Sep 28, 2007

IIScல் ஒரு தற்கொலை: பேராசிரியர்களின் சாதீய வெறி

பெங்களூர், இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நடந்த ஒரு தற்கொலை, இன்னும் ஒரு தற்கொலை என்ற அளவில் கடந்து சென்று விட்டிருக்கிறது. நடந்த இடமோ இல்லை காரணமோ எந்த வித சலனத்தையும் எங்கும் ஏற்படுத்தவில்லை. காரணம், இறந்தது ஒரு தலித் மாணவன். தூண்டியது பேராசிரியர்களின் சாதீய மேலாதிக்கப் பாகுபாடு மற்றும் அடக்குமுறை.

இதற்கும் வேலைப்பளு, மனஅழுத்தம் என்று எதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு, சாதி என்பது ஒழிந்து விட்டது, அதெல்லாம் கடந்த கதை என்ற கூப்பாட்டை மறுபடியும் ஆரம்பிக்கலாம். அதைத்தான் IIScயும் செய்துள்ளது. இறந்து போன மாணவன் தற்கொலைக்கு முன்னால் எழுதிய கடிதமும், அவனது நாட்குறிப்பும் எளிதாக மறைக்கவும் அழிக்கவும் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு விசாரணைக்கு குழுவை அமைத்திருப்பதாக IISc தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரே இந்த குழுவுக்கு தலைமையேற்றிருந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் வெளிக்குழுக்கள் சுயாதீனமாக நடத்திய தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளன. நாம் இப்பொழுது அறிவுப் பூர்வமாக இந்தக் குழுக்களின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கலாம் அல்லது அந்த மாணவனின் கோழைத்தனத்தை விமரிசிக்கலாம். நம்மால் செய்ய முடிந்ததுவும் எளிதானதுவும் அது மட்டுமே.

வாழ்க ராமராஜ்ஜியம்.


இதைப் பற்றி ஒரு IISc நண்பனிடம் தொடர்பு கொண்டபோது வந்த பதில்

hai all,
sorry for joining u people late. but i knew about this much earlier, almost on the timings of the happening of the events.. (gtalk, chat) .... so when i saw the mail i thought its a new one. having been in iisc for quite some time i wouldnt be surprised if it was a new one of the samekind for the same reason.


bye



தொடர்புபட்ட இணைப்புகள்

http://www.rediff.com/news/2007/aug/27student.htm


சமதா சைனிக் தள் என்ற அமைப்பின் அறிக்கையை முன் வைத்து
http://www.hindu.com/2007/09/26/stories/2007092655570500.htm


பகுஜன் மாணவர் கூட்டமைப்பு, IISc மாணவர்களின் உதவியோடு நடத்திய உண்மை அறிதலின் அறிக்கை. அழிக்கப்பட்ட நாட்குறிப்பில் விட்டு வைக்கப்பட்டுள்ள ஒரு பக்கமும் இந்த அறிக்கையில் உள்ளது.

http://endcampuscasteism.files.wordpress.com/2007/09/bangalore-report_final26.pdf

7 comments:

Anonymous said...

//நாம் இப்பொழுது அறிவுப் பூர்வமாக இந்தக் குழுக்களின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கலாம் அல்லது அந்த மாணவனின் கோழைத்தனத்தை விமரிசிக்கலாம். நம்மால் செய்ய முடிந்ததுவும் எளிதானதுவும் அது மட்டுமே.//

I am sure we will some comments in this line in thamizmanam

டண்டணக்கா said...

Two independent organization outcomes are clearly pointing out discrimination. Institutes of these attitude/practice, no need to exist and serve this India with this racial discernment attitude. Destruction of these institutes are the only way to go about these institutes.

சுகுணாதிவாகர் said...

நீங்கள் எழுதியுள்ளதையும் சுட்டிகளையும் படிக்கும்போது இயலாமையுடன் கூடிய கோபமும் கண்ணீரும்தான் வருகிறது.

மாசிலா said...

இந்த கொடுமையை படித்த பின் என்னத்த எழுதுவது?

பிறகு வருகிறேன்.

:-(

Thangamani said...

இதை வருந்தத்தக்க செய்தி என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லுவது நம்மையும், இந்தச்சமூகத்தையும் ஏமாற்றுவதாகாதா?

உங்களுக்குத் தெரியாதா இவைகள் நடப்பதற்கான காரணங்கள் என்ன என்று?!

இந்த தேசத்தின் பிதா வருணாசிரமத்தை போற்றி ஒழுகினார்; பின்பற்றினார். இந்த தேசத்தின் மிகச்சிறந்த மேதைகள், அரசியல் தலைவர்கள், வழிகாட்டிகள் ஆன்மீகத் தலைவர்கள் அனைவரும் வர்ணாசிரமத்தைக் காப்பாற்ற அல்லும் பகலும் பாடுபடுகின்றனர்.

வர்ணாசிரத்துக்கும், பார்பனியத்துக்குமெரான குரல்கள் தேசியத்தும், தேசத்துக்கும் விரோதமானவையாகச் சித்திரிக்கப்படு ஒடுக்கப்படுவதில் ஊடகங்கள் தொடங்கி நீதிமன்றங்கள் வரை அணியமாக இருக்கின்றன.

எந்த நூல்கள், தத்துவங்கள் இந்த விசச்சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணோ அவைகள் தான் இந்த நாட்டின் தத்துவமூலங்களாகவூம், பண்பாட்டுக்கருவூலங்களாகவும் போற்றி ஏற்றப்படுகின்றன.

இத்தகைய பின்புலத்தில் வெறும் சாதி இல்லை என்ற ஏட்டுச்சுரைக்காய் எப்படி கறியாகும்?

இனி இப்படியான சாவுகள், கொலைகள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் இந்த இரண்டு விதயங்களில் ஏதேனும் ஒன்று நடக்கவேண்டும்.

1. சாதியை, பெண்ணடிமைத்தனத்தை, வருணாசிரமத்தை கோடி காட்டும், நூல்கள், கருத்தியல்கள் அனைத்தும் சமூக விரோத தேசவிரோத கருத்தியல்களாகக் அறிவிக்கப்பட்டு, மத, ஆன்மிக புழக்கத்தில் இருக்கும் எல்ல பழம் நூல்களும் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு அப்பகுதிகள் அகற்றப்படவும், அப்படியான கருத்தியல்களை இதுவரை பின்பற்றி வந்தமைக்காக வெளிப்படையான வருத்தமும், வெட்கமும் தெரிவிக்கப்பட்டு இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்கப்படல்வேண்டும். இதைச் செய்வதில் எந்தச் சுணக்கமும், ஒளிவுமறையும், மிருதுவான போக்கும் இருக்கக்கூடாது. இது தேசத்தின் ஆகப்பெரிய விதயமாகக் கருத்தப்பட்டும் அணுகப்படவும், விவாதிக்கப்படவும் வேண்டுமே அல்லாது, இப்போது எல்லாம் மாறிவிட்டது என்ற பொதுவான போலித்தனம் நிறைந்த (இதுவரை கடைப்பிடிக்கும்) மென்போக்கை கடைபிடிக்கக்கூடாது. இந்த அணுகுமுறைக்கேற்ற சமூக, அரசியல், ஆன்மீக நடைமுறைகள் சீர்திருத்தம் பெறபெறவேண்டும்.

அல்லது இவைகளை செய்யாது மறுபடியும் இப்படியான போலியான இரட்டை வேடத்தைத் தான் இந்தச்சமூகம் செய்யும் என்றால் ஆண்மையோடும், நேர்மையோடும் இந்த பினவரும் இரண்டாவது வழியையாவது உடனே பின்பற்ற வேண்டும்.

2. சூத்திரன், பஞ்சமன், பெண்கள் போன்றோர் வடிக்கவும், வாசிக்கவும், கல்வி கற்கவும் உடனே நாடளாவிய தடையை விதிக்கவேண்டும். மீறி செயல்படுவோர் மனுவின் சாத்திரத்தில் கூறியபடி தண்டனைக்கு உள்ளாவர் என்பதை அரசியல் சட்டத்தில் எழுதி அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறிதுகாலத்துக்குப் இப்படியான சாவுகள் இருக்காது. ஏனெனில் அதற்கான சூழலே இருக்காது.

இரண்டில் ஒன்றைச் செய்யாமல் இங்கு வருத்தம் தெரிவிக்காதீர்கள். அது உங்கள் போலித்தனத்தைப் பற்றிச் சொல்லுகிறதே அன்றி இந்தப்பிரச்சனையைப் பற்றியன்று.

நன்றி!

Sri Rangan said...

தங்கமணியின் கருத்தை வழி மொழிகிறேன்.

அந்த மாணவனின் இழப்பைப்போன்று எத்தனையோ நம் இந்தியாவில்-ஈழத்தில் நடந்தேறுகிறது-இவையனைத்துக்கும் காரணமாக இருப்பது பார்ப்பனியத்தின் தத்துவார்த்தத் தளமே!இதை உடைக்காமால் கண்ணீர் விடுவது விடுதலையளிக்காது!

Anonymous said...

Hi all,

It is known that this is not the first time happening in this institute.Generally insitute authority have their own statement like love affairs/personal problems and they will try to close the issue of any death .This will be generally beleived by the IISc community .But Ajay's father did not give them any chance to make their own classical stories and they failed in making the new acceptable stories.So it is natural to get us in to small vibrations like destruction of the materials supporting the castism or destroy
the reservation or whatever be the case.Nothing is going to happen unless we get the revolution to annihilate the castes,which is not going to happen ,even the naxalism/communism did not take any initiation towards that ,which itself is very clear how strongly the bhraminism is rooted.So atleast let us raise the issue in the international scientific community by contributing any of our talk/poster anything against this castism by dedicating the talk/lecture/poster against indian castistism and make them speak about this shameful attitude.

Bye,