May 3, 2007

இந்திய வலைப்பதிவுலகம் - 0


இன்னைக்கு எதோ ஒரு ஆர்வத்தில (இருக்கற வேலைய செய்யுறதுக்கு உள்ள
சோம்பேறித்தனம்!!!) தமிழை தாண்டி இந்திய வலைப்பதிவுலகம் எப்படி
இருக்குன்னு பார்க்கற ஒரு ஆர்வம் வந்துச்சி.

எதாவது ஒரு எடத்துல இருந்து ஆரம்பிக்கணுமில்லை. அதனால முதல்ல
இண்டிபிளாக்கீஸ் போனேன். ஒவ்வொரு வருசமும் தமிழ் வலையுலகத்தில சலசலப்பை
கொண்டு வர்ற தேர்தலை நடத்துற அதே இண்டி ப்ளாக் விருதுகள் தேர்வை
நடத்துறவங்க தான்.

இதுல மொழி வாரியான தேர்வுகள் நடந்தது 6 மொழிகளுக்கு மட்டும் தான்.


1. ஹிந்தி

2. மராத்தி

3. கன்னடா

4. தெலுங்கு

5. மலையாளம்

6. தமிழ்

(அப்ப மீதி இருக்கற பெங்காலி, குஜராத்தி, ஒரியா, பீகாரி மாதிரி மொழிகள்ல வலைப்பதிவுகளே இல்லையா !!!!)

இதுல ஆங்கிலத்தில எழுதற பதிவுகளையும் சேத்து 7 ன்னு வைச்சிக்குவோம்.

(நம்மூர்ல இருக்கற எல்லாரும்  பிரிட்டீஷ்காரங்களா  தங்களையும் நினைக்க
ஆரம்பிச்சிட்டதால  தமிழ் தெரியுதோ இல்லையோ இங்கிலீஸ் தெரியும். அதனால் 
நம்ம மக்கள் இங்கிலீஸ்ல எழுதுறது தான் அதிகமா இருக்கும்னு தைரியமா நம்பலாம்.)


முதல்ல தமிழ்.

தமிழ்மணத்தோட  பக்கத்தில இருந்து

மொத்தம்:
1869


அடுத்து மலையாளம் கேரளா பதிவர் பக்கத்தில இருந்து
மொத்தம்(மலையாளத்தில மட்டும்): சுமாரா 150தெலுங்கு கூடாளி திரட்டி
மொத்தப் பதிவுகள் 244
கன்னடம் சம்பாதா திரட்டி
சுமாரா 150


மராத்தி எனக்கு தெரிஞ்சி திரட்டி எதுவும் இல்லை


இந்தி நாரதர் திரட்டி (!!!??)

எல்லாமே இந்தியப் பொதுமொழியாம்(!!) இந்தியில இருக்கறதால எண்ணிக்கை எனக்கு தெரியலை. தெரிஞ்சவுங்க  படிச்சி சொல்லுங்க, சரியா.


இப்ப இங்கிலீபீஸ்ல இருக்கற திரட்டிகள்

1. காமத் - சுமாரா 150

2. ப்ளாக்ஸ்டீரிட் -- சுமாரா 950


இந்தியபதிவாளர்கள்
பட்டியல் 1050+

சமீபத்தில நடந்த சர்வே படி இந்தியாவுல மொத்தம் 4 கோடிப் பேர் இணையத்தை
உபயோகிக்கறாங்களாம். அதுல தோராயமா 1 இலட்சம் பேர் வலைப்பதிவர்களா
இருக்காங்கன்னு சர்வே சொல்லுது. சர்வே கூகுள் ப்ளாக் தேடலை அடிப்படையா
வைச்சி நடத்துனதா சொல்றாங்க. எதாவ்து ஒரு காரணத்துக்காக இந்தியான்னு
எழுதினாலே கூகுள் அந்தப் பதிவையும் இந்தியப் பதிவா கணக்கில எடுத்துக்கும்.
அதனால இதை எந்தளவுக்கு நம்ப முடியும்னு தெரியல.மத்த வலைப்பதிவு நண்பர்கள்
தோராயம 7000த்திலருந்து 10000 பதிவர்கள் வரைக்கும் இருக்கலாம்னு
சொல்றாங்க. இது மாநில மொழிப்பதிவர்களை சேத்தா சேக்காமலையான்னு தெரியலை.
எப்படி இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரையில இப்போதைக்கு தமிழ் பதிவர்கள்
தான் உச்சத்தில இருக்காங்க.

இந்த ஒரு நிலைக்கு காரணம் தமிழ் பதிவுகளை ஆரம்பத்திலருந்தே ஒருங்கிணைக்க
முடிஞ்சதால தான். ஒரு எடத்துல இருந்து எல்லாப் பதிவுகளையும் பாக்க
முடியுதுன்ற ஒரு வசதி உண்மையிலயே ஒரு மிகப்பெரிய வசதி தான். எல்லாத்தையும் விட நம்ம மக்களுக்கு தமிழ் மேல இருக்கற காதலும் முக்கியமானது. மத்த
மொழிகள்லயும் திரட்டிகள் இருக்குன்னாலும் இந்தளவுக்கு விரிவானதா இல்லை.
அதோட  இந்தத் திரட்டிகள் எல்லாம் சமீபத்தில ஆரம்பிக்கப்பட்ட திரட்டிகள்.

நான் சொல்லியிருக்கறது தவிர இன்னும் சில திரட்டிகளும் இருக்கு. அதுல முக்கியமானது

 இந்தியன்பேட்

இது அதிகமான பேரால வாசிக்கப்படுது. அதுக்கு 'பெரியவர்களுக்கானவை'ன்ற ஒரு தனிப்பக்கம் இருக்கறதால தான்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்குஅப்புறம் ஒரு இந்திய வலைத்தள வழங்கி ibibo கம்பெனி வலைப்பதிவு ஆரம்பிச்சி நல்லா எழுதறவங்களுக்கு பரிசெல்லாம் குடுக்கறாங்க.


அடுத்து நேரம் கிடைக்கும்போது இன்னும் கொஞ்சம் விரிவா...

4 comments:

Anonymous said...

//அடுத்து நேரம் கிடைக்கும்போது இன்னும் கொஞ்சம் விரிவா...//

அடுத்தடுத்து நேரம் கிடைக்கட்டும்னேன்.

தொடராப் போடுர உத்தேசமோ?.

சாரா.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது போன்ற புள்ளிவிவரம், reviewவ தான் தேடிக்கிட்டு இருந்தேன். தொகுத்துத் தந்ததற்கு நன்றி.

மா சிவகுமார் said...

உடுக்கை,

கலக்கலான தகவல்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

Boston Bala said...

தொகுத்தளித்தமைக்கு நன்றி.

இந்தியாவில் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆங்கிலப் பதிவுகள் ஐந்தாயிரத்தையாவது தாண்டும் என்று நினைக்கிறேன். கல்லூரி மாணவர்கள், சேவை நிறுவனங்களில் பணிபுரிவோர், மேற்கத்திய நாடுகளில் குடிபுகுந்தோர், தொழில்நுட்பம் சார்ந்து மட்டும் எழுதுவோர், என்று விரிவாக பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

ஒருவரே பல பதிவுகள் வைத்திருந்தால் (தமிழுக்கும் இது பொருந்தும்) எவ்வாறு கணக்கெடுப்பது? எண்ணிக்கையில் குறைவெனினும், திரட்டிகளில் சேராத பதிவுகளைக் கண்டுபிடித்தல் எப்படி?

---தமிழ் பதிவுகளை ஆரம்பத்திலருந்தே ஒருங்கிணைக்க முடிஞ்சதால தான். ஒரு எடத்துல இருந்து எல்லாப் பதிவுகளையும் பாக்க முடியுதுன்ற ஒரு வசதி உண்மையிலயே ஒரு மிகப்பெரிய வசதி தான். எல்லாத்தையும் விட நம்ம மக்களுக்கு தமிழ் மேல இருக்கற காதலும் முக்கியமானது.---

பொன்னெழுத்துக்களில் பொறிக்கப் படவேண்டியவை.

ஆங்கிலப் பதிவுகள் ஓரிடத்தில் திரட்டப்படுவது குறைவு. எண்ணிக்கையினால் இயலாத காரியமும் கூட. டெக்னொரட்டி போன்ற திரட்டிகளில் குறிச்சொல் மூலமும், அலெக்சா போன்ற பட்டியல் பக்கங்களில் வகைப்படுத்தல் மூலமும், ஸ்டம்பிள் அபான் போன்ற சமூக அமைப்புகளில் பரிந்துரைகளின் மூலமும் சென்றடையவேண்டிய நிலை.

அடுத்த பகுதிகளை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன்.