May 4, 2007

ஓவ்வொரு குடிமகனுக்கும் 50 இலட்சம் ரூபாய்

ஒரு நாடு தன்னோட ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பணம் சேத்து வைக்கிறதைப்பத்தி யோசிக்க முடியுதா. இந்தியாவை விட்டுத் தள்ளுங்க, ஒவ்வொரு குடிமகனோட தலையிலயும் சில ஆயிரங்கள் கடன் இருக்கும். ஆனா இன்னைக்கு நாம ஆன்னு வாயைப் பிளந்து பாத்துக்கிட்டு, போயி குடியேறணும்னு ஆசைப்படுற சில நாடுகள்லயும் அவங்க குடிமகன்களோட தலையில கொஞ்சம் கடனை ஏத்தி தான் வைச்சிருக்காங்க. போன வருடம் அதிகமா வருமானம் வந்ததுன்னு தலைக்கு 1 இலட்ச ரூபாய் திருப்பி குடுத்த மாநிலத்தை வைச்சிருக்கற கனடாவுலயும் ஒட்டு மொத்தமா பாக்கும் போது நிலைமை சொல்லிக்கற மாதிரி இல்லை. ஆக மொத்தம், பெரும்பாலான நாடுகள்ல துண்டு விழுகாம பட்ஜெட் போடுறதுன்றது பெரிய விசயம் தான்.



ஆனா இன்னைக்கு இந்த செய்தியை படிச்சதுக்கப்புறம் பயங்கர ஆச்சரியமாயிருச்சி. ஒரு நாடு தன்னோட ஒவ்வொரு குடிமகனுக்காகவும் இன்னைய தேதிக்கு 50 இலட்ச ரூபாய் சேத்து வைச்சிருக்கு. இன்னும் ஆச்சரியமா, இந்த பணத்தை என்ன பண்றதுன்னு தெரியாம பல இடங்கள்ல முதலீடு பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஒரு நாடே பெரிய முதலீடு செய்யுற நிறுவனமா இருந்து பல நாடுகள்ல பெரிய பெரிய கம்பெனிகள்ல முதலீடு செஞ்சிருக்காங்க. இவங்களோட முதன்மையான வருமானம் பெட்ரோல். பெட்ரோல் உற்பத்தில சவுதி அரேபியா, ரஷ்யாவுக்கு அப்புறமா இவங்க மூணாவது இடத்துல இருக்காங்க. நாட்டோட மக்கள் தொகை சுமாரா 50 இலட்சம். இந்த நாடு அடிக்கடி நம்மளோட செய்திகள்ல வந்துகிட்டு தான் இருக்கு. அதோட இன்னொரு முக்கியமான விசயத்துக்காகவும் இந்த நாடு பேர் போனது. அது அமைதிக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுத்து குடுக்கறவங்க இவங்க தான்(மத்த பரிசுகளுக்கு சுவீடன்). இப்ப தெரிஞ்சிருக்கும் எந்த நாட்டைப்பத்தி நான் பேசிக்கிட்டு இருக்கேன்னு. இப்பவும் தெரியலைன்னா அந்த நாடு நோர்வே. பயங்கர ஆச்சரியமாயிருக்கா. இந்த நாடு 1996ல இருந்து ஓய்வூதியத் திட்டம்னு ஒரு திட்டத்தில இது வரைக்கும் சேத்து வைச்சிருக்கற தொகை 400 பில்லியன் டாலர்(ரூபாய்க்கு நீங்களே மாத்திக்கோங்க)



இன்னொரு ஆச்சரியமான ஒரு விதயத்துக்காக தான் இன்னைக்கு இந்த நாடு அமெரிக்க செய்தி நிறுவனங்கள்ல அடிபட்டுகிட்டு இருக்கு. அது என்னன்னா இவங்க தங்களோட ஓய்வூதியத் திட்டத்தில இருக்கற பணத்தை பல இடங்கள்ல முதலீடு செஞ்சிருக்காங்க. அப்படி முதலீடு செஞ்சிருந்த சில அமெரிக்க நிறுவனங்கள்ல இருந்து இவங்க விலகிட்டாங்க. அதுல ஒரு முக்கியமான நிறுவனம் வால்-மார்ட். இவங்க விலகுறதுக்காக சொன்ன காரணம் வால் மார்ட் நேர்மையான வர்த்தக முறைகளை கடைப்பிடிக்கலை. ஒழுங்கான நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் எல்லாத்தில இருந்தும் விலகுறதா முடிவு பண்ணியிருக்காங்க. வால்-மார்ட் பத்தி இவங்க சொன்ன குற்றச்சாட்டு தங்களோட பொருட்கள் உற்பத்தி பண்ணுற இடத்தில குழந்தைத்தொழிலார்களை உபயோகப்படுத்தறது, அப்புறம் இதை எதிர்க்கற தொழிலாளர் சங்கங்களை காலி பண்ணுறது. இப்போதைக்கு வால்-மார்ட் எப்டி இந்தத் தடையில இருந்து வெளிய வர்றதுன்னு மண்டைய உடைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு நோர்வே வெளிய வந்திருக்கற 30 கம்பெனிகள்ல 12 கம்பெனிகள் அமெரிக்காவுல இருக்கு. வால் மார்ட்டுக்கு அடுத்து முக்கியமான இன்னொரு கம்பெனி விமானங்கள் தயாரிக்கற போயிங்.



இப்படி வெளிய வர்றதுக்கு இவங்க சொல்லியிருக்கற காரணம் 'எங்களோட மக்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுறதை விரும்பலை'. மக்களுக்காகவும் அரசாங்கங்கள் பேசுதுங்கறதை நினைக்கும் போது பயங்கர சந்தோசமாயிருக்கு. இந்தப் பிரச்சனைக்கு அடுத்து இவங்க முக்கியத்துவம் கொடுக்கப் போறது இப்போதைக்கு எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கற 'குளோபல் வார்மிங்'.



பணக்காரனோட வார்த்தைகள் எப்பவும் அம்பலம் ஏறும். அதுவும் எல்லா மக்களுக்காகவும் அப்டிங்கும் போது பாராட்டாம இருக்க முடியலை.



பின்குறிப்பு



1. சவுதி அரேபியாவில நோர்வே அரசுக்கு சொந்தமான பெட்ரோல் நிறுவனம் கிளை பரப்பியிருக்கு. அந்த நாட்ல மனித உரிமை என்ன இலட்சணத்தில இருக்கு. நோர்வே இந்த விதயத்தில இரட்டை வேடம் போடுதுன்னு பாதிக்கப்பட்டவங்க புகைவிட ஆரம்பிச்சிருக்காங்க.



2. கண்ணி வெடிகளை தடை பண்றதுக்கான சட்ட வரைவை ஐக்கிய நாடுகள் சபை மூலமா நிறைவேற்றியிருக்காங்க. பாலஸ்தீன, இஸ்ரேல் சமாதான பேச்சுகள் நடந்தது நோர்வேயில. இப்போதைக்கு இலங்கையிலயும் அமைதி முயற்சியில ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.

8 comments:

Boston Bala said...

பதிவிற்கு நன்றிகள்.

பத்மா அர்விந்த் said...

குடிமக்கள் சேர்த்து வச்ச பணத்தையும் கரைக்கிற நாடு பத்தியும் சொல்லி இருக்கலாம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள பதிவுளாகத் தொடர்ந்து தருவதற்கு நன்றி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஏங்க, நோபல் பரிசு வழங்குறது சுவீடன் தானே?

- உடுக்கை முனியாண்டி said...

ரவிசங்கர்,

அமைதிக்கான நொபெல் பரிசினை வழங்குவது நோர்வே. ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்வதிலிருந்து, கொடுப்பது வரை நோர்வே தான். பரிசு வழங்கும் இடம் ஓஸ்லோ, அதற்குப் பின்னரே மற்ற பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த தகவல்களைக்கூறும் விக்கி சுட்டி

http://en.wikipedia.org/wiki/Nobel_Peace_Prize

இதை நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கவேண்டும். சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள். திருத்தி விடுகிறேன்

கலை said...

உங்க பதிவுக்கு ரவிசங்கர் என்னுடைய பதிவொன்றின் பின்னூட்டத்தில் இணைப்பு கொடுத்திருந்தார். முதல் முறையா உங்க வலைப் பதிவுக்கு வந்து பார்த்திருக்கிறேன். உங்க பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போ நம்மளுக்கும் 50 இலட்சம் ரூபா இருக்கு. ஹையா :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஓ..தெளிவு படுத்தியமைக்கு நன்றி

Anonymous said...

ஆமா முனியாண்டி! நீங்க நம்ம ஊராமே? இப்ப எங்கே? என்ன பண்ணிட்டிருக்கீங்க?