Jan 7, 2008

கக்கூஸ் டெக்னாலஜி

நம்மூர்ல இருக்கற கட்டணக் கழிப்பறைகள்ல மூக்க மூடிக்கிட்டு எதையும் கண்டுக்காம ஒன்னுக்கு அடிக்கவோ இல்ல மலம் கழிக்கவோ செஞ்சிட்டு வந்துடறோம். ஒரு சில இடங்கள்ல தவிர்க்கவே முடியாம உபயோகப்படுத்திட்டு வாழ்க்கையே வெறுப்பானதும் உண்டு. இங்க எல்லா இடங்கள்லயும் நல்லா சுத்தமாவே வைச்சிருக்காங்க. இருந்தாலும் இங்க இருக்கற வெஸ்டர்ன் டாய்லட்னு நம்மூர்ல சொல்ற கக்கூஸ்கள்ல மலம் கழிக்கணும்னா ஒரு தட்டு மேல உக்காந்து தான் இருக்கணும். பரபரப்பா இயங்குற விமானநிலையம் மாதிரி இடங்கள்ல ஏற்கனவே ஒருத்தர் உக்காந்த இடத்துமேல உக்காந்து மலம் கழிக்கறதுக்கு கொஞ்சம் நெருடலாவே இருக்கும். அதுக்காக புதுசா ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைச்சிருக்காங்க. இந்த வடிவமைப்பு படி நாம உக்கார்ற கோப்பை மேல ஒரு சிறப்பு பூச்சை கொடுத்துட்டா, சமீபத்தில அந்த கழிப்பறைய யாரும் உபயோகப்படுத்தியிருக்காங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம். இந்த சிறப்பு பூச்சு தெர்மோகுரோமிக்(thermochromic)ன்ற பொருளால ஆனது. இந்த பொருளோட சிறப்பு, வெப்பத்துக்கு தகுந்தமாதிரி தன்னோட நிறத்தை மாத்தறது தான். இந்த வடிவமைப்போட படம் தான் கீழ இருக்கறது.


மூலம்: Canadiandesingresource

3 comments:

cheena (சீனா) said...

அய்யய்யே - தெரிஞ்சு என்ன செய்யப் போறோம் - போகப் போறோமா ஓடப் போறோமா - எதுக்கு இது - என்ன பயன் - பொழுது போகாம டிசைன் பண்ணூறானுங்க காசுக்காக

- உடுக்கை முனியாண்டி said...

இங்க இருக்கற கக்கூஸுகளுக்கு இது வேகமா வர்றதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. இங்க உள்ளவங்களுக்கு இந்த மாதிரியான தேவைகள் இருக்கு.
இந்தப் பக்கமா வந்ததுக்கு நன்றிங்க.

ram said...

ஆமாம்

தெரிஞ்சுகிட்டா என்ன பயன்
பல பொது இடங்களில்
பலர் பயனித்த இருக்கைகளில்
தான் உட்கார்ந்து ஜாப் பண்ணுறோம் அதில் என்ன தவறு கண்டுகிட்டீங்க?
வீட்டில் எல்லோரும் அதே மாதிரி வெஸ்டர்ன் டாய்லட்டில் உட்கார்ந்துதானே ஒன்னுக்கோ ரெண்டுக்கோ
செய்யுறோம்?

எனக்கு இதனால் என்ன அட்வான்டேஜ்னு புரியலை

இண்டி