Jul 15, 2006

டாக்டர் . வெங்கடசாமி - அரவிந்த் கண் மருத்துவமனை

Intelligence and capability are not enough. There must be the joy of doing something beautiful
Dr.G.Venkatasawamy


"Whenever I visited Madurai, for me it was a pilgrimage to visit the Arvind Eye Hospital and meet the great soul, Dr. G. Venkataswamy, who gave light to more than a hundred thousand patients -- Dr APJ Abdul Kalam



அரவிந்த் கண் மருத்துவமனை அப்டின்னா இங்க பல பேருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதோட நிறுவனர் பத்மஸ்ரீ. டாக்டர் வெங்கடசாமி போன வாரம் தன்னோட 87வது வயசுல இறந்து போயிட்டாரு. அதைப் பத்தி யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை(இல்லை என் கண்ல படலையா). சரி அவரு அவ்வளவு முக்கியமானவர் இல்லைன்னு எல்லாரும் விட்டுட்டாங்க போலருக்கு.


1948ல்ல தன்னோட கை விரல்களோட பாதி செயல் திறனை இழந்ததுக்கப்புறமா தன்னோட கண் மருத்துவரா ஆகிறதுக்கான் மேல் படிப்புகளை ஆரம்பிச்சவரு. கடைசி வரைக்கும் தன்னோட cripple ஆன விரல்களால தான் அறுவை சிகிச்சைகளை பண்ணிருக்காரு. அவர் மட்டும் தனியொருத்தரா ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை பண்ணியிருக்காரு. இது ஒரு தனி மனுசனோட ஆர்வம், உழைப்பு, ஈடுபாடு.இன்னைக்கு அவர் பேர் சொல்ல வைச்சிருக்கற விசயங்கள்ல இதுவும் ஒன்னுன்னு தான் சொல்ல முடியும். ஏன்னா முக்கியமான விசயங்கள்னு சொன்னா அது அவரோட சமூகப் பார்வை.




இன்னைக்கு பல கிராமங்கள்ல கண் பார்வைக் குறைபாடுகள் கம்மியா/இல்லாம இருக்குன்னா அதுக்கு முழு முதல் காரணம் இவர் தான். நடமாடும் கண் பரிசோதனை மையத்திட்டங்களை உருவாக்கி மருத்துவர்களை மக்களை நோக்கி அனுப்புனது இவர் தான். இது இவர் அரசாங்கத்தோட ஆதரவுல ஒரு டாக்டரா பண்ணினது.

ஆனா அரசாங்க வேலையில இருந்து ரிட்டையர் ஆனதுக்கப்புறமா பண்ணினது தான் மகத்தான விசயங்கள். சமூகத்தின் மேல அக்கறை உள்ள யாரும், உறுதியான செயல் திட்டங்களோட இறங்குனா வயசையெல்லாம் தாண்டி ஜெயிக்கமுடியும்னு காமிச்சிருக்காரு. தன்னோட ரிடையர்மெண்ட் அப்ப சொந்த முயற்சியில 11 படுக்கை வசதியோட ஆரம்பிச்சது தான் இந்த அரவிந்த் மருத்துவமனை. இன்னைக்கு உலக அளவுல பேர் சொல்ற அளவுக்கு இருக்குன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவர் மட்டும் தான் காரணம்.

http://www.aravind.org

இன்னைக்கும் இந்த மருத்துவமனைகள் (மதுரை தாண்டி இன்னும் சில இடங்கள்ல இருக்கு) ஏழை மக்களை முன்னிறுத்திதான் தங்களோட பயணத்தை தொடர்ந்து கிட்டு இருக்கு. அரசாங்கத்தை எதிர்பார்க்காம தங்களோட செலவுலயே மக்களை நோக்கிப் பயணம் செஞ்சி இன்னும் நல்லாவே பண்றாங்க. தங்களோட மருத்துவ செலவை கவனிச்சிக்க முடிஞ்சவங்ககிட்ட வாங்குற பணம் மறுபடியும் ஏழைகளுக்கான சிகிச்சை, ஆராய்ச்சின்னு தான் செலவு செய்யப் படுது. இவங்களோட ஆராய்ச்சியால சில ஆயிரங்களுக்கு விக்கப் படுற கண்ணுக்கு உள்ள வைக்கப்படுற லென்ஸ் இப்ப சில நூறுகளுக்கு கிடைக்குது. மறுபடியும் இதுவும் சமூகத்தை முன்னிறுத்திதான்.

இவரைப் பத்தி எழுதணும்னா நிறைய எழுதலாம். ஆனா ஒரே ஒரு லிங்க் மட்டும்


இந்த அமைப்பு பத்தி எழுதப் பட்டுள்ள ஒரு கட்டுரை



அவர் கட்டுக்கோப்பா வளர்த்த இந்த மருத்துவமனை/அமைப்பு அவரோட எண்ணங்களின்படி இன்னும் சிறப்பா வளரும்னு நம்புவோம்.

இந்த மண்ணின் மைந்தனா, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்த இந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலிகள்

11 comments:

- உடுக்கை முனியாண்டி said...

blogger சொதப்புனதால இந்த பதிவு மறுபதிவா

- உடுக்கை முனியாண்டி said...
This comment has been removed by a blog administrator.
- உடுக்கை முனியாண்டி said...

புதுமைவிரும்பி

இதுவரை அரவிந்த் கண் மருத்துவமனையும், மற்ற தனியார் மருத்துவமனைகள் போல காசு பிடுங்குகின்ற இடம் என்று தான் நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி.

This is my comment for your post on Aravind eye Hospital. As I am not able to post there, I am posting it here.

- உடுக்கை முனியாண்டி said...

குமரன் (Kumaran)

திரு. முனியாண்டி அவர்களே. கண்மருத்துவர் திரு. வேங்கடசாமி அவர்களின் மறைவு பற்றித் தெரிவித்ததற்கு மிக்க நன்றி. அந்தப் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை.

நீங்கள் சொன்னமாதிரி அவர் ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர் செய்த அரும்பணிகள் மிகச் சிறப்பானது. நான் தற்போது மதுரையில் இல்லை. அதனால் அவர் மறைவு பற்றி அறியவில்லை. அதனை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி. அவரைப் போன்ற மாமனிதர்கள் நம் நாட்டிற்கு மிகவும் தேவை.

அந்த மாமனிதருக்கு என் பணிவான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி புதுமை விரும்பி

எனக்குத் தெரிஞ்சி கண் பார்வை குறைபாடுள்ள ஏழை மக்களை இன்னும் இவங்க தேடிப் போய்க்கிட்டு தான் இருக்காங்க.

இவங்களோட குறிக்கோளே நவீன கண் மருத்துவம் சாதரண மக்களை சென்று அடையக்கூடிய விலையில இருக்கணும்ன்றது தான்

நன்றி குமரன்

அவர் இறந்தது போன வாரம் 7ம் தேதி. எனக்கும் இன்னைக்குத் தான் என்னோட நண்பன் மூலமா தெரிய வந்தது. இப்ப சில வாரம் முன்னாடி வரைக்கும் நோயாளிகளைப் பாத்துக்கிட்டு இருந்திருக்காரு.

அப்புறம் நானும் சில வருசங்களுக்கு முன்னாடி அவங்களோட ஆராய்ச்சிப் பிரிவை பார்க்கற வரை இவங்களை ஏழை மக்களுக்கான ஒரு நல்ல மருத்துவமனைன்ற அளவுல தான் தெரிஞ்சி வைச்சிருந்தேன்.

அங்க போய் பார்த்ததுக்கப்புறமா தான் எவ்வளவு தூரம் தொலைநோக்கோட செயல்படுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

நிச்சயமா அவர் ஒரு மாமனிதர் தான்

Thangamani said...

இப்படியான மனிதர்கள் உண்டாக்குகிற சமூக மாற்றங்கள் உன்னதமானவை. நான் அரவிந்த் மருத்துவமனை ஒரு கண் நோய்கள் தொடர்பான சிறப்பான சிகச்சையளிக்கும் மருத்துவமனை என்ற அளவிலேயே அறிந்திருந்தேன். கட்டுரை நிறுவனரைப்பற்றியும், அமைப்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவியது.
அவருக்கு என் நன்றிகள்!
நன்றி.

Vassan said...

நன்றி திரு.முனியாண்டி, ஒரு நல்ல மனிதரைப் பற்றிய தகவல்களுக்கு.

Anonymous said...

Homage to the great soul. trichy Dr.Joseph has also reached out to the poor

இளங்கோ-டிசே said...

அருமையான மனிதர் பற்றி தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி முனியாண்டி.

Anonymous said...

Thanks Mr. Muniyandi,
Very good information. I also visited once in coimbatore. And as you told their visits to villages are very popular. They arrrnaged it with arima sangam (lions club). and they gave full free treatment.May GOD rest his soul in peace.
Mahesh.C.V.

Unknown said...

I got the vitals details about the Dr.Venkatsamy.