Dec 28, 2007

1000 பதிவுகளுக்கே மூச்சு வாங்கும் கூகுள் ரீடர்

இப்ப கொஞ்ச நாளா தமிழ்மணத்தில OPML, திரட்டி, ஓடை ன்னு சும்மா ஆளாளுக்கு பிச்சி ஒதறிக்கிட்டு இருந்தாங்க. ஆளுக்கொரு திரட்டி செய்வோம், அடுத்தவன் திரட்டி எங்களுக்கு வேணாம்னு ஒரு சிலரும், அதுக்கு பதிலா இன்னும் சிலரும் பதிவெழுதிக்கிட்டு இருந்தாங்க. இதிலருந்த அரசியல் எல்லாம் நமக்கு வேணாம். ஆளுக்கொரு திரட்டியில வெளியான ஒரு விசயத்தை மட்டும் இங்க பேசலாம்.

தமிழ்ல்ல இருக்கற மூவாயிரத்துச் சொச்ச பதிவுகளுக்கும் OPML தயாரிக்கற வேலையில நண்பர்கள் இறங்கியிருக்காங்க(Tamil-blogs-open-opml). தற்போதைய நிலவரப்படி 1000 பதிவுகளுக்கு OPML ரெடியாயிருக்கு. இந்த முயற்சியில கூகுள் ரீடரோட முக்கியமான பலகீனமான ஒரு பகுதி தெரிய வந்திருக்கு. என்னன்னா 1000 பதிவுகளைக்க்கூட திரட்ட முடியாம ரீடர்கூகுள்ரீடர் படுத்துக்குதுன்ற விசயம் வெளியில வந்திருக்கு. அந்த குழுமத்தில இருக்கற பல நண்பர்களும் அதை உறுதிப்படுத்தியிருக்காங்க. இதைப்பத்தி கூகுளுக்கும் நண்பர்கள் எழுதியிருப்பாங்கன்னு நம்புவோம். தற்போதைக்கு நம்ம நண்பர்கள் வேற திரட்டிக்கு மாறுறதா முடிவு பண்ணியிருக்காங்க. நண்பர்களோட முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். (மேல சுட்டப்பட்டிருக்கற குழுமம் திறந்த நிலையிலிருந்து [open-access] தற்போதைக்கு குழு உறுப்பினர்களுக்கானதா [private] மூடப் பட்டிருக்கு).


இதுல நெருடுன ஒரு விசயம் என்னன்னா, சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் தமிழ்மணத்தை நோண்டி நொங்கெடுக்கறவங்க, கூகுள் ரீடர் தமிழ் பதிவுகளின் கலங்கரை விளக்கம்னு பதிவெழுதுனவங்க ஏன் இதைப்பத்தி எதுவும் பதிவுகள்ல எழுதலைன்னு தெரியலை. ஒருவேளை இதுக்குப் பேருதான் கருத்தாக்கலான்னு தெரியலை.

19 comments:

வவ்வால் said...

//கூகுள் ரீடர் தமிழ் பதிவுகளின் கலங்கரை விளக்கம்னு பதிவெழுதுனவங்க ஏன் இதைப்பத்தி எதுவும் பதிவுகள்ல எழுதலைன்னு தெரியலை. ஒருவேளை இதுக்குப் பேருதான் கருத்தாக்கலான்னு தெரியலை.//

உடுக்கை அடி என்பது இது தானா? :-))

ஒரு திரட்டியை முன் எடுத்து செல்வது எப்படி தேவை இல்லாததோ அப்படியே கூகிள் திரட்டியும் என்று சொன்னேன். இன்று திரட்டிகள் மீது வரும் விமர்சனம் , பின்னர் அதன் மீதும் வரும், அதுவும் அதிகாரம் ஒரே இடத்தில் எனில்!

Anonymous said...

Looks like OPEN OPML project is not open to discuss the issues in the project by keeping the email group closed.

I wonder is the tamil blog community or at least the people who are propagating the openness in tamil at least know what "open source" means

They should know how it is being practiced at the larger level by the different open source communities.

If they do it for Openness, their every action should be open. If it is only for political, they can keep it closed :-)

- உடுக்கை முனியாண்டி said...

வவ்வால், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். எனக்கு இப்போதைக்கு இதுல சொல்றதுக்கு எதுவும் இல்லை
அதனால 'மீ த எஸ்கேப்' :)

அனானி,
ஓபன் சோர்ஸ்ஸ் ஓபனாதான் இருக்கணுமான்னு தெரியலை. மத்தபடி வவ்வாலுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும். :)

Boston Bala said...

---1000 பதிவுகளைக்க்கூட திரட்ட முடியாம ரீடர் கூகுள்ரீடர் படுத்துக்குதுன்ற விசயம் ---

எப்போழுது தள்ளாடுகிறது என்பதையும் சொல்லியிருக்கலாம். 'manage - subscriptions' என்று சுய தேர்வுகளுக்கு செல்கையில் மிகுந்த நேரம் எடுக்கிறது. இந்த வசதியின் செயலாக்கத்தில் நிச்சயம் முன்னேற்றம் தேவை.

பதிவுகளைப் படிக்கையில் இவ்வாறு நேர்வதில்லை. கூகிள் ரீடரின் முகப்பிலேயே (அதாவது வாசிக்கும் போதே நேர்வதற்கு) அச்சிறும் புள்ளி எது என்று தெரியவில்லை.

சுருக்கமாக சொன்னால்:
1. 1000+களில் உறையும் இடைமுகம் : கூகிள் ரீடரின் சப்ஸ்க்ரிப்சன் பக்கம் == தமிழ்மணத்தின் பதிவர் பட்டியல் பக்கம்.

2. கூகிள் ரீடரின் முகப்பு பக்கம் == தமிழ்மணத்தின் முகப்பு. (1000+களில் இது இன்னும் உறைவதில்லை)

அங்கே மொத்தமாக எல்லாவற்றையும் ஒருங்கே நீக்கி, கோர்த்து இன்ன பிற; பெர்சனலைஸேஷன் & கஸ்டமஸைஷேன் செய்யலாம். தமிழ்மணத்தில் இந்த சொந்த விருப்பங்களை தேர்வு செய்யும் வசதி கிடையாது. தமிழ்மணத்தில் ஒரு பக்கத்துக்கு இருபது பதிவுகள் வீதம் காட்டுமாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

---சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் தமிழ்மணத்தை நோண்டி நொங்கெடுக்கறவங்க, கூகுள் ரீடர் தமிழ் பதிவுகளின் கலங்கரை விளக்கம்னு பதிவெழுதுனவங்க---

கூகுள்ரீடர் படுத்துக்குதா - ஆமாம்.

ஆனால், உங்கள் வலைப்பதிவை செயலிழக்க செய்வதில்லை என்பதுதான் வேறுபாடு.

கூகிள் ரீடர் படுத்துக் கொண்டால், உங்கள் இடுகையை ஆஸ்க்.காம் போன்ற பிற தேடுபொறிகள் மூலம் வந்தடையலாம். ஆனால், தமிழ்மணம் படுத்துக் கொண்டால், ஒவ்வொரு இடுகை வருவதற்கும் டைம் அவுட் ஆகும் வரை காத்திருக்க பொறுமை இல்லாதவர்களுக்கு சோதனைக்காலம்.

மாற்றாக ப்லாக்லைன்ஸ், கிஞ்சா, ஷார்ப்ரீடர் கொண்டோ படிக்கலாமே என்னும் போது, ஒபிஎம்.எல் இருந்தால்தானே வசதி?

எல்லாரும் metaphor விடுவதால் நானும் சொல்லிடறேன்.

அதிமுக செய்யாத அட்டூழியமா? இப்போது திமுக-விடம் நொட்டை நொள்ளை சொல்ல வந்துட்டாங்க என்பதிலும்; அமெரிக்காவே கடனில் மூழ்கி இருக்கு (அல்லது) அடாவடி அடிக்குது... என் கடனைப் பற்றி கேட்காதே (அல்லது) சீனாவை பற்றி எப்படி பேசலாம் என்பதிலோ எனக்கு உடன்பாடு கிடையாது.

தமிழ்மணத்தின் வடிவமைப்பு மோசமா... சொல்ல வேண்டும்; Does Google suck... do blog & inform about it.

Anonymous said...

//இதைப்பத்தி கூகுளுக்கும் நண்பர்கள் எழுதியிருப்பாங்கன்னு நம்புவோம்.//

Yes. We have written to Google Tech Service. If they don't solve the problem quickly, then THE OPEN OPML CLOSED GROUP WILL WRITE A OPEN LETTER TO GOOGLE. We expect Google CEO will respond immediately.

Anonymous said...

பாஸ்டன் பாலா இந்த இடுகையை பார்க்கவில்லையா?
தமிழ்மணம் செயலிழந்து "ஒரு பக்கத்தையும் திறக்கவும் விடாது படிக்கவும் விடாது"
என்று ரவி சொன்ன புளுகுமூட்டையை இன்னும் ஏன் சொறிகிறார் என்பது திறந்த ஓபிஎம் எல் கார மாற்றுக்காரர்களுக்கே வெளிச்சம்.

-- December 24, 2007 12:56 PM
Kasi Arumugam - காசி said...
விளக்கமாக எழுதியதற்கு நன்றி, குழலி. தமிழ்மணம் செயலிழந்தால் பதிவுகள் திறக்க சற்று தாமதமாகும் என்பதே நான் கண்ட அனுபவம். முடக்கும் என்பது சரியல்ல. தாமதத்தையும் களைதல் தேவையே. இது மூன்று வருடங்களுக்கு முன்பே அறியப்பட்ட சிக்கல்தான். இதற்கான தீர்வு விரைவில் வரும் என்று நம்புகிறேன். --


http://kuzhali.blogspot.com/2007/12/blog-post_24.html

Nimal said...

கூகுள் எனக்கு 780சொச்ச பதிவுகளை திரட்டுகிறது...

இனித்தான் பிரச்சனை வருமோ... அதற்குள் சசியானால் சரிதான்...

- உடுக்கை முனியாண்டி said...

பாலாஜி, பதிவு தெளிவில்லாம இருந்ததுக்கு :( . தெளிவு படுத்தினதுக்கு நன்றி. :)

உங்களை மாதிரி வலையுலக அரசியல் கோலி விளையாடுறது எனக்கு வராது.அதோட அப்படி விளையாடுறதுலயும் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால
இவ்வளவு பெரிய பின்னூட்டத்தில யாருக்கும் உள்குத்து, வெளிக்குத்து, சைடுகுத்துன்னு எதுவும் விடலைன்ற அப்பாவித்தனமான நம்பிக்கையில நானும் பதில் சொல்றேன் :)

கூகுள் ரீடரில் எதை பலம்னு நினைச்சமோ அதுல தான் நொள்ளை இருக்குன்னு தெரியும்போது மக்கள் மக்கள்ன்னு நாம சொல்ற மக்களுக்கு அதை விலாவாரியா சொல்றதுதான முறை. எப்படி இருந்தாலும் நீங்களும் அதை ஆமோதிச்சிருக்கறதுக்கு இன்னொரு நன்றி.

அப்புறம் மறுபடியும் நைசா தமிழ்மணத்தில நொள்ளை இருக்குன்னு, தமிழ்மணத்தில நொள்ளை இருக்குன்னு வந்திருக்கீங்க. அதைப்பத்தி எனக்கு தெரிஞ்சதை மட்டும் சொல்றேன். இந்த கருவிப்பட்டை வந்த வரலாறு பத்தி என்னை விட உங்களுக்கு அதிகமாவே தெரிஞ்சிருக்கும். இப்பவும் அதோட பலம் என்னன்றது உங்களுக்கு நல்லாவே தெரியும். பலம்ன்னு சொன்னவுடனே திரட்டி அரசியல், உங்களோட அரசியல் எல்லாம் உள்ள கொண்டு வராதீங்க. நான் சொல்றது தொழில்நுட்ப பலத்தை மட்டும் தான் சொல்றேன். இந்த கருவிப்பட்டை இருக்கறதால தான் பதிவுல எழுதன உடனே, பின்னூட்டம் போட்ட உடனே தமிழ்மண முகப்புல தெரியுது. நீங்க முன்வைக்கிற கூகுள், யாகூ, ப்ளாக்லைன்ஸ் இதுல டைம் டிலே இருக்கா, அது எவ்வளவுன்றது தெரியலை. ஆனா தனியா திரட்டி பண்ணினா டைம் டிலே இல்லாம பண்றதுன்னா அதுக்கு செலவளிக்கவேண்டியது அதிகம்னு மட்டும் தெரியும்.அதோட இது பதிவர்கள் நாம வேணும்னு கேட்ட ஒரு வசதி. என்னோட நினைவு சரின்னா இது தமிழ்மணத்தில பின்னாடி சேக்கப்பட்ட ஒரு வசதி.

சரி அந்த பட்டையால இப்ப பிரச்சனைங்கறீங்க. ஆனா அந்த பிரச்சனைய அணுகின விதம், முன் வைச்ச விதம் எவ்வளவு சரின்னு எனக்கு தெரியலை. சாதரணமா "Hello World" கோடு எழுதுனாலே ஏகப்பட்ட நொள்ளை சொல்லமுடியும். அப்படியிருக்கறப்ப தமிழ்மணத்து நொள்ளைய இவ்வளவு ஊதணுமான்னு தெரியலை. அதையும் ஆக்கப்பூர்வமா முன் வைச்சிருக்கலாம்னு/வைக்கலாம்னு நினைக்கிறேன்.

நீங்கள்லாம் நீங்களே கோடு(code) போட்டு ரோடு போடுறவங்க.தமிழ்மணத்து மேல இவ்வளவு அபரிதமான காதல் வைச்சிருக்கறீங்க. இதுக்காக ஆக்கப்பூர்வமா(தொழில்நுட்பம்) எதுனா தோணுச்சின்னா நீங்க முன் வைக்கலாமே. வைச்சிருக்கீங்களான்னு தெரியலை. முன் வைச்சிருந்து அதை தமிழ்மணம் கண்டுக்காம விட்ருந்ததுன்னா என்னோட கண்டனத்தையும் தெரிவிச்சிக்கறேன்.

மத்தபடி OPML வந்துதான் பதிவர்களோட வாழ்க்கையில ஒளியேத்தப்போகுதுன்னா அதுக்கு மாறுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கப்போறதில்லை.

- உடுக்கை முனியாண்டி said...

அனானி,உங்களோட பதில அந்த குழுமத்து நண்பர்களோட பதில் மாதிரி தெரியலை. எந்த ஒரு முயற்சியையும் கொச்சைப்படுத்தறதில எனக்கு விருப்பமில்லை. அது என்னோட நோக்கமுமில்லை.அதனால உங்க விளையாட்டை வேற எங்கயாவது கொண்டு போயிருங்க. நன்றி

- உடுக்கை முனியாண்டி said...

அடுத்த அனானி,

ஆகாத மருமக கைபட்டா குத்தம் கால் பட்டா குத்தமுனு, குத்தத்தை தேடிக்கிட்டு அலையற எடத்தில எந்த குத்தமும் இல்லாம இருக்கறது நல்லதில்லையா. தமிழ்மணம் இதை வேகமா சரி செய்யுமுன்னு நம்புவோம்.

Boston Bala said...

---உங்களை மாதிரி வலையுலக அரசியல் கோலி விளையாடுறது எனக்கு வராது---

---திரட்டி அரசியல், உங்களோட அரசியல் எல்லாம் உள்ள கொண்டு வராதீங்க.---

சும்மா 'எல்லாம் குப்பை' ரகத்தில் புறந்தள்ளாமல், (not generic, please be specific in your allegations & defamations) என்ன செய்தேன், எப்படி அரசியல் என்று விளக்கினால் நன்று.

இந்த மாதிரி தனி மனிதத் தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது :(

முகமூடி அணிந்த (அதாவது தாக்குவதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டு எழுதும்) உங்களின் இந்த அவதூறு தரமற்ற செய்கை.
---------------

---தமிழ்மணம் செயலிழந்தால் பதிவுகள் திறக்க சற்று தாமதமாகும் என்பதே நான் கண்ட அனுபவம்.---

எத்தனை நிமிடங்கள்?

---தமிழ்மணத்து நொள்ளைய இவ்வளவு ஊதணுமான்னு தெரியலை.---

எவ்வளவு இன்ச் ஊதினால் சரி?

---வைச்சிருக்கீங்களான்னு தெரியலை. முன் வைச்சிருந்து அதை தமிழ்மணம் கண்டுக்காம விட்ருந்ததுன்னா---

ஈ - தமிழ்: Tamil Blogs - Thamizmanam Tactics & Strategy இவற்றில் #2, #3 போன்றவை

ஈ - தமிழ்: "விருப்பப் பட்டியல் - 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்'" :: ஆக. 24 2004ல் எழுதியது: "எவராவது தங்கள வலைப்பதிவுகள், இந்த 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்க'த்தில் இடம்பெறக் கூடாது என்று விரும்பினால், அதற்கான 'வ.கே.கே' உதவியையும் கொடுத்துவிடலாம்?"

தானியங்கியாக நடக்கவேண்டிய விஷயம் இது.

கொசுறு

ஜன. 09, 2006 - E - T a m i l : ஈ - தமிழ்: பயனர் அனுபவங்கள்: 'Pathivu Toolbar ©2005' மற்றும் தமிழ்மணத்தின் சுட்டி போன்றவற்றை பயனரின் விழைவாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Voice on Wings said...

இந்த இடுகையைப் பத்தி எனக்கு நுட்ப ரீதியா சில விமர்சனங்கள் இருக்கு.

கூகிள் ரீடர் என்பது ஒரு feed reeder, அவ்வளவுதான். முன்னாடி Mozilla Thunderbird, Pluck (Outlook Plugin) போன்ற கணினியில் இயங்கக் கூடிய மென்பொருட்களை வச்சி ஓடைகளைப் படிச்சிக்கிட்டு இருந்தேன்/தோம். அதுக்கப்பறம் அஜாக்ஸ் / மஜாக்ஸ்ன்னு நுட்பங்கள் வந்த்தில பல desktop applicationsஐ web-based applicationஆ மாற்றும் முயற்சிகள் நடந்தன. (Google Docs, Google Spreadsheet, போன்றவை). அதே வரிசையில் கணினியில் இயங்கிக்கிட்டு இருந்த feed reader நுட்பத்தை வலையாக்கம்(?) செய்ததால் விளைந்ததுதான் கூகிள் ரீடர். அதை எவ்வகையிலும் தமிழ்மணம் போன்ற திரட்டியோட ஒப்பிட முடியாது, அது அதோட பயன்பாடும் கிடையாது. ஒரு தனிநபர் தான் விரும்பும் ஓடைகளை subscribe செய்து கொண்டு படிக்கிறதுக்கான மென்பொருள்தான் கூகிள் ரீடர். ஒரு தனிநபர் சில நூறு ஓடைகளைப் படிப்பார் என்று நினைத்து அதற்கேற்றபடி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஆயிரம் என்பது ஒருவேளை அதற்கு அதிகப்படி ஆகிவிட்டதோ என்னவோ.

நான் புரிந்து கொண்ட வரை, OPML உருவாக்குபவர்கள் Google Readerஐ ஒரு OPML editorஆகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் ஒரு Notepadஐ எடுத்துக் கொண்டு XML tagsஉடன் manualஆக அதைச் செய்ய வேண்டும். முன்பு உருவாக்கப்பட்ட பதிவர் பட்டியலைப் போன்ற ஒரு முயற்சிதான் இந்த OPML உருவாக்கம். ஒரே வேறுபாடு - OPML is a machine-readable format. அதை ஒரு மென்பொருளால் உடனே பயன்படுத்த முடியும். அந்த மென்பொருள் கூகிள் ரீடராகவும் இருக்கலாம், அல்லது Mozilla Thunderbirdஆகவும் இருக்கலாம், அல்லது நாளை வரக்கூடிய ஒரு புதிய திரட்டியாகவும் இருக்கலாம். இதை ஏன் உருவாக்க வேண்டும் என்று கேட்கலாம். இதை ஏன் உருவாக்கக் கூடாது என்ற எதிர் கேள்வியும் நியாயமானதே. பதிவுலகத்திற்கு புது வருகைகள் ஏற்படும்போது புது வழிமுறைகளும் பிறக்கலாமில்லையா?

ஒரு எட்டு பேரு தனியா ஒரு வேலையை குழு அமைச்சி செஞ்சிக்கிட்டு இருக்காங்க போல இருக்கு. அதனால தமிழ் கூறும் நுல்லுலகத்துக்கு ஒரு பெரிய பிரச்சனை வந்துடப் போகுதுன்னு நான் நினைக்கல்ல. தமிழ்மணம் தாக்கப்பட்ட போது என்னால முடிஞ்ச ஒரு துரும்ப அதுக்கு ஆதரவா எடுத்து போட்டுருக்கேன். இப்போ இந்த OPML குழுவைப் பத்தி துப்புல்லாம் அறிஞ்சி அவங்களோட பின்னடைவுகளை இந்த உலகத்துக்கு அறிவிக்கிறது, அதற்கு வர்ற அனானி ஆதரவுகள், ஆகிவற்றைப் பாக்கும்போது என்னோட கருத்தையும் தெரிவிக்கணும்ன்னு தோணிச்சு. எந்த முயற்சியையும் கொச்சைப் படுத்தறது உங்க நோக்கமில்லைன்னு நானும் நம்பறதாலதான் இந்த நீளமான பின்னூட்டம்.

- உடுக்கை முனியாண்டி said...

பாலாஜி:

தனிமனித தாக்குதல், அவதூறுன்னு நீங்க இதை எடுத்திருந்தீங்கன்னா என்னோட பகிரங்க மன்னிப்பை கேட்டுக்கறேன். அப்படியான எண்ணம் அதை எழுதும் போது நிச்சயமா எனக்கு இல்லை. என்னோட பதிவுக்கும் பதில் எழுதியிருக்காங்கன்ற அவசரத்தில பதில் எழுதும் போது ஸ்மைலி தூவுறதுக்கு மறந்துட்டேன். :)

எல்லாருக்குமே பதிவு போடுறீங்க, உங்களுக்கு ஒரு பதிவு போடணும்னு நினைக்கிறது உண்டு. :) எல்லாம் நல்ல விதமாத்தாங்க. பின்னாடி நேரம் கிடைக்கும் போது நிச்சயமா எழுதறேங்க. :)

//முகமூடி அணிந்த (அதாவது தாக்குவதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டு எழுதும்) உங்களின் இந்த அவதூறு தரமற்ற செய்கை.//

எனக்கு நிச்சயமா வேற பதிவு எதுவும் இல்லைங்க. பேர் போட்டு தான் வலைப்பதிவு எழுதணும்னு நீங்க சொன்னீங்கன்னா அப்படி பேரைச் சொல்றதுலயும் எனக்கு பிரச்சனையில்லீங்க. நான் அவன் இல்லைன்னு சொல்ற பிரச்சனை எனக்கு இல்லைன்ற நம்பிக்கையில தான் இத சொல்றேன். அதோட யாரையும் தாக்குறதிலயும் திட்றதிலயும் எனக்கு பெரிய நம்பிக்கையோ விருப்பமோ இல்லைங்க. அதை வெறுக்கறவனும் கூட. சாதரணமா என்னோட கருத்து எனக்கு உங்களோட கருத்து உங்களுக்குன்னு போகப் பார்க்கற ஆளு நான். என்ன, வார்த்தை விளையாட்டு தெரியாதுன்றதால
சொல்லவந்ததை விட்டுட்டு உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். :) பரவாயில்லை கத்துக்கலாம். வலைப்பதிவுல கத்துக்கலைன்னா வேற எங்க கத்துக்க முடியும் சொல்லுங்க. :)

அப்புறம் தமிழ்மணம் பத்தின உங்களோட இடுகைகளை பாக்க வேண்டியவங்க பாப்பாங்கன்னு நம்புறேன். எதோ நல்லது நடந்தா சரி தான் . அப்படி நல்ல விசயங்களை அவங்க வீம்புக்குன்னே எடுத்துக்காம இருக்காங்கன்னா என்னோட கண்டனத்தையும் தெரிவிச்சிக்கறேன்.

- உடுக்கை முனியாண்டி said...

VOW,
உங்களோட விரிவான கருத்துக்கு நன்றி.நெறய விசயங்களை தெரிஞ்சிக்க முடிஞ்சது. கூகுள் ரீடர்ல பிரச்சனைன்ற அளவில மட்டும் தான் இதை பாத்தேன்/பார்க்கறேன். சும்மா இருக்கற கும்பல்ல (என்னையும் சேத்து!!) எதாவது செய்யணும்னு நினைக்கறவங்களுக்கு நிச்சயமா என்னோட பாராட்டுக்கள்.

ஏற்கனவே சொன்ன மாதிரி நாளைக்கு OPML ஒரு பெரிய தீர்வா இருக்கும்ணு தோணிச்சின்னா அதுக்கு மாறுரதில எனக்கு எந்த பிரச்சனை இல்லை.

- உடுக்கை முனியாண்டி said...

அனானி,

சற்றுமுன் பத்தி வைச்சிருக்கற விமர்சனத்தை நேரடியா அவங்களுக்கே அனுப்புங்க. இங்க அது தேவையில்லாதது.

நன்றி

Boston Bala said...

உடுக்கை... உங்களின் விரிவான பதிலுக்கு நன்றிகள் பல

வவ்வால் said...

உடுக்கை,

தமிழ்மணம் செயல் இழந்த போது நேரம் ஆகும் என்பது ஒரு மிக சிறிய தாமதமே, இன்னும் சொல்லப்போனால் அதை நான் உணர்ந்தது கூட இல்லை.

தமிழ் மணம் செயல் இழந்தப்போதும் எனது புக் மார்க்கில் இருக்கும் பதிவுகளை வழக்கம் போலவே படித்தேன்.இதைப்பல முறை சொல்லிவிட்டேன்.

கணினிப்புலிகள் எல்லாம் இருக்காங்க, எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், பதிவு வருவது பிலாக்கரில் இருந்து தான் , தமிழ்மணத்தில் இருந்து அல்ல, பதிவு திறக்கும் போது தமிழ்மணம் பிங் ஆகும், அது வேலை செய்யவில்லை எனில் பிங் ஆகும் நேரம் மட்டும்தான் வீண் ஆகும்.

வெகு சிலரே அப்படி படிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் பலரும் படிக்க முடிந்தது என்று தான் முன்னரே சொல்லி இருக்கிறார்கள்.

ஏன் அந்த வெகு சிலருக்கு படிக்க முடியவில்லை என்பது அவர்கள் கணினி, இணைய வேகம் பொறுத்தது என நினைக்கிறேன்.

- உடுக்கை முனியாண்டி said...

வவ்வால், VOW ஆக்கப்பூர்வமா இந்தப் பிரச்சனைய அணுகி ஒரு தீர்வையும் முன் வைச்சிருக்காரு.
http://valaipadhivan.blogspot.com/2007/12/blog-post.html
தமிழ்மணத்தில முன்பக்கத்தில இணைப்பும் கொடுத்திருக்காங்க. நான் இன்னும் சோதனை பண்ணிப்பாக்கலை.


அது வேணும் இது வேணும்னு நாம சும்மா சொல்றதுக்கும் இந்த மாதிரி அணுகறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. ரெண்டு பேருமே தேவைன்னாலும் முடிஞ்சவங்க இந்த மாதிரி செய்யும் போது தான் சில விசயங்களை ஆக்கப்பூர்வமா மாத்தமுடியும்.

எப்படியோ ஒரு பெரிய பிரச்சனையா ஊதப்பட்ட ஒன்னுக்கு கடைசியா எளிமையான தீர்வு ஒன்னு கிடைச்சிருக்கு. :)

இப்ப என்னால தான் இது நடந்திருக்குன்னு ஒரு பதிவு ஒன்னு எழுதணும். நேரம் தான் கம்மியா இருக்கு. :) இதை எப்படி அணுகறதுன்னு தெரியலை.

Osai Chella said...

ha ha.. some one teach bala how to deactivate the TOOL BAR when Tamilmanam Goes down, once in a while!!

Then, all his refutals are simple silly arguements saying a reader is great. Without comments even if reader shows 2 million feeds it is ugly and incomplete.. may be a replacement for a 2 million members strong Egroup! Blogs essence lies in its comments and modular structures, Blog Rolls, Counters, Ratings etc. Even a child wont argue that feeds are great way to enjoy the great potentials of a blog. moreover navigation (see my blog) , search inside blog...etc are ..shit with plain XML statements calls feeds! Dont compare a cat with a Horse!

Bala's and Ravishankar must understand what is a blog first and its components than the simple Headers and contents. A modern blog is more modular and more expressive than the feeds. Feeds are just a portion and now way replaces a blog! Dont argue with rebellious fervor to hide your childish understanding of the great web 2.0 medium. Who needs your half baked advices!