ஏப்ரல்-14 எப்டியும் வருசா வருசம் லீவு விடுவாங்க. என்னன்னு கேட்டா தமிழ் வருசப் பிறப்புன்னு சொல்லுவாங்க. இந்த லீவைத் தவிர வேறெதுவும் வருசப்பிறப்பைப் பத்தி தெரியாது. புதுசா துணி எடுக்கறது பலகாரம் பண்றதுன்னு எதுவும் வீட்லயோ இல்ல கிராமத்தில இருக்கற யார் வீட்டிலயுமோ இருக்காது. நாமளும் தமிழ் பேசுறோம், தமிழ் நாட்ல இருக்கோம் ஏன் தமிழ் வருசப் பிறப்பு கொண்டாடுறதில்லைன்னு கேட்டா, அதான் நாம பொங்கல் கொண்டாடுறோம்ல அப்புறம் என்ன இன்னொன்னு. நம்மள மாதிரி விவசாயக் குடும்பத்துக்கெல்லாம் பொங்கல் தான் எல்லாமேன்னு சொல்லிருவாங்க. அப்புறமா படிப்புக்குன்னு ஊரு விட்டு ஊரு மாறுனாலும் எங்கயும் யாரும் ஏப்ரல்-14 புது வருசத்தைக் கொண்டாடுன மாதிரி தெரியலை. கேட்டா, லீவு வுடுறாங்கல்ல அதை என்ஜாய் பண்றதை விட்டுப்புட்டு கேள்வி கேக்க வந்துட்டான்ன்னு தான் பதில் கிடைச்சது. இங்க வலையுலகத்துக்கு வந்ததுக்கப்புறமா தான் தெரியுது. சில பேரு அதை கொண்டாடுறாங்கன்னு. வாழ்க்கையே கொண்டாட்டங்கள் நிரம்பியதா இருக்கணும்னு நினைக்கறவன் நானு. அதனால ஏப்ரல்-14 ல் புத்தாண்டு கொண்டாடுறவங்களுக்காக என்னோட வாழ்த்து்.

இப்பல்லாம் பதிவு போட்டா திஸ்கி போடணுமாமில்ல. அதனால..
திஸ்கி1: இந்த வாழ்த்து சித்திரை 1 அல்லது ஏப்ரல்- 14 புத்தாண்டுன்னு நம்பி கொண்டாடுறவங்களுக்காக மட்டும் தான்
திஸ்கி2: இதை நான் கொண்டாடுனதில்லைன்றதுனால, நான் தமிழனான்னு யாருக்காவது சந்தேகம் வந்துச்சின்னா அவங்களுக்கு ஒரு தகவலா, எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்காவது பேசுறதுக்கும் எழுதறதுக்கும் வரும்.