Dec 26, 2007

1, 20,000 பென்குயின்களின் மாநாடு

எப்பவாவது காக்கா எல்லாம் கூட்டம் போட்டு பார்த்திருக்கீங்களா. எனக்கு புரியாத புதிர்ல அது ஒன்னு. என்னோட கிராமத்திலயும் சரி, அதுக்கு பின்னாடி வந்த நகரத்து வாழ்க்கையிலயும் சரி, சாயங்கால வேளையில நான் அடிக்கடி பார்த்த ஒரு விசயமா மாறி போனது இந்த காக்கா மாநாடு. இந்த இடம் அந்த இடம்னு கிடையாது எதாவது ஒரு இடத்தில கூட்டமா சில நூறு காக்காய்கள் உக்காந்திருக்கும். நானும் எதாவது காக்கா மைக் வைச்சி மத்த காக்காயை எல்லாம் டார்ச்சர் பண்ணுதான்னு தேடுவேன். ஆனா இதுவரைக்கும் அந்த மாதிரி எதுவும் பார்க்க முடிஞ்சதில்லை. எதுக்காக கூடுது என்ன பண்ணுதுன்னு இதுவரைக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

இந்தியா விட்டு கனடா வந்த உடனே என்னைய நட்போட வரவேற்ற எனக்கு தெரிஞ்ச நண்பர்ல காக்காயும் ஒருத்தர். இங்க அவங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைவுன்றதால காக்காய் மாநாடு பார்த்ததில்லை. ஆனா அதே மாதிரியான ஒரு மாநாட்டை கடற்பறவைகள்(சீகல்) நடத்துவாங்க. பக்கத்தில இருக்கற மைதானத்தில இது அடிக்கடி நடக்கும் மைதானம் முழுசும் அந்த நேரத்தில நிரம்பி வழியும். இப்படி கூட்டம் போடுறவங்க, பக்கத்தில இருக்கற ரோட்டையெல்லாம் மறைக்க மாட்டாங்க. அதனால நாம வழக்கம் போல போய்ட்டு வந்துட்டு இருக்கலாம். இவங்களோட மாநாடு எதோ சூரியக் குளியல் போடறதுக்காக உக்காந்திருக்கற மாதிரி இருக்கும். காக்காய் மாநாடும் சரி, சீகல் மாநாடும் சரி எனக்கு பார்க்கப் பிடிச்ச ஒரு சில விசயங்கள்ல ஒன்னு. சில நூறு பறவைகள பார்க்கறதுக்கு அவ்வளவு ஆச்சரியப் படுற எனக்கு ஒரு இலட்சம் பறவைகள் மாநாடு போடுறாங்கன்னு சொன்னா மூர்ச்சையாகிற மாட்டனா?

தெற்கு ஜார்ஜியான்ற ஒரு இடத்தில இனப்பெருக்கத்துக்காக கிட்டத்தட்ட ரெண்டு இலட்சம் பென்குவின்கள் கூடுமாம். கீழ இருக்கற படம் கிட்டத்தட்ட 1,20,000 பென்குவின்கள் குவிஞ்ச்சப்ப எடுத்தது.





பிகு 1: இந்த மாதிரி நாய்களை கவனிச்சி வந்தவரு அதைப் பத்தி ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்காரு. வாசிச்சி பாருங்க.

No comments: