Apr 20, 2006

டைனிங் டேபிள் வாழ்க்கை

சிலரை வயிறெரிய வைக்கிறதுக்காக மட்டும் தான் இந்த பதிவு. மத்த படி இதுல விசேசம் ஒன்னுமில்லை.

போன வாரக் கடைசியில ஈஸ்டருக்காக வரிசையா நாலு நாள் லீவு. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு கடைசியில பக்கத்தில இருக்கிற நண்பரை போய் தொல்லை பண்ணலாம்ன்ற ஐடியா வந்துச்சி. ஆனா அவரு சில மாசங்களா இருக்கிற வேலைப் பளுவினால வனவாசம் போயி ஆளு இருக்காரா இல்லையான்னே தெரியாத அளவுக்கு ஆகிட்டாரு. இருக்கீங்களா இல்லையான்னு ஒரு மெயில் அனுப்புனதுக்கு வந்து சேருன்னு பதில் வந்துச்சி. சாதரணமா யாரு வீட்டுக்காவது போகணுன்னா யோசிக்கற நானு, இங்க போலாம்ணு முடிவு பண்ற அளவுக்கு வந்ததுக்கு ஒரே காரணம் நண்பரோட வீட்டுக்காரம்மாவும் ஒரு நல்ல தோழின்றதால மட்டும் தான்.

கார் இல்லாத கனடா வாழ்க்கை எப்டிப்பட்டதுன்னு இந்த பயணத்தில தெரிஞ்சிக்க முடிஞ்சது. எனக்கும் அவருக்குமான ஒரு 200-250கிமீ தூரத்தை கடக்கிறதுக்கு ஒரு 5 மணி நேரம்(கார் இருந்தா ரெண்டரை மணி நேரம்) ஆச்சி. ஏன்னா பஸ் வசதி இங்க அந்தளவுக்கு பேமஸ். போய் சேர முடிஞ்சதே பெரிய விசயம். நம்ம சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில போற மாதிரி ரோடு கடலை ஒட்டியே இருக்கு. என்ன இங்க கடல் கொஞ்ச நேரம் காடு கொஞ்ச நேரம்னு பாதை பாக்குறதுக்கு அழகா இருந்தது.

நேரா அவங்க வேலை பாக்கிற ஆபிஸுக்கே போயிட்டேன். அங்க போய் வழிப்பயணத்தில சாப்பிடுறதுக்காக வைச்சிருந்த சப்பாத்திய (tortillos) ஆளுக்கு கொஞ்சமா காலி பண்ணுனோம். அப்புறமா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சூப்பர்ஸ்டோர் போயி நிறைய திங்கிறதுக்கு அள்ளி போட்டுட்டு கதை பேசிக்கிட்டே அசைஞ்சாடிக்கிட்டு வீட்டுக்கு போனோம். சொந்தக் கதை, ஊர்க்கதை, உலகக்கதை, வலைப்பூக் கதைன்னு பேச வேண்டிய விசயங்கள் நிறையவே இருந்தது

ஒரு 10 நிமிசம் எனக்கு ரூம் ஒதுக்கி வைச்சிட்டு டைனிங் டேபிளுக்கு வந்துட்டோம். வந்த உடனே "this is equal oppurtunity kitchen" அப்டின்னாங்க. எனக்கு பயங்கர சந்தோசமாயிருச்சி. கொறிக்கறதுக்கு வைச்சிருந்ததெல்லாம் இழுத்து போட்டுட்டு என்ன சமையல் பண்ணலாம்னு யோசிச்சோம். எனக்கு சமையல் தெரியாதுன்றதால போனா போகுதுன்னு என்னைய அப்பெண்டிஸா! (வடிவேலு பாணியில) சேத்துக்கிட்டு காய் கறி வெட்றது மட்டும் பாத்துக்க சொன்னாங்க. அப்டியே சப்பாத்தி மாஸ்டர் வேலையையும் பாத்துக்க சொன்னாங்க.

எனக்கு சமையல் பண்ண தெரியாமலும், அவங்களுக்கு நேரம் இல்லாமலும் காய்ஞ்சி போயிருந்ததால கடைசியில இது ஒரு பெரிய சாப்பாட்டு விழாவா மாறி போயிருச்சி. நாலு நாளும் உக்காந்து கதை பேசிக்கிட்டே(பேச நினைச்சதில கால் வாசி கூட பேசலை) சமையல் பண்ணி சாப்டுக்கிட்டே இருந்ததால் எப்ப எதை சாப்டோம்ன்றது கூட மறந்து போச்சி. விதவிதமா சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சப்பாத்தி, பரோட்டா, இதுகளுக்கு ஏத்த மாதிரி சைட் டிஸ், கேசரி, உப்புமா, சூப், பால்கோவா, பாயாசம், ஐஸ்கிரீம்னு அந்த பட்டியல் நீளமாயிருச்சி. ஒரு குதியாட்டத்தோட பண்ணுனதாலயோ என்னவோ, பண்ணுன எல்லாமே அற்புதமா இருந்தது. இதுல நான் உருட்டிக்குடுத்த சப்பாத்தியும் அடங்கும்!!!!!!. எவ்வளவு தான் சமைச்சாலும் பாதி நேரம் சாப்பாடு பத்தாம தான் போச்சி!!!!!. போட்டி போட்டு சாப்டதால வந்த வினை. தின்னது செரிக்கறதுக்காக பீச்சாங்கரைப் பக்கம் சின்னதா வாக் போய் பக்கத்தில இருக்கற Tim Hortansல போய் ஒரு பெரிய கப்ல சாக்லேட் டிரிங் குடிச்சிட்டு தள்ளாட்டமா வர வேண்டியதாயிருச்சி.

இது போக "The Bridge on the River Kwai"ன்னு ஒரு அற்புதமான படத்தை பாத்தோம்.ஜெயா டிவி (அது மட்டும் தான் அங்க கிடைக்குது) அது ஒரு பக்கத்தில ஓடிக்கிட்டே இருந்தது. முடிச்சே ஆக வேண்டிய சில வேலைங்க அது பாட்டுக்கு ஒரு மூலையில தூக்கம் போட நாலு நாள் போனது தெரியாம போயிருச்சி. வெளியில குளிர் காத்து அடிச்சதும் தெரியாது மழை பேஞ்சதும் தெரியாது.

எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறமா, ரொம்ப நாளைக்கு நினைப்புல இருக்கற மாதிரியான ஒரு நிகழ்வு இது. கிளம்பி வர்றதுக்கு மனசில்ல. என்ன பண்றது கிளம்பித்தான ஆக வேண்டியதிருக்கு.

நன்றி நண்பர்களே.

8 comments:

துளசி கோபால் said...

இதுக்கெல்லாம் வயித்தெரிச்சல் பட முடியுங்களா? :-)

நம்ம நாலுநாள இதைவிட சூப்பராப் போச்சுல்லே!
கூந்தல் இருக்கறவன் வாரி முடிஞ்சுக்கறான்.
என்ன நாஞ்சொல்றது?

- உடுக்கை முனியாண்டி said...

சாரா
cool down..

துளசி,
//கூந்தல் இருக்கறவன் வாரி முடிஞ்சுக்கறான்//
இப்டியெல்லாம் நான் சொன்னா எனக்கு அங்கங்க இருந்து தர்ம அடி விழுகும்.

நன்றி

Anonymous said...

"The Bridge on the River Kwai" ல ஸ்ரீலங்கா டேவிட் லீன் காட்டுவானே. பாத்தீங்களா முனி

- உடுக்கை முனியாண்டி said...

கடைசியில தான் எனக்கு அந்த இடம் ஸ்ரீலங்கான்னு தெரியும்

இளங்கோ-டிசே said...

முனியாண்டி, நீங்கள் இப்படி நல்ல அறுசுவை உணவுகள் சுவைப்பதற்காகவேனும் அடிக்கடி நண்பர்களின் வீட்டுக்குப் பயணிக்க வாழ்த்துகின்றேன் :-).
....
நமது நண்பர், அந்த மாதிரி pastaவும் செய்வார் அல்லவா? அது குறித்து ஒரு பதிவு எழுதியே எங்களை கண்ணீர் மல்க வைத்தவர்....சரி உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்கள் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு ரொராண்டோ வாருங்கள். நல்ல உணவுகள் சமைத்துத் தருகின்றேன்...oops கடையில் வாங்கிப் பரிமாறுகின்றேன் :-).

- உடுக்கை முனியாண்டி said...

டீஜே, வாழ்த்துக்களோட, அழைப்பையும் கொடுத்ததுக்கு நன்றி.

நல்லவேளை, நண்பர் அந்த மாதிரி ஆனந்தக் கண்ணீர் எல்லாம் விடவைக்கலை. ஒருவேளை தோழி இருந்ததனால நான் தப்பிச்சிருக்கலாம்.

Anonymous said...

முனியாண்டி,
நல்ல விவரமான பதிவ போட்ருகீங்க.
ஆனா பாருங்க அந்த அற்புதமான பரோட்டா பத்தி அடக்கி வாசிச்சிட்டீங்க. அந்த மாதிரியான பரோட்டா தயாரிப்பு நண்பர்களுக்கு மிகுந்த உற்சாகத்த கொடுத்தது.

- உடுக்கை முனியாண்டி said...

முனியாண்டிய இப்டி பரோட்டா மாஸ்டரா சித்தரிக்கறதை நான் வன்மையா கண்டிக்கிறேன்