கூகுள் ரீடர்ல நீங்க படிக்கற இடுகைகள பகிர்ந்துக்கற வசதி இருக்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். இதுவரைக்கும் நீங்க உங்களோட முகவரிய பகிர்ந்துக்கிட்டா மட்டும் தான் மத்தவங்களுக்குத் தெரியும். உதாரணத்துக்கு நான் ஒரு 100 இடுகைய படிச்சிட்டு அதுல பத்தை என்னோட குறிப்பிட்ட நண்பர்களோட மட்டும் பகிர்ந்துக்க விரும்பினா அதை செய்ய முடியும். அதாவது யாருக்கு என்னோட முகவரிய அனுப்பியிருக்கனோ அவங்க மட்டும் அதை பாக்க முடியும். மத்தவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் வாய்ப்பில்லை.
ஆனா இப்ப சமீபத்தில கூகுள் ரீடர் அறிமுகப்படுத்தியிருக்கற ஒரு புது வசதி இதுக்கு குண்டு வைச்சிருச்சி. இந்த வசதியினால நீங்க எந்த இடுகைய பகிர்ந்துக்கிறீங்கன்னு உங்களோட கூகூள் டாக்ல இருக்கற எல்லாருமே பாக்கமுடியும். இந்த வசதிய நிறுத்தறதுக்கான எந்த வித சிறப்பு வசதியும் இதுல கொடுக்கப்படலை. அப்படியான எண்ணமும் இல்லைன்னு கூகுள் சொல்லிருக்கு.
இது தங்களோட தனிப்பட்ட சுதந்திரத்தில தலையிடுற வேலை. இந்த போட்டுக்குடுக்கற வசதிய நிப்பாட்டணுமுன்னு சில பதிவர்கள் கொதிச்சிப் போய் இருக்காங்க.
மக்களே இந்த வசதிய நீங்க உபயோகப்படுத்தறீங்கன்னா கொஞ்சம் உஷாராவே இருந்துக்கங்க.
பி.கு- 1 : நீங்க பகிர்ந்துக்கற இடுகைகள் மட்டும் தான் மத்தவங்களுக்குத் தெரியும். அதுக்காக நீங்க படிக்கற எல்லாமே தெரிஞ்சிடாது. இந்த வசதி உங்களுக்குத் தொல்லைன்னா நீங்க பகிர்ந்துக்கறதையே நிப்பாட்ட வேண்டி வரும்
பி.கு- 2 : கூகுள் டாக்/சேட் ல உங்களோட பேசுனவங்க கூகுள் ரீடர் உபயோகப்படுத்தறாங்கன்னா மட்டும் தான் தெரியும். மத்தபடி கூகுள் முகவரிப் புத்தகத்தில இருக்கற மத்தவங்களைப் பத்தி கவலைப்பட தேவையில்லை. அவங்களுக்குத் தெரியாது.
இது சம்பந்தமான பதிவுகள்
1. New feature: Sharing with Friends புதிய வசதியின் அறிமுக இடுகை
2. Google reader shares private data: Ruins Christmas
3. இது இப்படித்தான் இருக்கும் - இந்தப் பிரச்சனைக்கு கூகுளின் பதில்
Dec 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment