா மாறிருக்கு. முக்கியமா அலைபேசிங்கறது ஒரு பெரிய சுமையா இல்லாம இருக்கு. கிராமத்துக்கு ஒரு பொதுத் தொலைபேசி இணைப்பு வெணும்னு தொலைபேசி அலுவலகத்தில போய் வருசக்கணக்குல சண்டை போட்டதெல்லாம் இன்னும் நல்லாவே ஞாபகம் இருக்கு. ஆனா இன்னைக்கு அதே ஊர்ல காட்டு வேலைக்கு போறவங்க கூட கஞ்சிப் பானையோட சேத்து ஒரு அலைபேசியையும் தூக்கிட்டு போறாங்க.

இந்த மாதிரியான முன்னேற்றம் அகலப்பாட்டை இணைப்புக்கு ஏற்கனவே வந்திருச்சி. அகலப்பாட்டை, அகலப்பாட்டைன்னு, 256 kbps இணைப்பை தான் கூவிக் கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க. அப்ப சிரிப்பா கூட இருந்தது. இது சில மாசங்கள் முன்னாடி வரைக்கும் இருந்த கதை. ஆனா இப்போதைய நிலைமையே வேற. பிஎஸ்என்ல்ல தரப்படுற குறைந்த பட்ச இணைப்பே 2 Mbps, அதுவும் மாசம் 250 ரூபாய்க்கு. எங்கப்பா இங்க கனடாவுல என்னோட இணைப்பு 1 Mbps ன்னா சிரிக்கறாரு. இதெல்லாம் சேத்து வைச்சி பாக்கும் போது இலவச இணைப்பு சாத்தியம்னு தான் தோணுது. பாக்கலாம்.
திஸ்கி: தன்னோட குடிமக்களுக்கு சரியான குடிதண்ணீர் கூட தர முடியாத தேசத்துக்கு இதெல்லாம் தேவையில்லாதது; இது ஓசி கிடையாது, மக்களோட வரிப்பணம், நடுத்தர வர்க்கம் வரியா கட்டுறதை இப்படியெல்லாம் அரசியல்வாதிங்க கூத்தடிக்கறங்கான்னு ஏற்கனவே சிலர் குமுற ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா என்னளவில இந்த மாதிரியான ஒரு திட்டத்தை நான் வரவேற்கிறேன்.

8 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஏங்க, எல்லோரும் பட்டை போடுற சூட்டுல நீங்களும் பட்டை போட்டுட்டீங்களா? :-) அது 'பாட்டை'ங்க.

நல்ல திட்டம் தான். ஒரு பெரிய மாற்றத்திற்கு இது உதவும்னு நானும் நெனைக்கிறேன்.

Thangamani said...

எந்தத் தகவல், செய்தி, மக்கட் தொடர்பு முயற்சிகளும் இந்தியாவுக்கு நல்லது என்றே நினைக்கிறேன்.

நன்றி

- உடுக்கை முனியாண்டி said...

செல்வா,

எதோ என்னால முடிஞ்சது.
அகலப்பட்டை தான் நான் சரியான பதம்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். திருத்தினதுக்கு நன்றி.

நன்றி தங்கமணி,

Anonymous said...

இந்தியாவை நேசிக்கும் ஒருவன் என்ற வகையில் இந்தியாவின் இந்த அபாரமான வளர்ச்சி சந்தோசமாகவே இருக்கிறது. ஆனாலும் நாளாந்த உணவுக்காக எலிக்கறியும் எலிப்பொந்திலிருந்து எடுக்கும் கேள்வரகில் கஞ்சியும் சாப்பிடும் மக்களையும் (இதை நான் சொல்லல்ல, ஜுனியர் விகடன்தான் சொல்லுது) கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்களன் சார்.

தமிழ்பித்தன் said...

இந்த வரிப்பணத்தில் ஒரு நேர வயிற்றுக்கு கும்மியடிக்கிற சனத்தின் வரியும் அடங்கும் அப்படி ஏழையின் வயிற்றை அடித்து நடுத்தர வர்க்கத்துக்கு கொடுக்க வேணுமா?
இது தர்மமாகுமா? சந்தோசமாகுமா?
ஆனால் வலைப்பதிவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன் காரணம் அனைவரும் நடுத்தர வர்க்கத்தினரே
உலகிலே அடிப்படை வசதிகள் ஏதுமற்ற வகையில் வாழ்கின்ற மக்களை அதிமாக கொண்ட நாடு இந்தியா?
""உண்டி கூளுக்கு அழுதிச்சாம்
கொண்டை பூவுக்கு அழுதிச்சாம்""

Anonymous said...

//பிஎஸ்என்ல்ல தரப்படுற குறைந்த பட்ச இணைப்பே 2 Mbps, அதுவும் மாசம் 250 ரூபாய்க்கு. எங்கப்பா இங்க கனடாவுல என்னோட இணைப்பு 1 Mbps ன்னா சிரிக்கறாரு.//

நீங்கள் சொல்வது சரி இல்லையே என்று தோனுகிறது. என் வீட்டில் மாத வாடகை ரூ250 க்கு BSNL தருவது 256kps speed தானே.

நீங்கள் சொல்வது போல் ரூ 250 க்கு 2mpbs speed என்றா சொல்கிறீர்கள்?? 2mpbs வரை கேட்டால் bsnl தருவார்கள் ஆனால் ரூபாய் 250 க்கு அல்ல. விவரம் தருவீர்களா?? அல்லது நான் தான் புரியாமல் சொல்கிறேனா??

அன்புடன்
அசலம் ஒன்

Anonymous said...

i think 2 mbps is available for rs.250. but im not sure.

- உடுக்கை முனியாண்டி said...

அசலம் ஒன்,
256 Kbps இணைப்பை சில மாசங்களுக்கு முன்னாடி 2 Mbps இணைப்பா மாத்தி விட்டுட்டாங்க. தரவிறக்க அளவும் 950 MB யா கூட்டிருக்காங்க.

அது தொடர்பான சுட்டிகள்

http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm
http://www.rediff.com/money/2006/dec/21bsnl.htm