Dec 30, 2007

BSNL, MTNL இணைய இணைப்பு உள்ளவங்களுக்கு மட்டும் !!

இந்தியாவில அகலப்பாட்டை இணைப்பு இப்ப கிராமங்களுக்கு கூட சுலபமா கிடைக்குதுன்னு நினைக்கிறேன். இடத்தைப் பொருத்து அகலப்பாட்டை வேகம் 256 Kbps லருந்து 2 Mbps வரைக்கும் கிடைக்குது. இதுக்கான குறைஞ்ச பட்ச கட்டணம் 250 ரூபாய். இதுக்கடுத்து 500, 900 ம்னு வெவ்வேற திட்டங்கள் இருக்கு. இதுல 900 ரூபாய் திட்டத்தை தவிர மற்ற எல்லா திட்டத்துக்கும் உபயோகிக்கறதுக்கு ஒரு எல்லை வைச்சிருக்காங்க. உதாரணமா 250 ரூபாய் திட்டத்தில நீங்க மாசத்துக்கு 1 GB அளவு மட்டும் தான் உபயோகிக்க முடியும். இதுக்கு மேல போச்சின்னா 1 MB க்கு 90 பைசா அளவுக்கு நாம கட்ட வேண்டியதிருக்கும். இதுல அளவுன்னு பாத்தீங்கன்னா தமிழ்மணத்தோட முகப்பை திறக்கறதுக்கு 100 KB ஆகும். இதே இது ஒரு வலைப்பக்கத்தை திறக்கணும்னா அந்தப் பக்கத்த்தோட உள்ளடக்கத்தைப் பொருத்து வேறுபடும். அந்தப் பக்கத்தில எதாவது படம் இருந்ததுன்னா படத்தோட அளவைப் பொருத்து இதுவும் மாறும். ஒரு படம்ன்றது 100 KB லருந்து 2-3 MB வரைக்கும் கூட போகும். இதை விட அதிகமா போறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி ஒரு சினிமாப் பாட்டு இறக்கறீங்கனா அது தோராயமா 5 MB இருக்கும். வீடியோ கிளிப்பிங்க் போய் பார்க்கறீங்கன்னா 1 நிமிடத்துண்டுக்கு 1 MB ன்ற அளவில இருக்கும். வித்தியாசப் படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்புறம் யாரவது நண்பர்களோட கம்ப்யூட்டர்லருந்து பேசுறீங்கன்னா ஒரு மணி நேரத்துக்கு தோராயமா 100-150 MB வரைக்கும் ஆகும்.

அப்ப நீங்க அதிகமான கட்டணம் (அதாவது உங்களோட வரம்புக்கு அதிகமா உபயோகிக்கும் போது) கட்ட விரும்பலைன்னா, நீங்க எந்தளவுக்கு உபயோகிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கறது நல்லது. இதை அடிக்கடி நீங்க பார்த்துக்கறது உங்க பர்ஸைப் பதம்பாக்கம இருக்கறதுக்கு உதவும். எனக்கு தெரிஞ்ச ஒரு கம்ப்யூட்டர்ல வைரஸ் ஒன்னு ஏறி அது பாட்டுக்கு இணைப்பை உபயோகிச்சிக்கிட்டு இருந்திருக்கு. கடைசியில 250 ரூபாய்க்கு பதிலா 1500 ரூபாய் வரைக்கும் கட்டவேண்டியதாயிருச்சி.

சரி இதை எப்படி நீங்க கண்காணிக்கறது. அதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒரு வழி BSNLலோட பக்கத்துப் போய் உங்களோட பயனர்பெயரும் கடவுச் சொல்லும் கொடுத்தா அங்கருந்து தெரிஞ்சிக்க முடியும். அதை விட எளிமையான இன்னொரு வழியும் இருக்கு.

இந்த ரெண்டாவது வழிக்கு நீங்க பயர்பாக்ஸ் உபயோகிக்க வேண்டியதிருக்கும். பயர்பாக்ஸ் இல்லாதவங்க இந்தப் பக்கத்திலருந்து இறக்கி நிறுவிக்கலாம். தமிழ்ல வேணுங்கறவங்க தமிழா.காமோட இந்தப்பக்கத்திலருந்து இறக்கிக்கலாம்.(இது கொஞ்சம் பழைய பதிப்பு).

இதுக்கு அடுத்து இந்த பயர்பாக்ஸுக்கு ஒரு நீட்சிய(extension) நிறுவணும். இந்த நீட்சிக்கு பேரு டேட்டாபாக்ஸ்(Datafox).
அங்க போய் அந்த நீட்சியைப்பத்தின விபரங்களை தெரிஞ்சிக்கலாம். அவ்வளவு பொறுமை இல்லாதவங்க இந்த சுட்டியில நேரடியா தரவிறக்கிக்கலாம். இதை கிளிக் பண்ணவுடனே இந்த நீட்சியை நிறுவவான்னு கேக்கறதுக்கு ஆமாம்னு பதில் சொன்னா அதுவே நிறுவிரும். இப்ப பயர்பாக்ஸை மூடிட்டு மறுபடியும் திறங்க. உங்களோட பயர்பாக்ஸ் அடிப்பட்டையில ஒரு சின்ன படம் இருக்கும். அதை கிளிக் பண்ணி உங்களோட BSNL பயனர், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்ப நீங்க உபயோகிச்ச அளவு தெரிய ஆரம்பிக்கும். இந்த அளவு உடனே உடனே கிடைக்கறது கிடையாது. ஒவ்வொரு முறையும் இந்த நீட்சி BSNL பக்கத்துக்குப் போய் நீங்க எவ்வளவு உபயோகிச்சிருக்கீ்ங்கன்னு சொல்லும்.

பிகு: இதை நிறுவறதைப் பத்தி ஒரு முழுமையான விளக்கம் தேவைப்படுறவங்க போக வேண்டிய சுட்டி.

3 comments:

Anonymous said...

It is very useful muniaandi.

Thanks

இவான் said...

பி.எஸ்.என்.எல் இணைப்பின் பயன்பாட்டினை இணைய தளத்தின் மூலம் அறிய நீங்கள் இன்டர்னெட் எக்ஸ்ப்லோர் மூலம் தளத்தில் உள் நுழைய வேண்டும் என்பது கூடுதல் தகவல். இணைப்பின் பயன்பாட்டினை அறிய உங்களுக்கு தனியான பயணர் சொல் தருவார்கள். மொத்தம் இரண்டு பயணர் சொற்களை பி.எஸ்.என்.எல் பயன்படுத்துவோர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரண்டுக்கும் கடவுச் சொல் ஒன்றே.

- உடுக்கை முனியாண்டி said...

இவான்,கூடுதல் தகவலுக்கு நன்றி. இரண்டு பயனர்சொற்கள் பத்தி இப்ப தான் கேள்விப்படுறேன்.