பறவைக் காய்ச்சல் இந்தியா முழுக்க சுத்தி சுழண்டுக்கிட்டு இருக்கு. அதுலயும் தமிழ்நாட்ல கொஞ்சம் அதிகம்னே நினைக்கிறேன். நாமக்கல்ல சுத்தி இருக்கிற எடமெல்லாம் கோழிப் பண்ணைகள் தான். அங்க மட்டும் இல்ல மத்த இடங்கள்லயும் சுய தொழில்ன்ற அளவில நிறைய கோழிப் பண்ணைகள் இருக்கு. எங்க பக்கம் எப்டியும் கிராமத்துக்கு ஒன்னு ரெண்டுன்ற ரேஞ்சுல ஒவ்வொரு ஊர்லயும் கோழிப்பண்ணைகளை பாக்கலாம்.
கோழி இல்லாம சாப்பாடு இறங்காத மக்களை, இப்ப இருக்கிற நிலமை நேத்து இருந்த நிலைமைன்னு போட்டு நண்பன் ஒரு கார்ட்டூன் அனுப்பி வைச்சிருந்தான். நீங்களும் பாருங்க.
6 comments:
அங்க அவனவன் உயிர கையில புடிச்சுகிட்டு கோழிக்கு சீக்கு வந்துரக்கூடாதேன்னு இருப்பான் முனியாண்டி!
கும்பல் கும்பலா கொல்லப்பட்ட/படற கோழிகள், இதை மட்டுமே வருமானமா நம்பியிருக்கற குடும்பங்கள, அசைவம் இல்லாம சாப்பாடா அப்டின்றவங்க, முக்குக்கு நாலு முனியாண்டி விலாஸ் ஓனருங்க அப்டின்னு இந்த நிகழ்வுக்கு பின்னாடி இருக்கற வலிகள் கொஞ்ச நஞ்சமில்லை.
என்ன, இதை கோழியை கொத்துக்கறி போடுற ஒருத்தனோட மனோபாவத்தை சொல்ற கார்ட்டூன் அப்டின்ற அளவுல மட்டும் தான் பாத்தேன்.
நன்றி தங்கமணி
வரிகளை மாத்திட்டேன் தங்கமணி
சீரியஸா எடுத்துக்காதீங்க!
யார் நிலைமை எப்படியோ., என்னமோ எங்கூட்டு ஆளுக நிலைமை நீங்க சொலற மாதிரித்தான் இருக்கும்னு நினைச்சுகிட்டேன். கொத்துக் கொத்தா கோழி சாகறது 'ம்..' ந்னா நடந்துரும். சாதரண காய்சல் கோழிக்கு வந்தாலே ஒரு ஆளு முழு நேரமும் கோழிப்பண்ணையிலேயே செலவிடணும். சாதரண நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் எளிதல் நோய் கொள்ளும். படம் நல்லாயிருக்கு.
அப்டிப்போடு: சாதாரணமா கழுத்தை திருகி குழம்பு வைக்கிறவங்க கூட அதுவாவோ இல்லை சீக்கு வந்தோ செத்து போய்ட்டா ரொம்ப அப்செட் ஆகி ஒக்கார்ரத பாத்திருக்கேன். இப்ப சொல்லவே வேண்டியதில்லை.
Post a Comment