Jan 16, 2007

அப்துல் கலாமும் யாகூவும்...

யாகூ தன்னோட "யாகூ பதில்கள்" சேவையோட ஒரு பாகமா "Ask the planet" சேவையை இந்தியாவுல அறிமுகப்படுத்திருக்கு. இதுல பிரபலமானவங்களை கேள்வி கேக்கவிட்டு அதுக்கு பதில் சொல்ல சொல்றாங்க. பதில் சொல்ற வரிசையிலயும் சில பிரபலங்கள் உண்டு. இந்தியாவுல கேள்வி கேட்டு ஆரம்பிச்சி வைச்சிருகிறவரு அப்துல் கலாம். அவரோட கேள்வி " தீவிரவாதத்தை இந்த உலகத்திலருந்து எப்டி இல்லாம பண்றது". இந்த கேள்விக்கான பதில் சொன்ன பிரபலங்கள்னு கிரண் பேடி, லியாண்டர் பயஸ், ரவிசங்கர் பேரெல்லாம் குடுத்திருக்கறங்க.

அப்புறம் முக்கியமான விசயம், இதில தேர்ந்தெடுக்கப் படுற பொது சனங்களோட சிறந்த பதிலுக்கு ஒரு "டேப்லட் PC" பரிசு உண்டாம்.

எதைக் கேட்டாலும் கனவு காணச் சொல்றவருக்கே பதில் தெரியாதுன்றப்ப நம்ம பதில்லாம் எந்த மூலைக்குன்னு எதுவும் பதில் சொல்லலை. உங்களுக்கு தெரிஞ்சா போய் சொல்லுங்க. பரிசுக்கு வாழ்த்துக்கள்.

1 comment:

வடுவூர் குமார் said...

இந்த கேள்விக்கு சுலபமாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
பஸ்ஸிலோ,ரயிலிலோ போகும் போது தவறுதலாக காலை மிதித்துவிட்டு மன்னிப்புகேட்ட பிறகும் கூட பழிவாங்கும் எண்ணம் இருக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இது இது ஒரு கருத்துக் களஞ்சியமாகவே இருக்கும்.
மனிதர்கள் பலவிதம்,அவரவர் வாழும் மற்றும் அனுபவிக்கும் வலி வித்தியாசமானவை.வித்தியாசம் இல்லாத உலகம் வேண்டுமென்றால், இனிமேல் தான் படைக்கவேண்டும்.

அதுவரை இவர்களுடன் வாழ கற்றுக்கொள்வதே எனக்கு சிறந்த வழியாகப்படுகிறது.