Jan 7, 2008

டொட்டடொயிங் -2: கிழக்கு பதிப்பகத்தின் ஆளப்பிறந்தவர்கள்

அது பத்தாவதுக்கான வகுப்பறை. அன்னைக்கு ஆய்வு நாள். சாதரணமா ஆய்வு அன்னைக்கு ஆய்வாளர்கள் வந்து பசங்க எப்படி படிக்கறாங்கன்னு சோதனை பண்ணுவாங்க. இதுக்காக பள்ளிக்கூடம் முழுசுமே எதோ திருவிழா மாதிரி ஜே ஜேன்னு இருக்கும். எங்களுக்கு ஆய்வாளர் வந்த நேரம், சமூக அறிவியல் பாடம் நடந்துக்கிட்டிருந்தது. வந்தவரு ஆர்வமாகி, இந்தியாவின் முதல் ஜனாதிபதி யாருன்னு கேட்டுட்டாரு. என்னைக் கேட்டிருந்தா அது நான் இல்லைன்னு சொல்லியிருக்கலாம். கேக்கப்பட்ட பையன் அப்டியே எந்திரிச்சி நிக்கிறான். போனதுக்கப்புறம் வாத்தியாரு விட்டாரு டோசு. ஏண்டா உனக்கு முதல் ஜனாதிபதி தெரியலைன்னு இப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்குன்னு சொல்ல வேண்டியது தான அப்டிங்கறாரு. இப்டித்தான் நான் வரலாறு படிச்சி வந்திருக்கேன்.

சரி அப்ப அப்படி இருந்துச்சி. அதுக்காக நம்ம வரலாற்று அறிவை அப்படியே வைச்சிக்கலாமா. கொஞ்சமாவது முன்னேத்தவேணாமான்னு தோணுனப்ப சிக்குனது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கற "ஆளப்பிறந்தவர் நீங்கள்" ன்ற புத்தகத்தோட அட்டை. யார் யாரையெல்லாம் கண்டு பிடிக்க முடியுதுன்னு முயற்சி பண்ணினேன். ஏதோ கொஞ்சம் முடிஞ்சது. ஒரு சிலது கண்டு பிடிக்க முடியலை. அட்டைப் படத்துக்குக் கீழ எந்த முகங்களையெல்லாம் கண்டுபிடிக்க முடியலைன்னு போட்டிருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

இதுல யாரோட படம் இல்லை, ஏன் இல்லைன்ற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இங்க வராதீங்க.




என்னால முடியாதது கீழ இங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

வரிசை 1- 5வது படம்
வரிசை 2- 2
வரிசை 5- 2 (ரஷ்புதின்?),3 (தாட்சர்?),5
வரிசை 7- 1,3

பொழுது போகாத இந்த விடுமுறையில இத விட நல்ல விளையாட்டு என்ன இருந்திருக்கும் சொல்லுங்க.

9 comments:

cheena (சீனா) said...

நான் ஆளப் பொறக்கலே - தலைமை தாங்கவும் தயார் இல்ல - அதனாலே நோ கமெண்ட்ஸ்

Anonymous said...

வரிசை 1- 5வது படம் Sujatha (writer)?
வரிசை 2- 2 MS Subbalakshmi
வரிசை 5- 2 (ரஷ்புதின்?),3 Margaret Thatcher (தாட்சர்?),5
வரிசை 7- 1,3

- உடுக்கை முனியாண்டி said...

சீனா, :)

அனானி, இதுக்கு கூட அனானியா தான் வரணுமா. :)

சுஜாதாவா??

வரிசை 2- உங்க கணக்குபடி படம் 1

Anonymous said...

Search the names in google image you will find among b/w photos :)

- உடுக்கை முனியாண்டி said...

சவரணகுமார் said

லைனு ஒன்னு சத்தியயித்துராயி


லைனு தச்சருக்கு இந்தப்புறம் டோல்சுடோய் அந்தப்புரம் லீயி குவானு லீயி

ஏழாம் வரிச மூஞ்சியிலே தலைமை தாங்க்குன்னு வைட்வாஸ் போஸ்டர் அடிச்சிருக்காங்களே. மூஞ்சியே பேஸ்த்தடிச்சு கீது. என்னோடதும் ஒங்களோடதுமோ தெரியல்லே

கொசுறா கருமவீரரு காமராசுவுக்கும் டெரரிச்சு பிரபாகரனுக்கும் நடுவுல கீறது ************ ? அட நரேந்திரா! சூப்பரா கீது

ஏம்பா உடுக்கை. பெரியாரு, அண்ணா, கருணா இவுங்களவுட அம்மா, மணி, சங்கரு ... வேணாம் உட்டுடு. ஏதாச்சும் சொல்லிடுவேன். இதுல இலசவத்துல வெளம்பரம் வேற குடுக்குற நீ.. சே!

- உடுக்கை முனியாண்டி said...

அனானி, அது சுஜாதா இல்லீங்க. சத்யஜித்ரே.

சவரணகுமார்: நன்றிங்க.

Sridhar V said...

வரிசை 1- சத்யஜித் ரே (நீங்களே சொல்லிட்டிங்க)
வரிசை 2- 2 நீங்க அப்புறமா '1'ன்னு மாத்தியிருக்கீங்க... அது முகமது அலி ஜின்னா
வரிசை 5- 2 (ரஷ்புதின்?),3 (தாட்சர்?),5
வரிசை 7- 1,3 - வாரன் பஃபட். 3-யாருன்னு சரியா தெரியல

- உடுக்கை முனியாண்டி said...

ஜின்னாவை எப்டி யோசிக்காம விட்டேன்னு தெரியலை.

நன்றிங்க ஸ்ரீதர்

Voice on Wings said...

ஆண்டவங்க வேற, ஆளப் 'பொறந்தவங்க' வேறன்னு புரிஞ்சிக்கறேன் :)