Dec 25, 2007

இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்

வருசத்துக்கு எத்தனை புத்தகங்கள் வெளியாகுதுன்னு எப்பவாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா? சரியான கணக்கு எனக்கு கிடைக்கலைன்னாலும் சுமாரா 10 இலட்சம் புத்தகத்துக்கு மேல வெளியாகுதுன்னு விக்கிபீடியா சொல்லுது. எண்ணிக்கைய பாக்கும் போதே தலைசுத்தல் வருது. வர்ற ஒவ்வொரு புத்தகத்தையும் த்லைமுறைக்கும் பாதுகாக்கணும்னா யோசிச்சி பாருங்க. நூலகங்கள்லயும் எவ்வளவு புத்தகங்களைத் தான் சேத்து வைக்கமுடியும். இப்ப வர்ற புத்தங்களாவது பரவாயில்லை, டிஜிட்டல் முறையில கிடைக்கறதால இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அதை பாதுகாக்கலாம். ஆனா ஏற்கனவே வந்த புத்தகங்களோட நிலைமை? பழைய புத்தகங்களை பாதுகாக்கறதுக்காக ஏற்கனவே குட்டென்பெர்க் திட்டம் செயல் பட்டுக்கிட்டிருக்கு. இதுல 100,000 புத்தகங்களை இலவசமா தர்றாங்க. தமிழ்லயும் மதுரைத்திட்டம் செயல் பட்டுக்கிட்டு இருக்கு. ஈழத்துமக்களும் தங்களோட படைப்புகளை நூலகம் திட்டம் மூலமா மாத்திக்கிட்டு இருக்காங்க. இது போக கூகுள் மாதிரி பெருந்தலைகளும் இந்த வேலையில இறங்கியிருக்காங்க.

இதுக்கு நடுவில சத்தமேயில்லாம் சில பல்கலைக்கழகங்களும் இந்த வேலையில இறங்கி இது வரைக்கும் 10 இலட்சம் புத்தகங்களை டிஜிட்டைஸ் பண்ணியிருக்காங்க. இவங்களோட இலக்கு 1 கோடி. தமிழ்ல இதுவரைக்கூம் 4000 புத்தகங்கள் முடிஞ்சிருக்கு. தெலுங்குல 50,000மும் கன்னடத்தில 20,000மும் முடிஞ்சிருக்கு. இந்த புத்தகங்கள் எல்லாரோட பார்வைக்கும் இணையத்தில கிடைக்குது.

இதைப்பற்றிய செய்திக் குறிப்பு

நூலகத்திற்கு செல்ல

முடிக்கப்பட்ட புத்தக எண்ணிக்கைகளோட விபரம்

பிகு: புத்தகங்களை தேடிப் படிக்கறது இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. போகப்போக சரியாகும்னு நம்புவோம்.

பிகு2: நூலகம் திட்டத்தை பின்னூட்டத்தில் நினைவு படுத்திய நண்பர் மயூரனுக்கு நன்றி

6 comments:

வவ்வால் said...

உடுக்கை,

பயனுள்ள தகவல்!நன்றி!

இந்த மதுரை திட்டம், கூட்டன் பர்க் இன்னும் சில இலவச புத்தக வங்கிகளின் மூலம் நிறைய பலன் அடைந்தவன் நான்.அவை எல்லாம் இருப்பதால் செலவே இல்லாமல் பல நூல்களும் படிக்க கிடைக்கிறது.

அதே போல பல ரகசிய தளங்களும் திருட்டுத்தனமா ஸ்கேன் , அல்லது பிடிஎப் புத்தகங்களை இணையத்தில் வெளியிடுகிறது. ஆனால் அவை எல்லாம் காபி ரைட் வயலேஷன்.

வவ்வால் said...

//சில பல்கலைக்கழகங்களும் இந்த வேலையில இறங்கி இது வரைக்கும் 10 இலட்சம் புத்தகங்களை டிஜிட்டைஸ் பண்ணியிருக்காங்க.//

நீங்கள் கொடுத்து இருப்பது கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தின் மின்னனு நூலகம் என்று போட்டு இருக்கலாமே.

இப்போது போய்ப்பார்த்தேன்,இதில் மொழி பெயர்ப்பு சரியாகவும் இல்லை, நான் பார்த்த வரைக்கும் எந்த நூலும் படிக்க கிடைக்கவில்லை.எல்லாம் "currently unavailabel" என்றே வருகிறது.

இதை விட நல்ல மின்நூலங்கள் இருக்கு.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி வவ்வால்.

இது கார்னெகி மெலன் பல்கலைக்கழகம் மட்டுமே செய்றது இல்லை. வேறு சில பல்கலைக்கழகங்களும் சேந்து தான் செய்றாங்க. அதனால தான் பல்கலைக்கழகங்கள்னு போட்டிருக்கேன்.

மொழிபெயர்ப்பு மத்தபடி தேடுறது எல்லாத்தையும் சேத்து தான்
இன்னும் navigate பண்றதுக்கான வசதி சரியாப் பண்ணலைன்னு குறிப்பிட்டிருக்கேன். மத்தபடி என்னால புத்தகங்களை வாசிக்க முடியுது. பக்கங்கள் எல்லாம் tiff formatல இருக்கு. என்னோட கணினியிலா quicktime player யோட உதவியலால திறக்குதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை நீங்க குறிப்பிட்ட புத்தகம் இப்பதான் மாற்றத்தில இருக்கான்னு தெரியலை

மத்த நல்ல நூலகங்கள் பத்தி ஒரு அறிமுகத்தை நீங்க எழுதலாமே.

Unknown said...

ஈழத்து நூல்களை மின்னூற்களாக்கி இணையத்தில் பாதுகாக்கும் பணியைத் திறந்த நிலையில் கூட்டுழைப்பாக செய்துவருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 433 நூல்களும் 290 சஞ்சிகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

- உடுக்கை முனியாண்டி said...

நூலகம் விடுபட்டுப் போனமைக்கு மன்னிக்கவும் மயூரன். அதை சுட்டியமைக்கு நன்றி.

பதிவில் இணைத்து விடுகிறேன்

Unknown said...

நன்றி.
நூலகம் விடுபட்டுப்போனமைக்கு உங்களில் வருத்தமெதுவும் இல்லை.
சாதாரணமாக நிகழ்ந்த ஒன்றுதான்.

பதிவில் சேர்த்திருக்கின்றமைக்கு நூலகம் தன்னார்வலர்கள் சார்பில் மிகுந்த நன்றிகள்.