May 2, 2006

வாழத்தானே வாழ்க்கை....

ஊர் சுத்துறது, விளையாடுறது, கதை பேசுறதுன்னு எல்லா வேலையும் முடிச்சிட்டு ஒரு குளியலையும் போட்டுட்டு மணி எட்டே முக்கால் ஆச்சா, ஆச்சான்னு (இது தேவதைகளோட நேரம்!!!) கடிகாரத்தோட கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு மெஸ்ஸுக்கு போறதுக்காக ரூமை விட்டு வெளிய வரும்போது, போன் வரும். என்ன ஜெண்டில்மேன் (என்னையும் ஜென்டில்மேன் ஆக்குனதுக்கு நன்றி ஜென்டில்மேன்) என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. சாப்பாடு ஆச்சா..

கேக்குறவருக்கு புயல் பூகம்பம் வந்தாலும் எட்டே முக்காலுக்கு மேல தான் இவனுக (இதுலயும் கோஷ்டி) சாப்ட போவானுங்கன்னு தெரியும். தெரிஞ்சிக்கிட்டே நக்கலா சிரிச்சிக்கிட்டே (அந்த சிரிப்பு) கேப்பாரு. இந்த கேள்வியோட அர்த்தம் எங்க சாப்ட போகலாம். எங்க சாப்ட போகலாம்ன்றத விட இப்ப பரோட்டா பிளாசா போலாமன்றது தான் இதுக்கு அர்த்தம் (முடிவு பண்ணிட்டு கேக்குற ஆட்களை...). ஓட்டை யமாகாவை (Oh.. my love!!) கெளப்பிகிட்டு அவரு இடத்துப்பக்கமா போனம்னா, யா!!!! ன்னுட்டு வருவாரு. அப்டியே நியூ பெல் ரோட்ல இறங்கி வண்டியோட இஞ்சினை முழு ஸ்பீடுல சுத்த விடுறதுக்குள்ள(பின்னாடி இருக்கறவர் அலர்றது வண்டியோட சத்தத்தில அவருக்கே கேக்காது) ராமையா காலேஜ் வந்திரும். அப்புறம் சந்து பொந்துன்னு புகுந்து சஞ்சய் நகரை பிடிச்சா அங்க இருக்கற ஒரு ரோட்டுக் கடையோட பேரு தான் பரோட்டா பிளாசா. கடை தான் ரோட்டுக் கடையே தவிர பரோட்டா( நார்த் இந்தியன்- பஞ்சாபி) நல்லாருக்கும். தொட்டுக்கறதுக்கு தயிர் மட்டும் தான். ஆனா சூப்பரா இருக்கும். ருசியோட சேத்து விலையும் அதிகம் தான். ஒரு ஆறு மாசம் வாரத்துக்கு ரெண்டு மூணு நாளுன்னு நினைச்சப்பல்லாம் போய் இந்த மாதிரி தின்னுக்கிட்டு இருந்தோம். இது போக வாரத்தில (கோட்டா) ஒரு நாள் வாழ்க்கை வாழ்வதற்கேன்னு MG ரோடு, சபீனா பிளாசான்னு பொறுக்க முடிஞ்சது. அந்த நண்பர் டாட்டா காமிச்சிட்டு போனதுக்கப்புறம்.....

அடுத்து இன்னொரு குரூப் சேந்துச்சி. சந்தோசத்தை கொண்டாடுறதை பாத்திருப்பீங்க, சோகத்தை சந்தோசமா கொண்டாடுனதை பாத்திருக்கீங்களா. இந்த குரூப் எல்லாம்(தறுதலைங்க) இந்த வகை. வாழ்க்கையோட ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கொண்டாட்டம்னு, ஒவ்வொரு நாளும் கொண்டாடுறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருந்திச்சி. காரணம் எதுவும் கிடைக்கலன்னா அதே ஒரு காரணமா சொல்லிக்கிட்டு அதுக்கும் ஒரு பார்ட்டி. சுத்தி இருக்கறவனுங்க சாபமா விட்டாலும் யாரும் திருந்தக் கிடையாது.

டீக்கடையில உக்காந்துக்கிட்டு, டீக்குடிக்க பிடிக்கலை எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும்னு யாராவது நின்னா எதுவும் சொல்ல முடியாது. நேரா ஐஸ்கிரீம் பார்லர் தான். நாங்க இருந்த இடத்தில இருந்து ரெண்டு கிமீ ல மல்லேஸ்வரம் சர்க்கிள்ல புதுசா ஓவன்ஸ் னு ஒன்னு திறந்திருந்தாங்க. ஒரு ஐஸ்கிரீமுக்கு மூணு அல்லது நாலு ஸ்கூப் போட்டு டிரெஸ்ஸிங் பண்ணி தருவாங்க. நல்லா இருக்கும். குரூப்ல இருந்ததெல்லாம் அந்த மாதிரி ஐஸ்கிரீம் ரெண்டு சாப்டுட்டு இன்னொன்னு ஆர்டர் பண்ணலாமான்னு கேக்கிற ஆட்கள். அதனால, போரடிக்கறப்பெல்லாம் போய் பாத்துட்டு வர்ற எடமா ஓவன்ஸ் மாறி போச்சி. ஒரு வாரம் அந்த பக்கம் போகலைன்னா ஏதோ கொலைக்குத்தம் பண்ண மாதிரி பேச ஆரம்பிச்சிருவாங்க.

இது ஒரு வகைன்னா,உப்பும் இல்லாம உறைப்பும் இல்லாம மெஸ்ல சாப்டு சாப்டு நாக்கு மரத்துப் போச்சின்னு ஏதாவது காரணத்தை கண்டு பிடிச்சிட்டு, பரோட்டா சாப்டுறதுக்காக அப்பப்ப மல்லு(VK) மெஸ்ஸை(யஷ்வந்த்புரா ரெயில்வே ஸ்டேசன் எதிர்க்க) தனியாவோ இல்லை கூட்டமாவோ எட்டிப் பாக்குறது உண்டு. அப்புறம் சோப்பு வாங்கணும், ஷாம்பு வாங்கணுன்னு ஒரு காரணத்தை கண்டு பிடிச்சிக்கிட்டு பத்து ரூவா சோப்பு வாங்க நாலு பேரு போயி வந்தது வந்துட்டோம்னு அப்டியே கோபிகா பக்கமா போய், பட்டன் இட்லியும் மசால் இட்லியும் கட்டி முடிச்சுட்டு என்ன இருந்தாலும் மெஸ் மாதிரி வராதுன்னு கதை பேசிக்கிட்டே ரெண்டு கிமீ நடந்துகிட்டே வர்ற வழியில இருக்கறதெல்லாம் பொறுக்கி தின்னுக்கிட்டே வந்ததும் உண்டு. இதெல்லாம் ரெகுலரா நடக்கும். இதுல அப்பப்ப யாருக்காவது சாமி வந்திருச்சின்னா அப்ப நடக்கிறது தான் கூத்தே!!!

அந்த வகையில....
ஒரு சாயங்காலம் ஒருத்தன் வந்து எனக்கு வெளிய போய் குல்கந்து சாப்டணும்னு வந்து நிக்கிறான். கையில இருந்தது சில சின்ன காந்திகளும் சில காசுகளும் தான். சரி வா போகலாம்னு போனா அங்க போய்ட்டு வெறும் குல்கந்து டேஸ்டா இருக்காது, அதோட ஐஸ்கிரீமும் டிரை ஃப்ரூட்சும் போட்டு சாப்டாதான் நல்லா இருக்கும்ற வக்கணை வேற. அப்புறம் பாக்கெட்ல இருந்த எல்லா சில்லறையையும் கூட்டிப் பாத்து ஒரெ ஒரு கால் ரூவாய மட்டும் மீதி வைச்சிட்டு மீதி எல்லாத்தையும் கல்லாவுல கொட்டுனோம். கடைக்காரன் ஏற இறங்கப் பாத்துட்டு குல்கந்து ரெடி பண்ணி குடுத்தான். நல்ல வேலை அன்னைக்கு வேற யாரும் என்னைய விட்டுட்டுப் போய்ட்டு வந்துட்டாங்கன்னு எப்பயும் குடுக்கற இம்சைய குடுக்கலை. சாதரணமா யாரையாவது விட்டுட்டு போனது தெரிஞ்சி போச்சின்னா அதுக்காக மறுபடியும் போயாகணும். ஒரு சமாதானமும் எடுபடாது.

அப்புறம் நிறைய ஸ்பெசல் காரணங்கள் கண்டு பிடிச்சதுக்கப்புறம் எல்லை விரிவடைஞ்சி சுத்தி இருக்கற இடங்கள்ல எல்லாம் போய் கொட்டித்தீர்த்தோம்.

சந்தோசமா சுத்திகிட்டு இருந்தப்ப ஒருநா மக்க பொட்டியக் கட்டி போய்த்தொலைன்னு நாடு கடத்தி விட்டுட்டாங்க. வந்த புதுசுல ஒன்னும் புரியாம யாரும் தெரியாம ஒரு மாதிரியா தான் இருந்தது. இப்ப இங்கயும் அதே மாதிரி ஒரு கும்பல்.

பனி சூப்பரா இருக்கு ஸ்கீயிங் போகலாம்.

வாழ்க்கை ரொம்ப டிரையா இருக்கு Bowling போகலாம்.

நாம இருக்கற எடம் tidal wavesக்கு பேமஸ். பக்கத்தில இருக்கற ஓடையிலயும் tidals இருக்கும். வா போய் பாக்கலாம்.

ஸ்பிரிங் ஆரம்பிச்சிருச்சி எங்கயாவது வெளிய போகலாம்.
ஒரு Barbeque மாதிரின்னா நல்லா இருக்கும்

சைக்கிள் இருந்தா இந்த நேரத்தில ஊர் சுத்துறதுக்கு நல்லா இருக்கும். இந்த வாரம் சைக்கிள் ஏலம் நடக்குது நீயும் வர்றியா....

இந்த பதிவை சைக்கிள் ஏலத்தில சைக்கிள் வாங்குனதுல ஆரம்பிச்சி barbeque ல போய் தின்னுட்டு நடக்க முடியாம நடந்து வந்ததில முடிக்கணும்னு நினைச்சேன். எங்கங்கயோ போயிருச்சி...

7 comments:

Anonymous said...

supperungooo

Anonymous said...

supperungooo

Thangamani said...

//இந்த பதிவை சைக்கிள் ஏலத்தில சைக்கிள் வாங்குனதுல ஆரம்பிச்சி barbeque ல போய் தின்னுட்டு நடக்க முடியாம நடந்து வந்ததில முடிக்கணும்னு நினைச்சேன். எங்கங்கயோ போயிருச்சி...///


நடந்துங்க மக்களே!


இப்பத்தான் இங்க தாய் ரெஸ்ட்டாரண்ட் போய்ட்டு நல்லாச்சாப்பிட்டு கடைசியா வாழைப்பழத்தை பொறிச்சு அது மேல ஐஸ்கிறீம் போட்டுத்தர்ரதை சாப்பிட நல்லாத்தான் இருக்கு.

ஆனாலும் பரோட்டா பிளாசா காலங்கள் இப்போதும் இன்னும் உருகாமல் ஆங்காங்கு இருக்கிற பனிக்குவியல் மாதிரி இன்னும் இருக்கு ஜெண்டில்மேன்.

:)

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி அனானி..

ஜெண்டில்மேன் அது எப்டி சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் முனியாண்டியப் பாத்து திங்கிற கதையா சொல்றீங்க.

ஒருத்தனுக்கு போன் பண்ணா ப்ரைடு ரைசும், கோபி மஞ்சூரியனும் கட்டிக்கிட்டு இருக்கேன்றான்

இன்னொருத்தரு போன் பண்ணி அவர் வீட்டு மெனுவை சொல்லி காய விடுறாரு.

நீங்க பொறிச்ச வாழைப்பழத்தில ஐஸ்கிரீம். ம்ம்ம்ம்ம்ம்

நடத்துங்க....

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//பனி சூப்பரா இருக்கு ஸ்கீயிங் போகலாம்.

வாழ்க்கை ரொம்ப டிரையா இருக்கு Bowling போகலாம்.

நாம இருக்கற எடம் tidal wavesக்கு பேமஸ். பக்கத்தில இருக்கற ஓடையிலயும் tidals இருக்கும். வா போய் பாக்கலாம்.

ஸ்பிரிங் ஆரம்பிச்சிருச்சி எங்கயாவது வெளிய போகலாம்.
ஒரு Barbeque மாதிரின்னா நல்லா இருக்கும்

சைக்கிள் இருந்தா இந்த நேரத்தில ஊர் சுத்துறதுக்கு நல்லா இருக்கும்.//

முனியாண்டி,

மக்கா.. நம்ப ஊருக்கு வாங்க-னு சொன்னா வந்துட்டுப் போறோம். ;)

பெரும்பாலும் வரலாம்! ஓகஸ்ட்-ல..

அப்புறம், நேத்திக்கு மக்கள்ஸோட போன மெக்ஸிகன் உணவகத்தில் நான் சூப்பு மட்டும் குடிச்ச சோகக்கதையை எங்க போய் சொல்றது. :( ;)

---

பெங்களூர்ப் புராணம் + சொந்த ஊர்ப்புராணம் + இப்ப இருக்கிற ஊர்ப்புராணம்னு எடுத்து விடுங்க மக்கா.

- உடுக்கை முனியாண்டி said...

//மக்கா.. நம்ப ஊருக்கு வாங்க-னு சொன்னா வந்துட்டுப் போறோம். ;)//
இதெல்லாம் சொல்லணுமா என்ன!!!

//பெரும்பாலும் வரலாம்! ஓகஸ்ட்-ல..//
வாங்க, வாங்க. இந்த இடம் அமைதியான அருமையான எடம். முழு கனடாவுமே இப்டி தான் இருக்குமான்னு தெரியாது..

//அப்புறம், நேத்திக்கு மக்கள்ஸோட போன மெக்ஸிகன் உணவகத்தில் நான் சூப்பு மட்டும் குடிச்ச சோகக்கதையை எங்க போய் சொல்றது. :( ;)//
நல்லவேளை சோக புராணம் பாடுறதுக்கு துணைக்கு ஒருத்தரு இருக்காங்க.

//பெங்களூர்ப் புராணம் + சொந்த ஊர்ப்புராணம் + இப்ப இருக்கிற ஊர்ப்புராணம்னு எடுத்து விடுங்க மக்கா.//
ஆடுன ஆட்டம் அந்த மாதிரின்றதால எதை பேசணும்னு நினைச்சாலும் பழசெல்லாம் நான் நான்னு முன்னாடி வந்துருது..

நன்றி மதி

Anonymous said...

ம்ம்...நடத்து ராசா நடத்து..