கிறிஸ்துமஸ் விடுமுறையில தூங்கிட்டிருந்த உடுக்கையத்தட்டி முழுநேர வலைப்பதிவுச் சேவையாத்தணும்னு முடிவு பண்ணி செயல்ல இறங்க வேண்டிய நேரத்தில, வீட்டுக்கு ஆளனுப்பி கடத்திட்டுப் போயிட்டாங்க. இது தான் இப்படின்னா பனி கொட்டு கொட்டுன்னு கொட்டி போன எடத்திலயும் எந்த வேலையையும் செய்யமுடியாம ஆக்கிருச்சி. இது வரைக்கும் பெஞ்ச பனி போன முழு வருசத்திலயும் பெஞ்ச பனிய விட நாலு மடங்கு அதிகம். இன்னும் 3-4 மாசம் இருக்கக்கு. ம்ம்ம்ம்ம்ம். சரி, யார் எப்படி வந்து தடுத்தாலும் ஆத்துறது ஆத்தியே தீருவோமில்ல!!
*******************************************************************************
ஏம்பா தமிழ்ல வெப்சைட்டெல்லாம் இருக்கு, நம்ம கம்ப்யூட்டர்லயே கூட தமிழ் நல்லா தெரியுது. சரி அதே மாதிரி நம்ம கம்ப்யூட்டர்லயும் தமிழ்ல எழுதலாமா? அதுக்கு வேற கீபோர்டு வாங்கணுமா. இந்த கீபோர்ட்ல இங்கிலீஸ் மட்டும் தான் இருக்கு.
நல்லாவே எழுதலாம்ப்பா. வேற கீபோர்டெல்லாம் தேவையில்ல. இருக்கற கீபோர்டை வைச்சே நீங்க தமிழ்ல டைப் பண்ணலாம். அதுக்குன்னு நிறைய சாப்ட்வேர் இருக்கு. அதுல உங்களுக்கு வசதியான ஒன்னை நீங்க உபயோகப்படுத்திக்கலாம்ப்பா.
நிறைய எல்லாம் வேணாம், ஈஸியா இருக்கறது எதுனாச்சும் சொல்லு.
ஈஸின்னு எதைச் சொல்றதுன்னு தெரியலை. நான் ரெண்டு சாப்ட்வேர் உபயோகப்படுத்திக்கிட்டு இருக்கேன். ஒரு சாப்ட்வேர் நிறுவினா பயர்பாக்ஸ்ல மட்டும் தான் தமிழ் டைப் பண்ணமுடியும். இன்னொன்ன நிறுவினா வோர்ட், எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸுன்னு எதுல வேணா டைப் பண்ணமுடியும். ரெண்டுமே ஒரேமாதிரி தான். உங்களுக்கு எது வேணும்.
எனக்கு வோர்ட்ல டைப் பண்ற மாதிரி இருந்தா எதாவது லெட்டர் டைப் பண்ணுறதுக்கு வசதியா இருக்கும். ஆமா இதுக்கு தமிழ் டைப்ரைட்டிங் தெரிஞ்சிருக்கணுமா?
எதுக்குமே தமிழ் டைப்ரைட்டிங்க் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. நிறைய வழிமுறைகள் இருக்கு. அதுல ஒன்னை உபயோகப்படுத்திக்கலாம்.
ஏன் இவ்வளவு குழப்பம். ஒரே வழி மட்டும் இருந்தா பிரச்சனை இல்லையில்லை. சரி நீ சொல்லு.
ஒரு வழி முறையில நீங்க இங்கிலீஸ்ல டைப் பண்ணினா அது தமிழ்ல்ல அதுவாவே தமிழ்ல மாறிக்கும். உதாரணத்துக்கு 'AMMAA' ன்னு டைப் பண்ணினீங்கன்னா அதுவே 'அம்மா'ன்னு வந்துரும். இந்த முறைக்கு பேரு அஞ்சல். இன்னொரு முறையில நீங்க இங்கிலீஸ்ல இருக்கற மாதிரி நீங்க கீ எல்லாம் ஞாபகம் வைச்சிக்கணும். கொஞ்ச நாள்ல இது உங்களுக்கு பழக்கத்துக்கு வந்துரும். வேணும்னா கீ போர்ட் படத்தை பிரிண்ட் எடுத்த்து வைச்சிக்கலாம்.அதோட கீ போர்ட் ஸ்டிக்கர் கூட கிடைக்குது. இது தான் சுலபமானது, ஈஸியானதுன்னும் சொல்றாங்க.இந்த முறைக்குப் பேரு தமிழ்99.
இந்த புதுசா கத்துக்கறதுக்கு எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலை. எனக்கென்னவோ முதல்ல சொன்ன முறையே சரியா இருக்கும்ணு தோணுது. இப்போதைக்கு நீ முதல்ல சொன்ன மாதிரி இருக்கற சாப்ட்வேரையே இன்ஸ்டால் பண்ணு. கம்ப்யூட்டர் நல்லா பழகுனதுக்கப்புறம் தேவைப்பட்டதுன்னா ரெண்டாவது இதுக்கு மாறிக்கறேன்.
சரிப்பா..... டைப் பண்ணிப் பாருங்க..
ம்ம்ம் இதுல சமாளிச்சிக்கலாம்னு தோணுது.
பிகு: இது தமிழ்99 முன்னெடுக்கற நண்பர்களுக்கு எதிரானது இல்லை. உண்மையில நடந்தத்தான் எழுதியிருக்கேன். தமிழ் டைப்பிங், எழுத்துரு குழப்பத்தில ஓடிப்போன நண்பர்களையும் நான் சந்திச்சிருக்கேன். எந்த திட்டத்தை முன்னெடுக்கும் போதும், பழகுறதுக்கு எளிதான திட்டங்களையும் முன் வைக்கணும், வைக்க வேண்டியதிருக்குன்ற காரணத்துக்கு மட்டும் தான் இந்த பதிவு. :)
பிகு2: தமிழ்99 ஏன் சிறந்ததுன்றதுக்கு வாய்ஸ் ஆன் விங்க்ஸ் இட்டிருக்கிற பதிவு
Jan 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இப்பதிவுக்கான எதிர்வினை இரண்டரை வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டு விட்டது. :)
VOW:
நீங்க சொன்னதை மறுக்கலை. நானே தமிழ்99 முறைக்கு மாறுரதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். மொதல்ல வர்ற inertia தான் தடங்கல். இந்த தடங்கல் தான் பிரச்சனையே. இதுக்கு பயந்துக்கிட்டே மக்கள் தெறிச்சி ஓடிடறாங்க. அப்படி ஓடுறவங்களுக்கு ஒரளவுக்கு அஞ்சல் கைகொடுக்கும்னு நினைக்கிறேன். அதுக்காக மட்டும் தான் இந்தப் பதிவு.
சுட்டி கொடுத்ததுக்கு நன்றி. அதையும் பதிவுல இணைச்சிடறேன்
எதையும் புதியதாக கற்றுக் கொள்ளும் போது சட்டென மனதில் பதிந்து, இயக்குவதற்கு எளிதாக இருப்பது எல்லோருக்கும் பிடிக்கும்.
அஞ்சல் முறையின் குறையே அதை தட்டச்சு செய்யும்போது ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டி தட்டெழுதுவது. கொஞ்சநாள் பழக்கத்தில் தமிழ் எழுத்துக்களுக்கு பதிலாக மனதில் ஆங்கில எழுத்துக்களே நிழலாடும். வெளியீடு தமிழாக இருப்பினும் இந்த இரட்டை மனநிலையை ஆதரிக்க முடிந்தால் தாராளமாக அஞ்சல் முறையை பயன்படுத்தலாம்.
தமிழ்99 முறையை கொஞ்சம் முயன்று பழகினால் அஞ்சல் முறையை விட எத்தனை எளியது என்று புரிந்து கொள்ள முடியும். அதில் தமிழை தமிழாகவே எழுதும் திருப்தியும் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு tamil99.org
சிந்தாநதி,
வருகைக்கு நன்றி. நீங்க சொன்னதை நான் மறுக்கப்போறதில்லை. ஏன்னா எனக்குமே அஞ்சலால குழப்பம் இருக்கு.
ஆனா சீனா சொன்ன மாதிரி எதையும் புதியதாக கற்றுக் கொள்ளும் பொழுது சட்டென மனதில் பதிந்து, இயக்குவதற்கு எளிதாக(குறைஞ்சது ஆரம்பத்தில) இருப்பது எல்லாருக்கும் பிடிக்கும்.
புதுசா வர்றவங்ககிட்ட(ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிஞ்ச)தமிழ்ல டைப் பண்றதுக்கு தமிழ்99ன்னு ஒரு டைப்பிங் கத்துக்கணும்னு சொன்னா தெறிச்சி ஓடிருவாங்கன்னு சொல்றதுக்கு மட்டும் தான் இந்த பதிவு.
25 வயதான உங்கள் நண்பர் / பிள்ளை / யாரவது ஒருவருக்கு ஒரு வண்டி பரிசளிக்க நினைக்கிறீர்கள். அவருக்கு cycle தான் ஓட்டத் தெரியும் என்பதற்காக cycle பரிசளிப்பீர்களா, இல்லை, motor bike பரிசளித்து அதைக் கற்றுக் கொள்ளச் செய்வீர்களா?
motor bike ஓட்டக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் ஆகுமோ அவ்வளவு காலம் தான் தமிழ்99 கற்றுக் கொள்ளவும் ஆகும். அதைக் கற்றுக் கொள்ளச் சோம்பேறிப்பட்டால் காலத்துக்கும் cycle ஓட்ட வேண்டியது தான். மேலதிக வசதிகள் எதுவும் குறைந்தபட்ச முயற்சியாவது எடுக்காமல் கிடைக்காது.
இங்கு, motor bike என்று ஒன்று இருக்கிறது என்று அறியாமலேயே பலரும் cycle ஓட்டிக் கொண்டிருப்பது தான் கொடுமையாக இருக்கிறது !!
அனானி,
உதாரணம்னு சொல்லணும்னா நானும் ஒன்னை கண்டுபிடிச்சி சொல்லலாம். இங்க நான் என்ன சொல்றேன், நான் என்ன நினைக்கிறேன்னு சொல்றது முக்கியமில்லை. அதே மாதிரி தான் நீங்க என்ன சொல்றீங்க நீங்க என்ன நினைக்கிறீங்கன்றது முக்கியமில்லை.
தமிழ் டைப் பண்ண தெரியலைன்னா அது கேவலம்னு நினைக்கிறவன் வேணா புதுசா கத்துக்கறதுக்கு முயற்சி பண்ணலாம். மத்தபடி எனக்கு தெரிஞ்சவுங்கள்லயே தமிழ்ன்னாலேயே அலர்றாங்க. அவங்க கிட்ட நாட்டுக்கோழி அடிச்சி குருமா வைச்சி சாப்பிடுறதில இருக்கற டேஸ்டு KFC ல வாங்கிச் சாப்பிடுற சிக்கன்ல இருக்காதுன்னு சொன்னா சிரிச்சிட்டே சரி நீயே பண்ணி சாப்பிட்டுக்கோன்னு சிரிச்சிட்டே போயிருவாங்க.
தமிழ்99 நிச்சயமா தேவை தான். அதுல எனக்கு எந்த மறுப்புமில்லை. அதுக்காக வர்றவன் மிரள்ற அளவுக்கு திணிக்கத் தேவையில்லை.
உங்கள் இடுகையின் url முகவரியில் tamil-typing-my-2-cents என்று வருவது எப்படி? wordpress post slug போல் ப்ளாகரிலும் ஏதாவது இருக்கிறதா? இல்லை, கட்டணப் பயனர்களுக்கு மட்டுமா?
உடுக்கையாரே இங்கே யாரும் திணிக்கிற மாதிரி தெரியலையே?
நான் முதலில் தமிழ் எழுதியது விண்டோஸ் கணினியில் இருக்கும் இன்ஸ்கிரிப்ட் தட்டச்சு கொண்டு தான். கிட்டத் தட்ட ஒரு வருடம் அதைப் பழகிய பிறகு ஒரே நேரத்தில் அஞ்சலும் தமிழ்99 ம் கிடைத்தது. இரண்டையுமே முயன்றேன். எது சரியானது, எளியது என்று ஒரு தெளிவு கிடைத்தது. அது போல முயன்று பார்த்து விட்டு தேர்ந்தெடுக்க எல்லோருக்கும் உரிமை உண்டு... முயன்று பார்க்காமலே ஓடிப் போனால் என்னதான் செய்ய முடியும்? இரண்டையுமே பயன்படுத்திப் பார்த்தவர்கள் தான் இது நல்லது என்று அனுபவப் பூர்வமாக சொல்கிறோம். முயன்று பார்ப்பதும் சரி விட்டு விடுவதும் சரி அவரவர் விருப்பம், வசதியைப் பொறுத்தது.
இரண்டையும் முயன்று பார்த்தபின். இல்லை...தமிழ்99ஐ விட அஞ்சலே மேலானது என்று சொன்னவர்கள் இதுவரை இல்லை ;)
முயன்று பார்க்காமலே அது இதைவிட சிரமமானது என்று நினைப்பது தவறு.
//வர்றவன் மிரள்ற அளவுக்கு திணிக்கத் தேவையில்லை.//இதை நீங்க எதை வெச்சு சொல்றீங்க என்று சொன்னால் நலம். யார்? எங்கே திணித்தார்கள்?
அப்படி மிரண்டு ஓடிப் போனவர்கள் யார்?
ரவி, முதல்ல தலைப்பை இங்கிலீஸ்ல டைப் பண்ணி இடுகைய வெளியிடுங்க. அதுக்கப்புறம் தலைப்ப தமிழுக்கு மாத்திருங்க. இப்ப உங்களோட url இங்கிலீஸ்ல இருக்கும், தலைப்பு தமிழ்ல இருக்கும்.
ஏற்கனவே நம்ம மக்கள் நிறைய பேரு உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்களே!!
ஆனா இதுல வேற சில பிரச்சனைகள் இருக்கலாம்னு நினைக்கிறேன். இன்னும் சரியா சோதனை செஞ்சி பாக்கலை. வேணும்னா பாத்துட்டு சொல்றேன்.
சிந்தாநதி:
:)
தமிழ்ல டைப் பண்றதுக்கு பயந்துக்கிட்டே வலைப்பதிவு ஆரம்பிச்சிட்டு அப்புறமா காணம போனவங்க நண்பர்கள் வட்டத்தில இருக்காங்க. :)
ஓ..இந்தக் குறுக்கு வழி தோணாமப் போயிடுச்சு :) இதில் பிரச்சினைகள் என்று ஏதும் நீங்கள் கண்டால் அது பற்றி ஏதாவது இடுகையில் குறிப்பிடுங்கள். அது வரைக்கும் இது நல்ல குறுக்கு வழி தான்.
பிறகு, தமிழ்99ஐப் பார்த்து மிரண்டு யாரும் வலைப்பதிவில் தமிழ் எழுதாமல் போவார்கள் என்று நினைக்கவில்லை. அப்படி நினைப்பவர்கள் அஞ்சலிலாவது எழுதலாமே?
தமிழ்99ஐ யாரிடமும் திணித்து மிரள வைக்கக்கூடாது.யாரும் அப்படிச் செய்வதும் இல்லை. ஆனால், தமிழ்99குறித்த முறையான அறிமுகம், விழிப்புணர்வை முதலிலேயே தரத் தவறுவதால் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று தெரியாமலேயே அஞ்சலில் தொடர்பவர்கள் நிறைய. தெரிந்தும், அஞ்சல் பழகி விட்டதால் அதை விட்டு மாற சோம்பி, தயங்கி இருப்பவர்கள் நிறைய. அதனால் தான் தமிழ்99 குறித்து முதலிலேயே ஒரு அறிமுகத்தைத் தந்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது.
Post a Comment