Feb 10, 2006

தெகப்பூடு/திசைபூண்டு

கதைகள், கற்பனைகள், எதார்த்தங்கள்ன்னு போற கிராமத்து வாழ்க்கை எப்பவுமே சுகமானது தான். ஆனா இன்னும் இந்த கிராமங்கள் இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் சொல்றது கஷ்டம் தான். ஏன்னா கிராமத்து மக்கள் தலைமுறை தலைமுறையா பேனா பேப்பர்ல எழுதாம கடத்தி வந்த விசயங்கள் (பட்டறிவு) எல்லாம் இந்த தலைமுறையோட காணம போய்கிட்டு இருக்கு. இப்ப எல்லா கிராமங்களும் தங்களை நகர்ப்புற கலாச்சாரத்தோட ஒட்டுன மாதிரியான கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்காங்க. இத தப்புன்னு சொல்ல முடியாது. ஆனாலும் பட்டறிவை இழந்துகிட்டு இருக்கோம்ன்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியலை. என்ன மாதிரியான விசயங்களை இழந்துகிட்டு இருக்கோம்ன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம் இங்க.

சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம். எங்க ஊரு சிலம்பு வாத்தியாரு. கொஞ்சம் வயசானாலும் கட்டுக்குள்ள இருக்குற உடம்பு. காட்ல எங்கயோ வழி தவறி நடக்ககூட முடியாம கிடந்தாருன்னு, ஒருநாளு அவரை வண்டி கட்டி தூக்கிட்டு வந்தாங்க. பாக்கப்போனவுங்க வந்து அதைப்பத்தி கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா யாருக்கும் ஏன் அந்த மாதிரியாச்சின்னு தெரியல. ஒருத்தங்க மட்டும், அவரு எங்கயாவது தெகப்பூடு மிதிச்சிருப்பாரு. அதனால தான் இந்த மாதிரி ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்தில இது சரியாயிரும், அப்டின்னாங்க(சில மணி நேரங்கள்ல அவரு சரியாயிட்டாரு). அந்த வார்த்தையை முதலும் கடைசியுமா அப்ப தான் கேட்டேன். தெகப்பூடுன்னா என்னன்ற கேள்விக்கு எந்த சரியான பதிலும் இல்ல. ஒருசிலரு, அது ஒரு சின்ன பூச்சி. நாம அதை மிதிச்சிட்டம்னா, அதோட உடம்பு எவ்வளவு கஷ்டப்படுமோ அதே மாதிரி மிதிச்சவங்களோட உடம்பும் கஷ்டப்படும், அப்டின்ற ரேஞ்சுல சொல்லிக்கிட்டு போனாங்க. அதுக்கு மேல கேட்டு பிரயோசனமில்லை. அட்லீஸ்ட் அப்பயாவது தெகப்பூடுன்னு சொல்றதுக்கு ஒரு சிலர் இருந்தாங்க. இப்ப யாராவது இருப்பாங்களான்னு தெரியல. நானு அதுக்கப்புறம் அதைப் பத்தி எங்கயுமே நான் கேள்விப் படவேயில்ல. சரி, எதோ ஒரு கதை விட்ருப்பாங்கன்னு நான் அதை மறந்தே போயிருந்தேன்.

ஆனா இந்த வார நக்கீரன்ல அதைப் பத்தின ஒரு சின்ன குறிப்பு மட்டும் வந்திருக்கு. அதோட பேரு திசைபூண்டு. இது ஒரு ஒரு வகையான செடி. இது மனுச உடம்புல குத்திருச்சின்னா, சிறுமூளை போதையுண்டது மாதிரி ஆகிருமாம்.(குடிமகன்கள் கவனிக்க). சில மணி நேரங்கள் திசை தெரியாம சுத்திக்கிட்டு இருக்க நேரிடுமாம். இதுக்கு மேல இதைப் பத்தி எதுவும் குறிப்பிடப்படலை.

இதைப் பத்தின மேலதிக விபரம் இங்க யாருக்காவது தெரியுமா ??

2 comments:

Thangamani said...

இதை ஒரு செடி என்ற அளவில் நானும் நினைத்திருந்தேன் முனியாண்டி. மேல் விவரங்கள் தெரியாது. ஆனால் சில பேரைப்பார்த்தி சிலர் திகைப்படைந்து திசை தெரியாது சுற்றியதை நான் பார்த்திருக்கிறேன். :)

- உடுக்கை முனியாண்டி said...

இது எல்லா இடத்திலயும் இருக்குமா. இந்த செடி குத்தினவங்களை எப்படி அடையாளம் கண்டுக்கிறது..