Dec 5, 2006

புது வெள்ளை மழை!!!!!

இந்த வருசத்துக்கான பனிப் பொழிவு எங்க ஊர்ல நேத்தைக்கு தொடங்கிருக்கு. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னாடி பனி விழுந்தாலும், அவங்க வந்து சும்மா பிரசண்ட் மட்டும் குடுத்துட்டு போய்ட்டாங்க.ஆனா நேத்திக்கு காலையில அதுவும் நான் ஆபிஸ் கிளம்புறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி வந்தவங்க நைட்டு வரைக்கும் ஊரை நிரப்பிக்கிட்டு இருந்தாங்க. நேத்து ஒரே நாள்ல மட்டும் 12-15 செமீ அளவுக்கு பனி விழுந்திருக்கு. இந்த ஊர்ல ஒவ்வொரு சீசனுமே அழகு தான். வசந்தகாலம், கோடைக்காலம்,இலையுதிர்காலம், குளிர்காலம்னு ஒவ்வொரு காலமும், பொண்ணுங்க டிரெஸ் மாத்தி கெட்டப் மாத்தற மாதிரி, ஊரோட கெட்டப்பே மாறிடும். நேத்து பனிப் பொழிவு அதிகமா இருக்குன்னு ஆபிஸை பங்க் அடிச்சிட்டு மிச்சம் மீதியிருக்கிற தூக்கத்தையெல்லாம் தூங்கி கழிச்சேன். நேத்து முழுசும் வெளிய போகாதினால, இன்னைக்கு காலையில, அந்த இளம்வெயில்ல வெளிய நடக்க ஆரம்பிச்சா ஊரெல்லாம் படர்ந்திருக்கற பனி அப்டியே மனசை அள்ளிக்கிட்டு போகுது. என்னதான் இன்னும் சில மாசங்களுக்கு பனியில தான் வாழ்க்கைய ஓட்டணும்னாலும் ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கற முதல் பனியோட அழகே தனி தான். காலையிலயே போட்டோ எடுக்கணும்னு நினைச்சது மறந்து போயி சாயங்காலம் சூரியன் மறையறதுக்கு முன்னாடி சில படங்கள் எடுத்தேன். இங்க உங்களுக்காக.

எல்லாமே வேலை பாக்கற இடத்துக்கு பக்கத்திலருந்து எடுத்தது தான்.















இது மட்டும் எங்க வீட்டுக்கு முன்னாடி எடுத்தது

15 comments:

Anonymous said...

Muniyandi Annae,

Photova partahalae yennakku kuliruthu. Neenga yentha ooru?

- உடுக்கை முனியாண்டி said...

அனானி,

நான் இருக்கறது கனடாவோட கிழக்கு கடற்கரை

இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு நன்றி

Anonymous said...

நல்லா இருக்கு படங்கள். அதென்ன நாய், அலாஸ்கன் டெர்ரியர் மாதிரி இருக்கு?

Anonymous said...

அருமையான புகைப்படங்கள்.
சில்லுன்னு இருக்கு.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி அனானி. இந்த நாய்க்கு முகம் ஓநாய் மாதிரி இருக்கும். எனக்கு அவ்வளவு தான் தெரியும்.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி பாலாஜி. ஆமா -15C சில்லுன்னு தான் இருக்கும் :)

Anonymous said...

cooool- லான படங்கள்.

சுந்தரவடிவேல் said...

Muni,
adhuthu
Kollai nilavaa?

- உடுக்கை முனியாண்டி said...

வாங்க பரணீ. இந்தப் பக்கம் வந்ததுக்கு நன்றிங்க.

நன்றி சுவ.
நிலா சிக்க மாட்டேங்குது. பாக்கலாம் சுட முடிஞ்சதுன்னா சுட்டுப் போடுறேன் :)))

Anonymous said...

//நிலா சிக்க மாட்டேங்குது. பாக்கலாம் சுட முடிஞ்சதுன்னா சுட்டுப் போடுறேன் :)))//

பார்த்து சுடுங்க. அப்புறம் வெள்ளை நிலா கறுப்பா போயிறும்.

- உடுக்கை முனியாண்டி said...

அனானி,

:)))))

Boston Bala said...

எத்தனை இன்ச்?

- உடுக்கை முனியாண்டி said...

வாங்க பாலாஜி. பக்கத்திலயே இருந்தாலும் பார்டர் தாண்டி இருக்கறதால இப்டி conversion கேக்கறதெல்லாம் நல்லா இல்லை :)))))

சரி நீங்க கேட்டுட்டதால

1 cm = 0.394 in
15 cm = 5.91 in

Boston Bala said...

பழக்கதோஷம் : P

படங்கள் அருமை : )

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி, இந்தப் பக்கம் வந்ததுக்கும்


:)