Mar 12, 2007

குழந்தைகளுக்கு ஏனிந்த நிறப் பாகுபாடு !!!!

நண்பரோட குட்டிக்குழந்தைக்கு துணி எடுக்க போயிருந்தோம். குட்டீஸ் பிரிவுல இருந்த துணியெல்லாம் ரெண்டே ரெண்டு கலர்லதான் இருந்தது. ஒன்னு புளு இன்னொன்னு பிங்க். மீதிக் கலர்லாம் இல்லைன்னு கூட சொல்லலாம. அந்தளவுக்கு கம்மி. இதுவே எனக்கு அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருந்தது. நண்பர்ட்ட இதைப்பத்தி கேட்டா பையனுங்கன்னா புளு கலர், பொண்ணுங்கன்னா பிங்க் கலர் அப்டின்னாரு. கடையில எனக்கு பிடிச்ச டிசைன்லாம் புளு கலர்ல தான் இருக்கு. ஆனா நாம நினைச்ச மாதிரியெல்லாம் இங்க டிரெஸ் மாட்டி விடக்கூடாதுன்னுட்டாரு.

எனக்கு இன்னும் இந்த வித்தியாசம் விளங்கமாட்டேங்குது. ஒரு குழந்தைக்கு என்ன கலர் டிரெஸ் நல்லா இருக்கோ அதை மாட்டி விடலாம்ல. இல்லை கலருக்கு ஒன்னா போட்டு விடலாம்ல. அதை விட்டுட்டு இது என்ன திருகுதாளம்னு தெரியலை. குழந்தையை ஆண்/பெண்ணுன்னு வித்தியாசப் படுத்தி காட்டணும்ன்றதுக்காக இப்டியெல்லாம் பண்றது சரியா தெரியலை.






இந்தியாவுல இந்த மாதிரி வம்பெல்லாம இல்லைன்னு நினைக்கிறேன்.குறைஞ்ச பட்சம் எனக்கு அந்த மாதிரி அனுபவம்லாம் இல்லை. ஏன்னா நாலு வயசு வரைக்கும் "free bird" தான்.

சரி, எதுக்காக இந்த கூத்தெல்லாம் பண்றாங்கன்னு தேடுனா வர்ற விபரம் பெரிய கூத்தா இருக்கு. இந்த கலர் கண்ணாமூச்சியெல்லாம் இப்ப சமீபத்தில 20ம் நூற்றாண்டுலருந்து தான் ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும் முதல்ல பையன்களுக்கு பிங்க் பொண்ணுங்களுக்கு புளுன்னு பிரிச்சிருக்காங்க. அவங்க அப்ப பிரிச்சதுக்கு ஒரு கதை வேற கட்டி வைச்சிருக்காங்க. . பிங்க் கலர், சிவப்பை வெளிற வைக்கிறதினால வருது. சிவப்புன்றது தெளிவு, வீரம், கோபம் இதைக் குறிக்குதாம். அதனால இது ஆணுக்காம். புளு கலர் அமைதியைக் குறிக்குதாம். அதனால இது பெண்ணுக்காம்.

இந்த நடைமுறைக்கு என்ன ஆச்சின்னு தெரியலை. திடீர்ன்னு பாத்தா இரண்டாம் உலகப் போருக்கப்புறமா இது அப்டியே உல்டாவாக்கிட்டாங்க. இப்ப வந்து ஆண்களுக்கு புளு, பெண்களுக்கு பிங்க்.

எவனுக்கோ என்னவோ ஆகி ஏடாகூடமா எதாவது பண்ணுனா அதை அப்டியே காப்பியடிக்கிறது நல்லாவா இருக்கு.

நம்மூர்ல மட்டும் தான் சுடலை மாடனும் அய்யனாரும் யாருக்குமே தெரியாம சிவனுக்கு சொந்தக்காரணாவங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இந்த கலர் கலட்டாவைப் பாத்தா இந்த மாதிரி திருகுதாளம் எல்லா ஊருலயும் இருக்கும் போலருக்குது.

கலர் கலரா கலக்கவேண்டிய குழந்தைங்க தான் பாவம்!!!!

12 comments:

Anonymous said...

ஆமா, பெரியவன்க மட்டும் ஏன் அப்படிப் போட்டுக்கறாங்கன்னு நினைத்ததே இல்லயா?


ச்சூ!!


sarah

துளசி கோபால் said...

கலரு மட்டுமா? வெளையாட்டுச் சாமான்களைக்கூட பொண்ணுக்கு வேற,
ஆணுக்கு வேற பிரிச்சு வச்சுட்டானுங்கப்பா(-:

ஒரு ரெண்டரை வயசுப் பெண் குழந்தை முதுகுலே தொங்கற பையிலே ஒரு பொம்மைக்
குழந்தை உக்காந்துருக்கு.


எங்கே போய் முட்டிக்குவேன்(-:

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் புரியாத கான்செப்ட்.
ஆஸ்பத்திரி பலூன் கூட புளூதான்னா பாருங்களேன்.
கடையிலே போனா ரெட் போடலாம்னு சொன்னாங்க.பேரனுக்கு வாங்கி வந்தோம்.இந்த ஊரு நம்மளைவிட (மூட) நம்பிக்கை சாம்ராஜ்ஜியம் நடத்துவாங்க போல

Anonymous said...

அமெரிக்காவுல ஆண் ப்ங்க் கலர் போட்டுகிட்ட அவன் ஹோமோவாம். என்ன எழவோ. பிங்க் கலர் சட்ட ஊர்லயிருந்து வாங்கியந்து அப்படியே பெட்டியில தூங்குது....

- உடுக்கை முனியாண்டி said...

நண்பர்களே இந்தப் பக்கம் வந்ததுக்கு நன்றி.

சாரா.. உண்மையிலேயே அதை நான் கவனிச்சதில்லை. பெரியவங்களுக்கும் இந்த டிரெஸ் கோடு இருக்கறது இந்த பிரச்சனைக்கப்புறமா தான் தெரியும்.

துளசி, இதுவும் ஒரு மாதிரி குழந்தைகள் மீதான வன்முறை தான். நம்மூர்ல ஒரு மாதிரியான வன்முறைன்னா இங்க வேற மாதிரியான வன்முறை.

வல்லிசிம்ஹன், இந்த கூத்தெல்லாம் எங்க போய் சொல்றதுன்னு தெரியலை

அனானி, என்னத்த சொல்றது :((

Thangamani said...

குழந்தைக்கு எந்தக் கலர் பிடிக்கும்?

ஆம்பளைப்புள்ள அழக்கூடாது; பொம்பிளைப்பிள்ளை மரமேரக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி அது எப்படி சில விதயங்களை முடக்கிட்டுதோ அப்படி பையனுக்க்ம் புளுதான் பிடிக்கும்.

:((

- உடுக்கை முனியாண்டி said...

தங்கமணி :)))

குழந்தையை அடிக்கறது பெரிய குற்றம், குழந்தைகளுக்குன்னு தனி உரிமை இருக்குன்னு சொல்ற இந்த ஊர்ல தான் குழந்தைகள் மீதான மறைமுக வன்முறை அதிகம்னு தோணுது. ரொம்ப தெளிவா சொல்றதை மட்டும் செய்யறதுக்கு நிறைய வழி பண்ணி வைச்சிருக்காங்க. :(((

எங்க அம்மா அடிச்சா தாத்தாவைக்கூட்டிக்கிட்டு போய் நியாயம் கேட்டதெல்லாம ஞாபகத்துக்கு வருது!!!!!

Anonymous said...

தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/13/dresscolour/

பத்மா அர்விந்த் said...

இப்போதெல்லாம் மெட்ரோ செக்ஸுவல் என்று எல்லாமே மாறிவருகிறது. நீலம் ஆண்கள், பிங்க் பெண்கள் என்பது வருத்தமானது. அந்த வகையில் பல இடைபட்ட நிறங்களை பிடிவாதமாக பயன்படுத்துபவர்களும் உண்டு. ஒரு காலத்தில் ஷாம்பு, சோப், வாசனை பொருட்கள் எல்லாவற்றிலும் பெரிய இடைவெளி இருந்தது. இது மக்களின் தன்மையைவிட அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், ஊடகங்கள் இவற்றின் பங்கே அதிகம். இன்னும் சிலகாலத்தில் மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி டுபுக்கு..

பத்மா, இது ஒரு நுட்பமான விதயம்ன்றதனால அவ்வளவு சீக்கிரம் மாறும்னு எனக்கு தோணலை.
மெட்ரோ செக்ஸுவல், எனக்கு புது வார்த்தை. நன்றி பத்மா.

பத்மா அர்விந்த் said...

இன்னும் சில வருடங்களில் மாறும் என்றே நினைக்கிறேன். ஆண்களும் பெடிகியுர், மனிக்யுர் செய்யறது புருவத்தை திருத்திக்கிறது இதெல்லாம் ஒருவரது திருத்தமான தோற்றத்தை தரும்னு MBA முடிக்கும் போது கடைசியில் சொல்லித்தருவாங்க. நியுயார்க் போன்ற நகரங்களில் அது வளர்ந்து வருது. அதே மாதிரி பின்க் சட்டை போட்ட ஆண்கள் ஹோமோங்கிறதைவிட சில பெண் அமைப்புக்களுக்கு ஆதரவு காட்ட, மார்பக புற்று நோய் பரவுவதை தடுக்க அப்படின்னு பல விஷயத்துக்காக நடக்குது. இதை விளக்கமா எழுத தோணாம யாராவது அது ஹோமோ அப்படின்னு எழுதினா நான் பொதுவா கண்டுக்கிறதில்லை. மெட்ரோசெக்சுவல் பத்தி PBS, BBC ல ஒரு விவாதம் நடந்துது. அதையும் விட சமீபத்தில IDC நடத்தின ஒரு கருத்துக்கணிப்பில பல குடும்ப தலைவிகள் ஆணுக்கு ஒன்னு பெண்ணுக்கு ஒன்னு சோப்பு ஷாம்பு வாங்கறது ரொம்ப நேரமாகுது, பாத்ரூமெல்லாம் நிறைய சாமானா கிடைக்குதுன்னு சொன்னதால சில நிறுவனங்கள் unisexக்கு சாமான் செய்ய, யுனிசெக்ஸ் தலையலங்கார கடை எல்லாம் வர ஆரம்பிச்சிருக்கு.சீருடை இருக்கிற பள்ளிகளில் மஞ்சள், வெள்ளை, சிகப்புக்கு மாறிட்டாங்க. அதனால சில வருஷங்களில் மாற்றம் வரலாம்.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி பத்மா.
இப்படியான வித்தியாசங்கள் மறையணும்ன்றது தான் என்னோட விருப்பம்.

நீங்க சொல்ற மாற்றங்கள் சீக்கிரமா நடந்தா நல்லது.