இப்ப சந்தோசமான விசயம் என்னன்னா அவங்களோட வாழ்க்கை புத்தகமா வருது. தமிழ்ல மட்டுமில்லாம ஆங்கிலம், மலையாளம் மொழிகள்லயும் மொழிபெயர்க்கப்பட்டு வருது. இந்தப் புத்தகத்தைப் பத்தி பத்ரி எழுதியிருக்கற முன்னோட்டம்
திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.இந்தப் புத்தகம் சென்னை புத்தக காட்சியில வெளியாகுது.
வலைப்பதிவுகள்ல அவங்க அடைஞ்ச வெற்றியை எழுத்துலகத்திலயும் அடைஞ்சி தன்னோட இலட்சியத்தை எட்டுறதுக்கு அவங்களுக்கு இந்த முனியாண்டியோட வாழ்த்துக்கள்
புத்தக அட்டைப்படங்கள்.
4 comments:
வாவ்...!
வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் :))
லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு வாழ்த்துக்கள். சமூகத்தால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத அவரைப் போன்றவர்களின் மனநிலையையும், வாழ்க்கைப் பிரச்னைகளையும் பலரும் புரிந்துகொள்ள இப்புத்தகம் ஒரு கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
லிவிங் ஸ்மைல் மேல் எனக்கும் மரியாதை உண்டு. அவருடைய பதிவில் இந்தப் புத்தகத்தை பற்றி குறிப்பிடவில்லை. விளம்பரம் வேண்டாம் என்று நினைப்பார் போல. அரியத் தந்தமைக்கு நன்றி.
மாற்றங்களை தரலாம் என்றே நானும் எதிர்பார்க்கிறேன்.
உடுக்கை யின் பதிவிற்கும், நண்பர்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
Post a Comment