Dec 27, 2007

அடுத்த அஞ்சு வருசத்தில தொழிநுட்பம் எங்க இருக்கும்?

ஐபிஎம் தன்னோட சமீபத்திய வெளியீட்டில அடுத்த அஞ்சு வருசத்தில நம்மளோட வாழ்க்கைய மாத்தப் போற அஞ்சு எதிர்கூறல்களை வெளியிட்டிருக்காங்க. இது இப்ப இருக்கற சந்தை நிலவரம், போக்கு, தங்களோட ஆய்வகத்தில பண்ணுற ஆராய்ச்சிகள் இதை ஒட்டி சொல்லியிருக்காங்க.

அவங்க சொல்லியிருக்கற அஞ்சு தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

1.எளிமையான பசுமை ஆற்றல் மற்றும் அது ஏற்படுத்தப்போகும் சிக்கனம்
நாம எப்படி ஆற்றலை உபயோகப்படுத்தப்போறோம்ன்றது சுத்தமா மாறிப்போகும். நாம உபயோகப்படுத்தற ஒவ்வொரு உபகரணத்தையும்(அடுப்பு, வாஷிங் மெஷின்,போன்றவை) நம்மளோட அலைபேசியாலயோ இல்லை இணைய உலாவியாலயோ இயக்கக்கூடியதா இருக்கும். இப்ப அலைபேசியில நிமிடங்களை கணக்கெடுத்துக்க முடியறமாதிரி ஆற்றல் உபயோகத்தையும் கவ்வனிக்க கூடியதா இருக்கும். அதேமாதிரி ஆற்றல் மூலங்களையும்(சூரிய ஆற்றல்,காற்றாற்றல்) தேர்ந்தெடுக்கக்கூடியதா இருக்கும். ஆற்றல் மூலங்களும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால சிக்கனமானதாவும் பக்கதிலயே தயாரிக்கப்படுறதாவும் மாறும்


2. வாகனம் ஓட்டுதல்

ரோட்டுக்கும் வாகனத்துக்குமான தொடர்பாடல்கள் அதிகரிக்கும். இதனால பாதுகாப்பான பயணங்கள் சாத்தியமாகும். பெரிய நகரங்களும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால தங்களோட போக்குவரத்து நெரிசல்களை எளிதா கட்டுப்படுத்தக்கூடியதா இருக்கும். மனிதர்கள் நேருக்கு நேரா மோதாமா போறதுக்கு காரணமான அனிச்சை, வாகனங்களுக்கும் தொழில்நுட்பம் மூலமா வந்துரும்.

3.தெரிந்து சாப்பிடுதல்
இப்ப பல இடத்திலருந்து வர்ற உணவுகளையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். அந்த உணவு எங்கருந்து வருது, எப்டி தயாரானது எதுவும் தெரியாது. இனி வரப்போற காலங்கள்ல ஒரு பழத்தை எடுத்தீங்கன்னா அதைப்பத்தி ஆதியோட அந்தமா தெரிஞ்சிக்க முடியும்.

4.செல்போனே எல்லாம்
இப்ப இருக்கற மாதிரி தனியா ஒரு பர்ஸ் எல்லாம் வைச்சிக்கத்தேவையிருக்காது. நம்மளோட கிரெடிட் கார்டு, ஐடி கார்டு எல்லாம் தேவைப்படாது. நம்மளோட செல்போனே போதுமானதா இருக்கும். யாராவது போட்டிருக்கற சட்டை நமக்கு பிடிச்சிருந்து அதை போட்டோ எடுத்தா, அந்த சட்டைய பத்தின எல்லா விவரத்தையும் தேடி கொடுக்ககூடியதா இருக்கும்.

5. சிறப்பு புலன்களுடனான மருத்துவம்

மருத்துவம்ன்றதே இனி வரப்போற வருசங்கள்ள வித்தியாசமா இருக்கும். தொழில்நுட்பம் டாக்டர்களுக்கு சிறப்பு சக்திகளை கொடுக்கும். உங்களோட பிரச்சனைய ஏற்கனவே அந்த பிரச்சனை உள்ளவங்களோட ரொம்ப எளிதா ஒப்பிட்டு பாக்க முடியும்.


இவங்க சொல்லியிருக்கறதில பாதி ஏற்கனவே உபயோகத்தில வந்திருக்கறதால அஞ்சி வருசத்தில இதெல்லாமே முழுசா புழக்கத்துக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்தியாவும் அஞ்சி வருசத்துக்குள்ள வரும்னு நம்புவோம்.