நாங்க மட்டும் வீணாப் போனா போதுமா, நீயும் எதாவது எழுத ஆரம்பின்னு இழுத்து விட்ட நண்பர்களுக்காக....
பெங்களூர் குளிரெல்லாம் என்ன பெரிய குளிரு, அப்டின்னு சட்டையில பட்டனை கழட்டி விட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தவனை, ஒரு பெரிய தார்ப்பாய் கோட்டு வாங்கி குடுத்து பனி பறக்கிற வனத்துக்கு, விட்டது தொல்லை அப்டின்னு பேக் பண்ணி அனுப்பி வச்ச நண்பர்களுக்காக.....
எப்டியும் 15 நாளைக்கு ஒருதரமாவது போன் பண்ணு அப்டின்னு feel அடிச்ச நண்பர்களுக்காக.....
இப்டியே எல்லாம் ஒரே எடத்துல குப்பை கொட்டினா எவ்வளவு நல்லா இருக்கும் அப்டின்னு அதுக்கு எதாவது கொறைஞ்ச பட்ச வழியாவது இருக்கானு தேடுன நண்பர்களுக்காக.....
நீ பேசனும்னு நினைக்கிறப்ப, ஒங்கூட பேசுறதுக்கே ஆள் கிடைக்காம தவிக்கப் போறேன்னு சாபம் விட்டவங்களுக்காக ....
தனியொருவன்
தலை நிமிர
தன் கீழுள்ளோர்
தமைப் பழிக்கும்
தன்மை ஒழிப்போம்.......
அப்டினு எழுதி ஒரு விதமான அதிர்ச்சியெக் குடுத்துட்டு இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியாமப்போனவங்களுக்காக...
சந்துல போய் ஒண்ணுக்கு அடிக்கப் போய்ட்டு வந்ததையே, ஒரு மணி நேரத்துக்கு கதையா சொல்ல முடிஞ்ச நண்பர்களுக்காக....
அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காகன்னு சொல்லிக்கிட்டு..
தானும் ஒரு மூலையில இருக்கேன்னு தன்னோட இருப்ப சொல்றதுக்காக
வந்துட்டான்........
முனியாண்டியும் வலைப்பூவுக்கு வந்துட்டான்.....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாங்க முனீஸ் :))
வாங்கப்பா வாங்க!!
ஆன்லைன் முனியாண்டி விலாஸ்!!
//எப்டியும் 15 நாளைக்கு ஒருதரமாவது போன் பண்ணு அப்டின்னு feel அடிச்ச நண்பர்களுக்காக.....//
அப்படியா!
Post a Comment