Jan 29, 2007

கடலுமேல கார் ஓட்டுறாங்க..

கனடாவோட கிழக்கு கடற்கரை சாலை கடலோட ஒட்டி உறவாடிக்கிட்டே போகும். ஒரு விதத்தில நம்மூரு கிழற்கு கடற்கரை சாலை மாதிரி தான். என்ன, இங்க ஒரு பக்கம் கடல், மறுபக்கம் கொஞ்சம் அடர்த்தியான காடு. இந்த பாதை எனக்கு பிடிச்ச பாதையில ஒன்னு. என்ன தான் பஸ்ஸில, டிரையின்ல ஏறுன உடனே தூங்க ஆரம்பிச்சிருவேன்னாலும் அங்கங்க முழிச்சி பாத்து எல்லாம் நல்லா இருக்கான்னு ஒரு பார்வை பாத்துட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சிருவேன். கார்ல போனா முழுசா பாத்து ரசிச்சிகிட்டே போறதுண்டு.

இந்தமுறை போன வாரம் பக்கம் நண்பரை பாக்க இந்தப்பக்கம் போகவேண்டியதிருந்தது. கிழம்பி கொஞ்ச நேரத்தில ஒரே ஆச்சரியமா இருந்தது. கடலை ஒட்டியே போனாலும் இந்த தடவை தண்ணியைவே பாக்கமுடியலை. சுத்திமுத்தி எந்தப்பக்கம் பாத்தாலும் வெள்ளவெளேர்ன்னு ஒரே பனியா இருந்தது. அதுவும் பாக்குறதுக்கு நல்லாதான் இருந்தது. நண்பர் இருக்கறது ஒரு சின்ன துறைமுகத்தில. அங்க போனா இன்னும் ஆச்சரியமா இருந்தது. பனியா இருந்த கடலுக்குள்ள குட்டிகுட்டியா சில வீடுங்க இருந்திச்சி. சரின்னு பாத்தா அந்த வீட்டுக்கு போறதுக்கு மக்க கார் ஓட்டிக்கிட்டு போகுது. பாத்து ஆச்சரியமாகி சில போட்டோ எடுத்தேன். அது இங்க..



2 comments:

சேதுக்கரசி said...

கடல் உறையாதே... இது, உறைந்த lake - ஏரியாக இருக்குமோ?

- உடுக்கை முனியாண்டி said...

இந்தப் பக்கம் வந்ததுக்கு நன்றிங்க சேதுக்கரசி.

இது கடல் தான். இந்தப் பக்கம் இருக்கற கடல் எல்லாம் குளிர் காலத்தில உறைஞ்சி போயிரும்.காரணம் இங்க இருக்கற குளிர் அந்த மாதிரி. இன்னைக்கு குளிரு -22 C. ஜனவரிலருந்து மார்ச் வரைக்கும் உறைஞ்சி இருக்கும்.