Feb 18, 2006

தெளிஞ்சிருச்சி: இன்னும் நாலு போடுங்க

ஒதை வாங்கிட்ட்டு இருக்கற ஒருத்தன்கிட்ட நாலு விரலை காட்டி கேட்டுட்டு அவன் பதில் சொன்னதுக்கப்புறம், டேய் இவனுக்கு தெளிஞ்சிருச்சி இன்னும் நாலு போடுங்கடா அப்டின்னு பேசுற மணிவண்ணனோட இந்த டயலாக் இப்பல்லாம் அடிக்கடி ஞாபகம் வருது.


ஒன்னுமில்லைங்க, இங்க கனடால இப்ப நான் இருக்கற இடத்தோட பருவநிலை அந்த லட்சணத்தில இருக்கு. பனி பெய்யும், அப்புறம் மழை பெஞ்சி பனியெல்லாம் உருகும். ரோடெல்லாம் தெளிஞ்சிருச்சின்னு நினைக்கும் போது மறுபடி பனி பெய்ய ஆரம்பிச்சிரும். தொடர்ந்து ரெண்டு மூனு நாளைக்கு கூட அந்த பனி தாங்குறதில்லை. சாதாரணமா ஜனவரில குளிர்காலம் இங்க. அதாவது -15 C யை ஒட்டியே தான் குளிர் இருக்கும். -25 தாண்டி சகஜமா போகும். அதனால கூடுமானவரைக்கும் எப்பவும் பனி போர்த்தி தான் இருக்குமாம். ஆனா இந்த தடவை இது தாறுமாறா போய்கிட்டு இருக்கு. ஒரே நாள்ல கொஞ்ச நேரத்தில +10 ல இருந்து -10 வரைக்கும் பின்னி எடுத்துக்கிட்டு இருக்கு. காலையில வீட்டை விட்டு போகும்போது +10 இருந்திச்சின்னா ரெண்டு மணி நேரம் கழிச்சி வெளியில பாத்தா பனி பெய்ஞ்சிகிட்டு இருக்கும். சரின்னு போய் வேலையப்பாத்துட்டு சாயங்காலம் கிளம்பற நேரத்துக்கு மழை பெய்ய ஆரம்பிக்கிது. ஆனா என்ன கூடுமானவரை ஜீரோவுக்கு பக்கத்திலயே தான் இருக்கு. அதனாலா சந்தோசமா வாக்கிங்(!) எல்லாம் போக முடியுது.





நான் இங்க வந்த முதல் வாரத்தில ஆபிஸ்ல மக்க கேட்டாங்க முனியாண்டி, நீ ஸ்கீயிங் போயிருக்கயான்னு. நம்ம ஊரைப் பத்தி தெரியாதில்ல அவங்களுக்கு. படம் போடுறதுக்கு சரியான வாய்ப்புன்னு மணல்லயும் வைக்கப் போர்லயும் சறுக்கி விளையாடுன நம்ம மகாமித்யங்களை எல்லாம் அவுத்து விட வேண்டியதாயிருச்சி. பனியை கண்லயே பாத்ததில்லைன்னு சொன்னா நம்ப மாட்டேன்றாங்க.அவங்களும் எம்மேல பாவப்பட்டு (!) சரி இந்த வாரக் கடைசியில நாம ஸ்கீயிங் போவோம்னு பிளான் எல்லாம் ரெடி பண்ணாங்க. பாத்தா கடைசியில மழை பெய்ஞ்சி ஸ்கீயிங் ரிசார்ட்டையே அன்னைக்கு மூடிட்டாங்க. ஒன்னுமில்லை இருக்கிற ஐஸ் எல்லாம் கரைஞ்சி போயிருச்சாம்.




இது மாதிரி ஒரு தடவை இல்லை. நாங்க பிளான் பண்ற ஒவ்வொரு வாரமும் இந்த மாதிரி தான் ஆகிட்டு இருக்கு. எல்லாம் என்னைய பிடிச்சி காய்ச்சி எடுக்கிறாங்க. ஏண்டா வரும்போது ஒங்க ஊர் சூரியனை பொட்டி கட்டி கொண்டு வந்துட்டயான்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து தலைய திங்கிறாங்க. கடைசியில இப்பல்லாம் யாரும் ஸ்கீயிங் பத்தி வாயைத் திறக்கறதே இல்ல. அதனால முனியாண்டி யாருக்கும் ஸ்கீயிங் கதை சொல்ல முடியாம போய்கிட்டு இருக்கு.



இன்னும் நிலைமை மாறலை. போன வாரம் கூட திடீர்னு (சின்ன) பனிப்புயல் அடிக்கப் போகுதுன்னு எல்லாரும் பிலிம் காட்டிக்கிட்டு இருந்தாங்க. நானும் ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு மதியம் ரெண்டு மூணு மணி வரைக்கும் ரொடெல்லாம் பளிச்சுன்னு இருந்திச்சி. ஆனா சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் ரோடெல்லாம் 20-30 செமீ பனி. மறுநாள் காலையில ரோட்ல நடக்க முடியலை. அப்ப எடுத்த படங்கள் இங்க. இதுக்கப்புறம் ரெண்டு நாள்ல மழை பெஞ்சி எல்லாம் கரைஞ்சி போயிருச்சி!!!

8 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்தக் காலைல +10 சாயங்காலம் -10 - குளோபல் வோர்மிங்.. அதைப்பத்தி புலம்பிட்டே இருக்கலாம்..

நீங்க உங்களோட வெயிலைக் கொண்டு வந்திருக்கீங்கன்னா, இன்னொருத்தர் வரும்போது பனிப்புயலைல்ல கொண்டு வந்திருந்தார். சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்..

உங்க பதிவைத் திறக்கிற நேரமாப்பாத்து இங்க, செய்தி வாசிச்சுட்டு இருக்காங்க. நேத்திக்கு இங்க, மொன்ரியல்ல பயங்கர காத்தும் குளிரும். டிரெயின்(கூட்ஸ் வண்டிதான்) சாஞ்சிருக்கு. அதுவும் பாலத்துக்கு மேல போகும்போது.. :( லாரிங்க - 18 டன் லாரிங்க. சும்மா லாரிங்க இல்ல. அதெல்லாம் குடை சாஞ்சிருக்கு. மரங்களுக்கு என்ன ஆச்சுன்னு நான் சொல்லத் தேவையில்ல. நேத்திக்கு காலைல ஃப்ரீசிங் ரெயின். 0க்கு பக்கத்தில இருந்தது சாயங்காலம் -16 c (என்ன -30c மாதிரி இருக்கும்). இன்னிக்கும் மைனஸ் முப்பதுதான். நாளைக்கு ஆகக்கூடிய குளிர்நிலை -4 cன்னு சொல்றாங்க.

புலம்பல்ஸ் புலம்பல்ஸ்தான்.. :(

-மதி

- உடுக்கை முனியாண்டி said...

மதி:
-20C க்கு மேலன்னா எப்டி இருக்கும்னு இந்த பதிவை போட்டுட்டு வீட்டுக்கு போகும்போது தான் தெரிஞ்சிச்சி. முகமெல்லாம் ஃப்ரீஸ் ஆயிடுச்சி. இப்ப காலையில நடந்து வர முடியலை. ஸ்கேட்டிங் தான். இதெல்லாம் இந்தியால பண்ண முடியுமான்னு தேத்திக்க வேண்டியது தான்.

சிவனடியார்:
:)

இளங்கோ-டிசே said...

கனடாவுக்கு வந்தவுடனேயே sking யும் பழகியாச்சா....அப்படி என்றால், 2010ல் வன்கூவரில் நடக்கவிருக்கும், வின்ரர் ஒலிம்பிக்ஸில் கனடாவுக்கு இப்பவே ஒரு தங்கமடல் என்று குறித்து வைக்க வேண்டியதுதான் :-).

Thangamani said...

முனியாண்டி, -45C எப்படி இருக்கும் தெரியுமா?

சரி, பனி காத்த பாளயம்மனுக்கு ஒரு அர்ச்சனை செய்யுங்க. எல்லாம் சரியாகி ஸ்கீயிங் போகலாம். ஸ்கீயிங் நல்லாருக்கும்.

Costal Demon said...

நல்லா எழுதறீங்க... வாழ்த்துக்கள்

- உடுக்கை முனியாண்டி said...

ஏங்க டீசே ஒருத்தன் எப்டியோ கீழ விழாம சமாளிச்சா ஒங்களுக்கு..நல்லா இருங்க.. ஆனாலும் இந்த டொரினோ கேம்ஸ் எல்லாம் பாக்கறப்ப..

தங்கமணி, வேணாம் -20 யையே தாங்க முடியலை. -45ஆ!!! அடுத்த ப்ளைட் இந்தியாவுக்கு எப்பங்க...

பனி காத்த பாளையம்மன்!!! நாம ஆடுற ஆட்டத்துக்கு இப்டி ஒவ்வொரு அம்மனா கும்பிட்டுட்டு போனாலும் கதைக்காக மாட்டேங்குது. என்ன செய்ய..

ராம்ஸ் நன்றிங்க

Anonymous said...

//போன வாரம் கூட திடீர்னு (சின்ன) பனிப்புயல் அடிக்கப் போகுதுன்னு எல்லாரும் பிலிம் காட்டிக்கிட்டு இருந்தாங்க. நானும் ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தேன்//.

பனிப் புயலுக்கு காத்துகிட்டு இருந்தீங்களா? :-)). பனி விழுந்து., அது மேலே மழையும் விழுந்து அந்த ரோட்ல கார் ஓட்டிகிட்டு பேயிருக்கீங்களா?. அதுவும் அடிக்கடி 'சிக்னல்' இருக்கிற ரோடா இருக்கணும். படங்கள் அருமை.

- உடுக்கை முனியாண்டி said...

ஏங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து ஒருத்தன காலி பண்ணுறதுன்னு முடிவே பண்ணீட்டீங்களா? :)

கார் எல்லாம் இல்லீங்க, நடராஜா சர்வீஸ் தான்.ஆபிஸ் வீடு எல்லாம் பக்கம் பக்கம் தான். அதனால ஸ்கேட்டிங்லயே(வழுக்கி விழுகிறத வேற எப்டி சொல்றதாம்) பொழுத ஓட்டிக்கிட்டு இருக்கேன்