May 2, 2007

இந்திய பயனர்களுக்கு ஆப்படித்த ஆர்குட்

ஆர்குட் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவங்களுக்கு, இது ஒரு சமூகப் பின்னல் வலைத்தளம் (Social networking site க்கு மொழிபெயர்ப்பு சரியா). சமீபத்தில கைமாறி இப்ப கூகுள் நிறுவனத்தோட ஒரு பங்கா இருக்கு. இந்த வலைத் தளத்தில உங்களுக்கு ஒரு தனிப்பக்கம் திறக்கலாம். அதில உங்களோட புகைப்படம், உங்களுக்கு பிடித்த அசைபடம் எல்லாம் போட்டு வைச்சிக்கலாம். ஆனா அதை விட முக்கியமானது உங்களோட நண்பர்கள் குழுவை உருவாக்கிக்கலாம். அது தவிர உங்களுக்கு பிடிச்ச குழுக்கள்ல சேர்ந்துக்க முடியும் இல்லாட்டி உங்களுக்கு பிடிச்ச தலைப்புல நீங்களே ஒரு குழுவை ஆரம்பிக்க முடியும். ஒரு குழுவில சேர்றதாலயோ புதுசா ஒரு குழு ஆரம்பிச்சோ என்ன பண்ண முடியும்னு கேட்டா, அங்க விவாதங்கள் நடத்தவோ இல்ல பங்கு பெறவோ முடியும். ஒரு சில குழுக்கள்ல பல ஆயிரக்கணக்கில உறுப்பினர்கள் இருக்காங்க. சரி இதனால உபயோகமா எதாவது நடக்குதான்னு எதுவும் கேக்காதீங்க. இந்த தளம் பிரபலமானதுக்கு முக்கிய காரணம் ஒவ்வொரு தனிப்பக்கத்திலயும் இருக்கற கிறுக்கல்பக்கம் (scrapbook) தான். அதாவது நீங்க போய் யோரோட பக்கத்திலயாவது கிறுக்கிட்டு வந்திங்கன்னா, அவங்க வந்து உங்களோட பக்கத்தில வந்து கிறுக்குவாங்க. நம்ம வலையுலகத்தோட பின்னூட்டம் மாதிரி தான். என்ன இங்க எதாவது பதிவுக்கு, அதுக்கு சம்பந்தமே இல்லாம எதாவது கும்மி இருக்கும். அங்க பதிவே இல்லாம கும்மி அடிக்கிறாங்க. இது தான் ரெண்டுக்கும் உள்ள, எனக்குத் தெரிஞ்ச வித்தியாசம்.

ஆர்க்குட்ல அதிகபட்சம், உங்க பக்கத்தை யாரு வந்து பாத்துட்டு போனாங்கன்னு மட்டும்தான் பார்க்க முடியும். அதனால முகத்தை மூடிக்கிட்டு, ஆட்டோவுக்கும் ஆசிடுக்கும் பயப்படாம கருத்து சொல்லலாம், இல்லாட்டி அடுத்தவன் முகத்துல ஒண்ணுக்கும் அடிக்கலாம். நம்ம மக்கள் தான் எல்லா நல்ல விதயங்களையும், ஓட்டைகளையும் தங்களோட மன வக்கிரத்தை வெளிய காட்டிக்கிறதுக்கு பயன் படுத்தறவங்களாச்சே. இந்தியா ஒழிக, இந்தியாவை நான் வெறுக்கிறேன்ற ரேஞ்சுல குழு ஆரம்பிச்சி கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாடு ஒழிகன்னு கர்நாடக்காரனும், கர்நாடகா ஒழிகன்னு தமிழ்நாட்டுக்காரனும் குழு ஏற்படுத்தி வைச்சிருக்காங்க. இதைத் தவிர அம்பேத்கார், பால்தாக்கரேன்னு நினைச்சவங்க பேர்ல எல்லாம் தங்களுக்கு இருக்க வெறுப்ப, வக்கிரத்தை எல்லாம் வெளிய விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதனால ஆர்குட் இந்தியாவுல தடை செய்யப்படும்னு பேச்சு வந்துக்கிட்டு இருந்தது. நம்மூர்ல தான் சாதரண வலைப்பக்கத்தையே தடை பண்றவங்களாச்சே. அதனால அது பெருசா தோணலை. ஆனா எல்லாரும் ஆச்சரியப்படுற மாதிரி ஆர்க்குட், விவகாரமான குழுக்களை நீக்கறது மட்டும் இல்லாம, அதை எழுதறாவங்களோட ஐப்பிக்களையும் காவல் துறைக்கு தர்றதா ஒப்பந்தம் போட்டிருக்கு. அதுவும் ஒரு மாநில காவல்துறைகூட. மகாரட்டிர மாநிலக் காவல் துறைகூட தான் இந்த ஒப்பந்தத்தை போட்டிருக்கு.

வக்கிரமான பதிவர்களை களை எடுக்கறதில எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை. எது வக்கிரம்னு காவல்துறை முடிவு பண்ணப் போகுதுன்னு நினைக்கிறப்ப தான் கொஞ்சம் கலக்கமா இருக்கு. அரசியல் காழ்ப்புணர்வுகள் அதிகமா இருக்கற நம்மநாட்டுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். இந்தி, இந்து, இந்தியா, இறையாண்மைன்னு பல வெண்ணைகள் தடவுற இந்து பத்திரிக்கைகாரங்களே ஊர் ஊரா ஓடுனது ஞாபகத்துக்கு வருது. (இவங்களும் எதாவது இதை ஆதரிச்சி ஆச்சரியப்படுத்தியிருக்காங்களான்னு தேடிப் பார்த்தேன், எதுவும் கிடைக்கலை).

பல நாடுகள்ல தகவல் தர முடியாதுன்னு சொன்ன கூகுள், எப்படி இந்த மாதிரி இறங்கி வந்துச்சின்றது ஒரு பெரிய ஆச்சரியம் தான். இந்தியாவுல இருக்கற மனித உரிமையோட அளவு கூகுளுக்கு தெரியாதா இல்லை அதையெல்லாம் விட இந்தியாவோட சந்தை முக்கியம்னு முடிவு பண்ணிட்டாங்களான்னு தெரியலை. மத்த குழுமங்கள்ல கூகுளை இப்போதைக்கு பிரிச்சி காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க.

3 comments:

மாசிலா said...

பகிர்ந்தமைக்கு நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

// என்ன இங்க எதாவது பதிவுக்கு, அதுக்கு சம்பந்தமே இல்லாம எதாவது கும்மி இருக்கும். அங்க பதிவே இல்லாம கும்மி அடிக்கிறாங்க. //
ஹி ஹி :))

நாமக்கல் சிபி said...

// என்ன இங்க எதாவது பதிவுக்கு, அதுக்கு சம்பந்தமே இல்லாம எதாவது கும்மி இருக்கும். அங்க பதிவே இல்லாம கும்மி அடிக்கிறாங்க. //

:))