May 1, 2007

புகைப் (படம்) பிடித்தல்

சில வாரங்களுக்கு முன்னாடி, சாப்பிடலாம்னு பக்கத்தில இருக்கற இந்திய உணவகத்துக்கு சாப்பிட போனோம். சாப்பிட்டு முடிக்கற நேரம், அங்க இருந்தவங்க தூரத்தில வந்துக்கிட்டிருந்த புகைய காட்டி எதோ தீ விபத்து மாதிரி இருக்குன்னாங்க. புகை வர்ற திசையைப் பாத்தா எதோ பக்கத்தில இருக்கற எடமா இருக்குமோன்னு தோணுச்சி. சரி பக்கமா தான அதைப் போய் பாக்கலாம்னு முடிவு பண்ணி சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பினோம். பக்கமா தோணினது தூரமா போய்க்கிட்டே இருந்தது. முதல்ல என்னோட வீட்டுப்பக்கமா இருக்கறமாதிரி தெரிஞ்சது, அப்புறம் போனா என்னோட அலுவலகம் பக்கம் மாதிரி தெரிஞ்சது. இன்னும் கொஞ்சம் நெருங்கி போனா அதுவும் கொஞ்சம் தள்ளி போனது. சரி ஆனது ஆகட்டும்னு சொல்லி போய்க்கிட்டே இருந்தோம். பக்கத்தில போகும் போது தீவிபத்து நடந்த இடத்துக்கு போற பாதைய மூடி வைச்சிருந்தாங்க. அதனால நடந்து போக வேண்டியதாயிருச்சி. பக்கத்தில போக போக பிரமாண்டமா எழும்பற கரும்புகைய பார்க்க முடிஞ்சது. அப்போ குளிர் அதிகமா இருந்ததால புகை பக்கத்தில எதுவும் பரவாம எல்லாம் மேல் நோக்கியே போய் கிட்டு இருந்தது. என்னன்னு நெருங்கி போனா ஒரு டயர் கடையில தீப்பிடிச்சிருக்கு. நாங்க போகும் போது பாதி எடம் எரிஞ்சி முடிஞ்சிருந்தது. திடீர்னு இதை படம் எடுத்தா நல்லா இருக்குமேன்னு ஒரு நினைப்பு வந்து ஒக்காந்துகிருச்சி. நினைச்சதுக்கப்புறம் சும்மா விட முடியுமா, திரும்பி வீட்டுக்கு போய் கேமராவை எடுத்துட்டு வந்து படம் எடுத்தேன் திரும்பி வரும்போது முக்காவாசி முடிஞ்சிருந்தது.


கேமரா எடுத்துகிட்டு போற வழியிலேயே எடுத்தது. சுமாரா ஒரு 3 கிமீ தூரத்திலருந்து எடுத்தது. அன்னைக்கு என்னவோ ஊரே கரும்புகைக்குள்ள சிக்கிக்கிட்டமாதிரி புகை பரவியிருந்தது




பக்கத்தில போகும் போது சில நூறு மீட்டர் தூரத்திலருந்து எடுத்தது



சில மீட்டர் தூரத்திலருந்து


இன்னும் பக்கத்தில


கடைசியா பக்கத்தில நின்னு எடுத்த வீடியோ




திஸ்கி:

மறுநாள் அந்தப்பக்கம் போகும் போது ஒண்ணுமே மிச்சமாயில்லை. தீயணைப்பு நண்பர்களோட முயற்சி எல்லாம் தீ பக்கத்தில பரவாம இருக்கறதுக்கு மட்டும் தான் உதவியிருக்கு.

2 comments:

Anonymous said...

/நினைச்சதுக்கப்புறம் சும்மா விட முடியுமா, திரும்பி வீட்டுக்கு போய் கேமராவை எடுத்துட்டு வந்து படம் எடுத்தேன் திரும்பி வரும்போது முக்காவாசி முடிஞ்சிருந்தது./
அட என்னங்க நீங்க வெவரம் புரியாத ஆளாருக்கீங்க. பக்கத்துலயே இன்னொண்ணை பத்த வெச்சு எடுத்திருக்கலாமே? மிஸ்டர். முனி, பிலிம் முக்கியமா? பில்டிங்கு முக்கியமா? ;-)
பதிவு போடறதுக்கு அவனவன் மாட்டர் இல்லாம மாட்டிக்கிட்ருக்கிறப்ப நீங்க அகப்பட்ட மாட்டரையே அரைபிலிம்லதான் புடிச்சிருக்கீங்க.

துளசி கோபால் said...

//தீயணைப்பு நண்பர்களோட முயற்சி எல்லாம்
தீ பக்கத்தில பரவாம இருக்கறதுக்கு மட்டும்
தான் உதவியிருக்கு.//

இதுதான் உண்மையிலும் முக்கியம்.
தீ பரவுனா சேதாரம் கூடுதல்.
சொல்ல மறந்துட்டேனே.........

படங்கள் நல்லா இருக்கு.